Thursday, 8 November 2018

அமெரிக்காவுக்கும் பாடம் கற்பிக்கும் மோடி,-

அமெரிக்காவுக்கும் பாடம் கற்பிக்கும் மோடி,-

அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடி பணியாது .
இந்தியா வந்துள்ள ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினோடு ஒரு மிகப் பெரிய ஆயுத டீலிங்கை
முடித்துள்ளார் மோடி ..அவரின் தேசபக்தி மற்றும் துணிச்சலுக்கு ஒரு சல்யூட்..

சமீபத்தில் ரஷ்யா ஈரான் வடகொரியாவுடன் ஆயுதக் கொள் முதல் உட்பட வர்த்தக உறவு வைத்துக்கொள்ளும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வகை செய்யும் சட்டம் (சிஏஏடிஎஸ்ஏ) அமெரிக்க நாடாளும ன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.

இருந்தாலும் இந்த சட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவு எடுக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.ஒரு வேளை ரஷ்யா ஈரானோடு இந்தியா வர்த்தக ஒப்பந்தம் வைத்துக் கொண்டாலும் இந்த சட்டத்தின்
படி இந்தியாவை கண்டு கொள்ள மாட்டார்கள்.

இருந்தாலும் மிரட்டித்தான் பார்ப்போமே என்று
இந்தியாவை  ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ட்ரயம்ப்
என்கிற டாங்கிகளில் வைத்துக்கொண்டு வானில்
வரும் அதி நவீன போர் விமானங்களை துல்லிய மாக வீழத்த கூடிய ஏவுகணைகளை வாங்க கூடாது
என்று மிரட்டி பாரத்தது அமெரிக்கா.

இந்த எஸ் 500 ட்ரயம்ப் ஏவுகணைகள்  அமெரிக்கா வின் எப்.-35 போன்ற ஐந்தாம் தலைமுறை விமான ங் களை கூட அவை  400 கிலோ மீட்டர் தொலைவு க்குள் சுமார்  30 கிலோ மீட்டர் உயரத்துக்குள் எங்கு
தென் பட்டாலும்  தரையில் இருந்தே அழிக்கும் வல்லமை கொண்ட து..அமெரிக்காவின் 5 ம்
தலைமுறை விமானத்துக்கே இந்த கதி என்றால்
சீனாவின்  5ம் தலைமுறை  போர் விமானமான செங்குடு ஜே-20 ரக போர் விமானம் எல்லாம் இந்த
எஸ்- 500 ஐ பாரத்தாலே உச்சா  போய்விடும்.

ஏனெனில் இதில் உள்ள ஒரே கருவியில் 8 லாஞ்சர ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.இதன் மூலம் 16 ஏவுக ணைகளை உடனடியாக ரீ-லோட் செய்து  400 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 30 கிலோ மீட்டர் உயரத்து க்குள் இருக்கும் 36 இலக்குகள் மீது ஒரே நேரத்தில் தாக்கி அழிக்க முடியும்.

எஸ்-400 ட்ரயம்ப் ஏவுகணைகளில் உள்ள ரேடார் ளின் மூலம் சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் வரும்  விமானங்களை கூட கண்டுபிடித்து சுமார்
400 கிலோ மீட்டர் தொலைவில் அந்த விமானம் இருக்கும் பொழுது 123....கவுண்டவுன் சொல்லி
கண்ணிமைக்கும் நேரத்தில்  மணிக்கு 17000 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று அழிக்க முடியும்..

ரஷ்யா விடம் இருந்து இந்த ஏவுகணைகளை 2016
ல் சீனா வாங்கி விட்டது. இந்தியா இரண்டாவதாக
வாங்க இருக்கிறது. என்ன தான் மோடி அமெரிக் கா வோடு நட்பு பாராட்டினாலும் இந்தியாவின் பாதுகா ப்பு என்று வரும் பொழுது எந்த ஒரு சமரசத்துக்கும்
அடிபணிய மாட்டோம் என்று  எஸ்-400 ட்ரயம்ப் ஏவுகணைகளை ரஷ்யாவிடம்இருந்து வாங்கி
ட்ரம்ப்பை மூடிட்டு போய்யா  என்றுள்ளார் மோடி

சுமார் 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வாங்க ப்படும் இந்த ஏவுகணைகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்திய ராணுவத்தின் பயன் பாட்டு
க்கு வந்து விடும்.. ஏற்கனவே ரபேல் விமான
டீலிங்கில் காங்கிரஸ் வெறும் 60 ஆயிரம் கோடி
டீலிங்கில் 1 லட்சம் கோடி ஊழல் என்று உளறி
வந்தாலும் அதைக்கண்டு கொள்ளாது அடுத்து
ஒரு 39.000 ஆயிரம் கோடியில் ரஷ்யாவுடன் ஒரு
மிகப்பெரிய ஆயுத டீலிங்கை முடித்து  மோடி் மடியில்
கணம் இருந்தால் தானே பயப்படுவதற்கு என்று
மக்களுக்கு உணர்த்தியுள்ளார்.

இந்த  எஸ்-400 ட்ரயம்ப்  ஏவுகணைகள் மட்டுமின்றி  4 கிரிகோரிவிச் போர்க்கப்பல்கள்  அடுத்து காமோவ்- 226 டி என்கிற ஸ்மால் ரேஞ்ச் ஹெலி காப்டர்கள் 200  என்று  ஒட்டு.மொத்த மாக சுமார் 67.000 கோடி மதிப்பில் ரஷ்ய அதிபர் புதினோ டு டீலிங் முடித்துள்ளார் மோடி..

இதில் சிறப்புஅம்சம் என்னவென்றால் காமோவ்- 226 டி  ஹெலிகாப்டர்கள் ரஷ்ய தொழில்நுட்ப த்துடன் இந்தியாவில் வைத்தே இந்தியன் ஏரோ னெட்டிக்ஸ் லிமிடெட்என்கிற அரசு நிறுவனத்தின் மூலமாகவே மேக் இன் திட்டத்தின் மூலமாக உருவாக்க ப்பட இருக்கிறது..இது ஏதோ ரபேல்
டீலிங்கில் உண்டான விமர்சனங்களால் உருவானது
அல்ல..மாறாக மோடி 2016 ல் ரஷ்யாவுக்கு சென்று
இருந்த பொழுது உண்டான திட்டம் இது.

எனவே ரஷ்யா வோடு ஆயுத டீலிங்கை வைத்துக்
கொண்டால் பொருளாதார தடை விதிப்போம்
என்கிற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிரட்டலை
கண்டு கொள்ளாது ரபேல் டீலிங்கை விட மதிப்பு வாய்ந்த  டீலிங்கை ரஷ்யாவோடு  செய்து முடிந்தால் தடை விதித்து பார் என்று  ட்ரம்புக்கு எதிர் சவால் விடுத்துள்ளா் மோடி..

அதுமட்டுமின்றி ரபேல் டீலிங்கை விட  அதிக மதிப்பில் ரஷ்யா வோடு ஆயுத டீலிங்கை மோடி
செய்ததன் மூலமாக நான் நேர்மையானவன். அதனால் என்னால் எந்த ஒரு துணிச்சலான முடி
வையும் எந்த ஒரு சூழ்நிலையிலும் எடுக்க முடியும் என்று நாட்டு மக்களுக்கு மீண்டும் உணர்த்தியுள் ளார் மோடி..
  .

.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...