Thursday, 8 November 2018

தேசத்தினிடமிருந்து எடுப்பவன் அரசியல் வாதி. - தேசத்திற்கு கொடுப்பவன் தேசிய வாதி." -

"அடுத்த தேர்தலை நினைப்பான் அரசியல் வாதி.
அடுத்த சந்ததியை நினைப்பான் தேசிய வாதி." -

"தேசத்தினிடமிருந்து எடுப்பவன் அரசியல் வாதி.
தேசத்திற்கு கொடுப்பவன் தேசிய வாதி." -

இவை பசும்பொன் தேவர் அவர்கள் உதிர்த்த முத்துக்கள் -

இந்தப் பொன்மொழிகளுக்கு இலக்கணமாக வாழ்ந்து வருபவர் தான் நமது பாரதப் பிரதமர் மோடி -

பிதாமகர் வாஜ்பாய் அவர்கள் கூட அப்படிப்பட்ட ஆட்சியைத் தான் கொடுத்தார்கள் -

ஆனால் 2004-ல் அவரைத் தோற்கடித்த மக்கள் -
அதன் பின் 10 ஆண்டுகள் சோனியா வழிகாட்டுதலில் மண்ணு மோகன் தலைமையில் ஒரு கேடுகெட்ட ஊழல் ஆட்சியை கொண்டு வந்தார்கள் -

அதன் பின் 2014-ல் பாரதப் பிரதமராக நமது மோடி அவர்கள் நான்காண்டுகளாக ஊழலற்ற நேர்மையான ஒரு நல்லாட்சியைத் தந்து கொண்டிருக்கிறார் -

உண்மையில் அடுத்தடுத்து தாம் பிரதமராக வேண்டும் என்று அவர் தேர்தல் அரசியல் செய்திருந்தால் -

சில கடிணமான ஆனால், தேவையான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தே இருக்க மாட்டார் -

இங்கே, கலர் டிவி, மிக்ஸி கிரைண்டர் கொடுத்து வாக்காளர்களைக் கவர்ந்தது போல நாடு முழுவதும் கொடுத்திருப்பார் -

ஆனால், அவர் ஏன் பண மதிப்பிழப்பு கொண்டு வந்தார்?-,
அவர் ஏன் GST கொண்டு வந்தார்?-
அவர் ஏன் ஆதார் இணைப்பைக் கொண்டு வந்தார்?-

பண மதிப்பிழப்பைக் கொண்டு வரும் பொழுதே அவருக்குத் தெரியாதா?-
இதனால் சில காலம் மக்கள் சிரமப்பட நேரிடும் -
அதனால் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றெல்லாம் அவர் சிந்திக்கவே இல்லை -

ஏனென்றால் அவர் தேவர் அவர்கள் அன்றே கூறியது போல -
தேதத்திற்காக உழைப்பவர் தேர்தலை நினைத்துக் கவலைப்பட மாட்டார் -

எல்லாக் கட்சிகளும் எல்லா ஊடகங்களும் திட்டம் போட்டு இவரது நடவடிக்கைகளை, உண்மையான நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்காமல், -
பொய்யான பரப்புரைகளையே செய்து இவரை மீண்டும் வரவிடாமல் செய்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள் -

பணமதிப்பிழப்பு பற்றி நான் பல முறை பதிவிட்டிருந்தாலும் ஒரு குட்டிக் கதை மூலம் எளிதாக விளக்க முயற்சி செய்கிறேன் -

ஒரு கூட்டுக் குடும்பம் அதில் மொத்தமாக ஒரு பத்து அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் -

அந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான பல தொழில்களை ஒவ்வொருவரும் தனித்தனியாக நிர்வாகம் செய்து -

வருமாணத்தை சரியாக மூத்த குடும்பத் தலைவரிடம் ஒப்படைத்து விட வேண்டும் -

அவர் அதை வைத்து குடும்பத் தேவைகளை கவனித்து வருவார் -

இந்த நிலையில் தம்பிகளில் இரண்டு பேர் தொழிலில் வரும் வருமாணத்தில ஒரு பகுதியை மற்றவர்களுக்குத் தெரியாமல் திருடித் திருடி பதுக்கி வைக்க ஆரம்பிக்கின்றனர் -

இன்னும் இருவர் நேரடியாக கள்ள நோட்டுக்களை அச்சடித்து பதுக்கி வைத்துக் கொள்கின்றனர் -
இவை எதுவுமே ஒருவருக்கும் தெரியாது -

வீட்டிலிருக்கும் மற்றவர்கள் தங்கள் உழைப்பிற்குத் தகுந்த வாழ்க்கை, சாதாரணமான உணவுகளை சாப்பிட்டு வரும் வேளையில் -

இவர்கள் நால்வர் மட்டும் ஆடம்பரமாக நட்சத்திர விடுதிகளிலும், சொகுசுக்கார்களில் சுற்றி வந்து -
யாருக்கும் தெரியாமல் பல சொத்துக்களையும் கம்பெனிகளையும் ஆரம்பித்து வாழ்கிறார்கள் -

இந்த நிலையில் குடும்பத் தலைவருக்கு லேசாக சில விபரங்கள் தெரிய வர-

குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் பழைய ரூபாய்கள் இனிமேல் செல்லாது, அனைவரும் தங்களிடம் இருக்கும் நோட்டுக்களை மாற்றி புதிதாக பெற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டு விட்டார் -

இப்பொழுது குடும்பத்தில் நேர்மையாக இருந்த அந்த ஆறு பேரும் எளிதாக தங்கள் நோட்டுக்களை மாற்றி விட்டனர் -

அந்த முதல் இரண்டு திருடர்கள் தேள் கொட்டியது போல் நெளிந்து வேறு வழியில்லாமல் பதுக்கி வைத்த பணத்தை வங்கியில் செலுத்தி கணக்கில் வரவு வைத்து விட்டார்கள் -
ஆனால், அவர்கள் செய்த தவறு குறித்து விசாரனை நடந்து வருகிறது -

கள்ள நோட்டுகள் வைத்திருந்த அந்த இரண்டு பேரும் தங்கள் நோட்டுக்களை மாற்ற முடியாமல் வீனாக தீ வைத்து எரித்து விட்டார்கள் -

இப்பொழுது புரிகிறதா -

இது அந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை அல்ல -

இந்த தேசம் பற்றிய கதை -

அந்த ஆறு அப்பாவிகள் தான் நாம் -

நம்முடைய பணத்தை சுரண்டித் தின்றவர்கள் தான் மத்த நான்கு பேரும் _

இப்பொழுது -

18 லட்சம் வங்கிகணக்குகள் வருமான வரி துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது - இதனால் கிடைக்கபடும் பணம் என்னவென்று இனி தான் தெரிய வரும் - (முதல் இரண்டு தம்பிகள் )

3 லட்சம் ஷெல் கம்பெனிகள் முடக்கப்பட்டுள்ளது -
இதில் இருந்து டெபாசிட் செய்யப்பட்ட பணம் எவ்வளவு என்று இனி தான் தெரியும் -

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்து வருமான வரி ஒவ்வொரு ஆண்டும் 20% அதிகமாக உயர்ந்து வருகிறது -

இந்த நடவடிக்கை மூலம் முடக்கப்பட்ட கள்ள நோட்டுக்கள் உண்மையாகப் புழக்கத்தில் இருந்ததை விட பல மடங்கு அதிகம் - (அடுத்த இரண்டு தம்பிகள்)

3 லட்சம் உச்ச வரம்பு ஒவ்வொரு முறை ரூபாய் நோட்டுக்கள் மூலம் பரிவர்த்தனை மேற்கொண்டால் -
இது மேலும் கருப்பு பண சந்தையை முடக்குகிறது -

56% டிஜிட்டல் பண பரிவர்த்தனை உயர்வு -

பொறுத்து பாருங்கள் இந்த செயலின் முழு பயனை அடைய -

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் இங்கிருந்து திருடப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் நம்முடையது -

இவையெல்லாம் இன்று மோடியைத் தூற்றித் திரியும் ஊடகங்களுக்குத் தெரியும் -

ஆனால், சொல்ல மாட்டார்கள் -

லட்சக்கணக்கான திருடர்கள் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது -
நாடு முழுவதும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான இடங்களில் ரெய்டுகள் நடப்பதெல்லாம் பணமதிப்பிழப்பு மற்றும் GST-ன் தொடர் நடவடிக்கைகள் தான் -

இந்த நிலையில் தான் அந்தக் குடும்பத் தலைவனை மாற்றி விட_

கேடுகெட்டவர்கள் ஒன்று கூடி எதிர்க்கின்றனர் -

ஒரு வேளை அவரைத் தோற்கடித்து விட்டீர்கள் என்றால் _

இந்த நடவடிக்கைகளின் பலன் நமக்குக் கிடைக்காமல் போய்விடும் -

மீண்டும் சொல்கிறேன் -

"அடுத்த தேர்தலை நினைப்பான் அரசியல் வாதி -
அடுத்த சந்ததியை நினைப்பான் தேசிய வாதி." -

"தேசத்தினிடமிருந்து எடுப்பவன் அரசியல் வாதி. -
தேசத்திற்கு கொடுப்பவன் தேசிய வாதி." -

AB sathiya

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...