Friday, 16 November 2018

ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் ஜாதி பாகுபாடுகளை ஊக்குவிக்கிறதா?

ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் ஜாதி பாகுபாடுகளை  ஊக்குவிக்கிறதா?

பிறகு ஏன் இந்து எதிர்ப்பாளர்கள் இந்த இரண்டையும் கையில் எடுக்கிறார்கள்? இதெல்லாம் ஆரியர்கள்/பார்ப்பனர்கள் செய்த தந்திரமா?

முதலில் ஒன்றை தெளிவுபடுத்திவிடுகிறேன்.. இதிகாசங்கள் என்பதற்கு பொருள் "இதுதான் நடந்தது" என்பதுதான்.. அதாவது இப்பொழுது ஆங்கிலத்தில் recorded history என அழைக்கிறார்களே.. அதற்க்கு நிகரான சொல்.. இராமாயணத்தில் வாலமீகி ராமாயணமும், மஹாபாரதத்தில் வியாசரின் மஹாபாரதம் மட்டுமே இதிகாசங்கள்.. இவர்கள் இருவரும் இவை நடந்தபொழுது பார்த்திருக்கிறார்கள்.. கம்ப ராமாயணம், துளசிதாசர் ராமாயணம் போன்றவையெல்லாம் இலக்கியங்கள்.. அதாவது, இது நடந்து பல காலங்களுக்கு பிறகு, பல புலவர்கள் சில கற்பனைகளையும் கலந்து எழுதியது..

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.. ராமர் ஷாம்புகன் எனும் சூத்திரனை யாகம் செய்தது தவறு என்று கொன்றுவிட்டார் என்று சொல்லி, ராமபிரானை வசைபாடுவார்கள் இந்த திக கூட்டம்.. ஆனால் இந்த ஷாம்புகன் கதை இதில் வருகிறது என்று பார்த்தால் ராமாயணத்தின் உத்திரகாண்டத்தில் வருகிறது.. இந்த உத்திரகாண்டம் என்பது வாலமீகி இராமாயணத்தில் கிடையாது.. வாலமீகி ராமாயணம் ராமர் காட்டிலிருந்து திரும்ப வந்து அயோத்தி மன்னனாக மாறி 11,000 ஆண்டுகள் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தார் என்பதோடு நிறைவுபெறுகிறது.. அக்னி பரீட்சை செய்த பிறகும் இரண்டாவது முறை சீதையை காட்டுக்கு அனுப்பினார் என்பதெல்லாம் வாலமீகி இராமாயணத்தில் இல்லை.. ராமர், சபரி என்கிற  வயதான (தாழ்த்தப்பட்ட குலம்தான்) மூதாட்டி அன்போடு பாதி கடித்துக்கொடுத்த நவாப்பழத்தை உணரார்.. அதேபோல குகன் எனும் மலைவாழ் மனிதனை தன் சகோதரனாக ஏற்றுக்கொண்டார் 

அதேபோல, மஹாபாரதத்தில் ஏகலைவன் கதையை சொல்லி, ஏகலைவன் தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்தவன் என்பதனால்தான் துரோணர் அவனுக்கு வில்வித்தை சொல்லி கொடுக்கவில்லை என ஒரு கூட்டம் சொல்லும்.. உண்மையில் ஏகலைவன் யார் என்று பார்த்தால் கிருஷ்ணரின் ஒன்று விட்ட சகோதரன்.. இது த்ரோணருக்கும் தெரியும்.. துரோணர், பீஷ்மர் போன்றவர்களெல்லாம் சாதாரண மனிதர்கள் அல்ல.. அப்படி ஏகலைவனுக்கு வில்வித்தை கற்றுக்கொடுத்தால், நாளை பாரத போரில் கௌரவர்களோடு சேர்ந்துகொண்டு, பாண்டவர்களுக்கு பெரும் தலைவலியாக நிற்பான்.. அது மட்டுமில்லை, அந்த காலத்தில் வருணாஸ்ரம தர்மத்தின் படி , ஒரு குலம் என்பது ஒவ்வொருவருடைய தொழிலாலும், குணத்தாலும் உண்டாவாவது..  அர்ஜுனன் ஒன்றும் பார்ப்பனன் இல்லையே.. சத்திரியன்தானே? ஆனால் இன்றய திக காரர்கள் பிராமணரல்லாத எல்லோரையும் சூத்திரன் ஆக்கிவிட்டார்கள்? சூத்திரன் என்றால் சூத்திரம், அதாவது வேலை தெரிந்தவன் என்று அர்த்தம்.. கடுமையான வேலைகளை செய்பவன், விவசாயம் உட்பட.. அவ்வளவுதான்..கடைசியில் த்ரோணரே அந்தண தர்மங்களை கைவிட்டு, சத்திரியனாக குருசேத்திரத்தில் போர் புரிந்தார்.. அதேபோலத்தான் கர்ணனும்.. கர்ணன் பரசுராமரிடம் தான் பிராமணன் என பொய் சொல்லி வில் கற்றுக்கொண்டான்.. உண்மை தெரிந்தவுடன் பரசுராமர் கர்ணனனை சபித்தார்.. காரணம் பிராமணன் இல்லை என்பதால் அல்ல, ஒரு வண்டு கடித்த வலியை ஒரு சத்திரியானால் மட்டுமே தாங்கிக்கொள்ள முடியும் என்பதனால்.. ஏனென்றால் அவருக்கு சத்திரியர்களை பிடிக்காது.. பரசுராமரை வென்ற ஒரே சத்திரியன் ராமர் மட்டுமே, த்ரேதா யுகத்தில்..

ஆகவே, இந்த இதிகாசங்களை ஆழமாக படித்தால்தான் இதெல்லாம் புரியும்..  ராமாயணத்தை எழுதிய வாலமீகி ஒரு காலத்தில் வேடுவர்.. . அதேபோல வியாசர் ஒரு மீனவ பெண்ணுக்கு பிறந்தவர். பிறகு வேதம் படித்து வேதவியாசர் ஆனார்.. இருவரும் பிராமணர்கள் இல்லை.. அதேபோல ராமரும் கிருஷ்ணரும் பிராமணர்கள் இல்லை.. அப்பறம் எப்படி இதெல்லாம் பார்ப்பன சூழ்ச்சியாகும்? யோசிக்கவும்.. மேலோட்டமாக படித்து, அல்லது நன்கு தெரிந்தும் அதை திரித்து பிரச்சாரம் செய்வதே இந்த இந்து விரோத கும்பல்களுக்கு வாடிக்கையாக போய் விட்டது..இவர்களின் நோக்கமெல்லாம், காலம் காலமாக பாரதத்தில் புனிதமாக கருதும் இந்த இரண்டு இதிகாசங்களை (தமிழர்களும், ராமாயண மஹாபாரதத்தை போற்றாத சங்க இலக்கியங்களே இல்லை)  பற்றி நம்மையே கேவலமாக நினைக்கவைத்துவிட்டால், மதம் மாற்றும் கும்பலுக்கு நம்மை மதம் மாற்றுவது எளிதாகிவிடும்.. இவர்கள் மாற்றுமதத்தினருக்கு ஆள் பிடித்துக்கொடுக்கும் ஏஜெண்டுகள் மட்டுமே.. இதை புரிந்துகொண்டால், புரிந்துகொள்ளுங்கள்.. இல்லை, நான் நடுநிலையாகவே இருப்பேன் என்று இருந்தால், நீங்கள் இல்லாவிட்டாலும், உங்கள் வருங்கால சந்ததியினர் மதம் மாறுவதை உங்களால் தடுக்க இயலாது..
jai hind

1 comment:

  1. உத்திரகாண்டம் எதில் வருகிறது
    அதனை படித்தால் வீட்டிற்கு ஆகாது என மகாபெரியவர்்ஏன் சொன்னார் 😛

    ReplyDelete

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...