Friday, 16 November 2018

அமர்நாத்தில் மட்டும் பனிலிங்கம் எப்படி உருவாகிறது ? இதில் ஏதாவது விஞ்ஞானம் உண்டா ...?

** க்ரைம் நாவல் புத்தகத்திலிருந்து அண்ணன் ராஜேஷ்குமார்
கேள்வி பதில்கள்:

* 1 ஒரு மனிதன் பூமியை எவ்வளவு ஆழம் தோண்டிப் பார்க்க முடியும் ?

** நாம் வாழும் பூமி மூன்று அடுக்குகளைக் கொண்டது.
முதல் அடுக்குக்குப் பெயர் "கிரெஸ்ட்" இரண்டாவது அடுக்குக்குப் பெயர் "மென்டில்" கடைசியாய் உள்ள அடுக்குக்குப் பெயர் "கோர்" என்று பெயர்.
இந்த மூன்றில் கிரெஸ்ட் திட நிலையில் இருக்கும். இதன் கனம் 16 கி.மீட்டரிலிருந்து 50 கி.மீ வரை.
இடத்துக்கு இடம் வேறுபடும். பூமியை எட்டு கிலோ மீட்டர் ஆழத்துக்கு மேல் மனிதனால் தோண்ட முடியவில்லை.  காரணம் பூமிக்கு அடியில் போகப் போக வெப்பநிலை உயர்ந்து கொண்டே போகும்.
120 அடி ஆழம் தோண்டினால் ஒரு சென்டிகிரேட் டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.
4 கி.மீ தூரம் உள்ளே போனால் 100 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் இருக்கும்.
இது தண்ணீர் கொதிக்கும் வெப்ப அளவு.
இதுவே 30 கி.மீ மேல் ஆழத்துக்கு சென்றால் பாறைகளே உருகும் அளவுக்கு 1200 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் இருக்கும். பூமியின் மையப் பகுதியை அடைய பூமியின் மேற்பரப் பிலிருந்து 6400 கி.மீ ஆழம் போக வேண்டும்.

* 2 அமர்நாத்தில் மட்டும் பனிலிங்கம் எப்படி உருவாகிறது ? இதில் ஏதாவது விஞ்ஞானம் உண்டா ...?

** சுமார் 150 அடி உயரம் - அகலம் கொண்டது அமர்நாத் குகை.
மலையின் மேற்பகுதியிலிருந்து வரும் குளிர்ந்த நீர் குகையின் பின்புறம் உள்ள பாறையின் நடுவில் கொட்டி அப்படியே உறைந்து பனிக்கட்டியாக மாறி விடுகிறது.
தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாக மாறுவது சாதாரன விஷயம் தான். ஆனால் இங்கே லிங்க வடிவில் ஆண்டுதோறும் தண்ணீர் பனிக்கட்டியாக உறைவதுதான் இதுவரையிலும் புரியாத அதிசயமாக உள்ளது.
இதில் எந்த விஞ்ஞானமும் இல்லை. மேலும் இந்த அதிசய லிங்கத்தை தரிசனம் செய்வதோடு அமர்நாத் யாத்திரை நிறைவு பெறுவது இல்லை. அந்த பனிக்குகையில் வசிக்கும் ஒரு ஜோடிப் புறாக்களை பார்த்தால் மட்டுமே அந்த யாத்திரை நிறைவு அடையும் என்று நம்புகிறார்கள்.
பனிமயமான அமர்நாத்தில் எந்த விலங்குகளையும் பறவைகளையும் பார்க்க முடியாது.
காரணம் அவை அங்கே வாழமுடியாது என்பது தான். ஆனால் இந்த ஒரு ஜோடிப்புறா மட்டும் எப்படி வாழ்கின்றன என்ற கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.  இறைவனும் இறைவியுமே ஜோடிப் புறாக்களாகக் காட்சி தருகிறார்கள் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை.
விஞ்ஞானம் தோற்றுப் போகிற சில இடங்களில் அமர்நாத்தும் ஒன்று.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...