மத்திய அமைச்சர் பொன்னாரின் முயற்சியில் கட்டப்பட்ட மேம்பாலத்தின் மீதேறி பாலம் ஆடுகிறது என சில வீடியோக்கள் சமூக விரோதிகளால் இருநாட்களாக பகிரப்பட்ட வருகிறது, எந்த அரசாவது கிட்டத்தட்ட 200 கோடி மதிப்பில் ஒரு பாலத்தை கட்டி அதில் மக்களை பயணிக்கவைத்து கொல்ல துணியுமா? என்ன ஒரு குரூர மனநிலையில் அந்த வீடியோக்கள் பகிரப்படுகிறது பாருங்கள், இதுவே உங்களுக்கு பிடித்தமான கிறிஸ்தவ நாடார் எம்பி முயற்சியில் கட்டியிருந்தால் இப்படி சொல்லியிருப்பீர்களா? அல்லது ஏதேனும் ஒரு திராவிட கட்சியின் ஆட்சி காலத்தில் இந்த பாலம் கட்டப்பட்டது என்றால் சொல்ல துணிவீர்களா? மாட்டீர்கள், பயம்.. உள்ளே போட்டு வாயில கரண்ட் கம்பியை சொருகிருவான்னு பயம், இது பிஜேபி தானே, எவனாவது கேட்டா போடா காவின்னு சொல்லிரலாம்னு உள்ள திமிர்.
இத்தனைக்கும் எம் மாவட்டத்தில் 32 பொறியியல் கல்லூரிகள், அதில் 90% சிறுபான்மையினர் நடத்துவது என்பது வேறு கதை, தடுக்கி விழுந்தால் தூக்கி விடுபவரில் இருவர் இன்ஜினியரிங் மாணவனாக தான் இருப்பான். அதில் ஒருத்தன் கூட பாலம் எதனால் ஆடியது ( ஆடியது என்பது இடவலமாக அல்ல, மேலுங்கீழுமான ஸ்பிரிங் சஸ்பான்ஷன்) என விளக்கம் சொல்லி பதிவிடவில்லை, இந்த பிரத்யேக கட்டமைப்பு குறித்தும், பாலத்தின் தாங்கும் சக்தியை ஐஐடி வல்லுநர்களை கொண்டு சோதனை செய்தது குறித்தும் இந்த பாலத்தின் கட்டுமான பொறியாளர் அஷோக் குமார் கூறியதை யாரும் செவிமடுக்கவில்லை. மாறாக ஆடியது என ஒருவர் போட்ட வீடியோவை ஷேர் செய்து சுய அரிப்பை தீர்த்துக்கொண்டனர்.
துறைக்கு சம்மந்தமில்லாத எனக்கே அது எதனால் குலுங்கியது என்பதை தேடிபடிக்க தோன்றியபோது இந்த பொறியியல் மாணவர்களுக்கு தோன்றாமல் போனது வியப்பே. என்ன செய்வது அண்ணா பல்கலை பாடத்திட்டத்தில் படித்து ஆண்டுக்கு 5000 க்கு மேற்பட்ட இன்ஜினியர்கள் எம் மாவட்டத்தில் வெளியேறுகிறான், ஃபீஸ் போன பல்ப் மாற்ற தெரியாத இன்ஜினியரிங் மாணவனை எனக்கு தெரியும், அந்த லட்சணத்தில் கற்றிறங்கி வேலையில்லாமல் சித்தாள் வேலைக்கு செல்லும் இன்ஜினியர், இப்படி ஐயையோ பாலம் ஆடுதுன்னு பதிவு போடாமலிருந்தால் தான் ஆச்சர்யம்.
நீங்க இந்த பாலத்தை புடிச்சு ஆட்டிக்கிட்டே நில்லுங்க, அவரு நாகர்கோவில்ல டெரிக் ஜங்ஷன் முதல் நாயுடு ஆஸ்பத்திரி வரை அடுத்த பாலத்துக்கு போயிட்டாரு, போங்கப்பா போயி இருக்கிற மிச்சம் மீதி கிரைண்டர், மிக்சியை கூட உடைச்சு டிக் டாக்ல வீடியோ போடுங்க, உங்களை எல்லாம் காறி உமிழ கூட தோணலை, அவ்ளோ அருவெருப்பா இருக்கு.
No comments:
Post a Comment