பிரதமர் மோடி போன்ற ஒரு தேசிய தலைவருக்கு மக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும்.
மோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி
பிரதமர் மோடி தலைமையிலான அரசில் ஊழல் இல்லை. அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை மக்கள் அளிக்க வேண்டும்
மத்திய அரசு மட்டத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க பிரதமர் மோடியும், அவரது அமைச்சர்களும் கடுமையாக உழைக்கின்றனர். மத்திய அரசு மட்டத்தில் லஞ்ச புகார் குறித்து நான் அரிதாகவே கேள்விப்படுகிறேன். அவர் பிரதமராக தொடர்வது நாட்டுக்கு நல்லது. ஜி.எஸ்.டி., உள்ளிட்ட சில விஷயங்களை அமல்படுத்தும் போது ஏற்பட்ட குழப்பங்களுக்கு பிரதமர் மோடியை குற்றம் சுமத்துவது சரியல்ல. இவற்றுக்கு அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
இந்தியாவின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடி போன்ற ஒரு தேசிய தலைவருக்கு மக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும்.
இந்த அரசு தொடர வேண்டும்
கடந்த ஐந்து ஆண்டுகளை பார்க்கும் போது, நாட்டைப் பற்றி கவலைப்படும், கட்டுப்பாடு குறித்து கவலைப்படும், சுத்தம் குறித்து கவலைப்படும் பொருளாதார முன்னேற்றம் குறித்து கவலைப்படும் ஒரு தலைவர் இருக்கிறார் என உணர முடிகிறது. இந்த அரசு தொடர்வது நல்ல விஷயமாகவே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment