Friday, 16 November 2018

பெருமை கொள்கிறேன்....... ஒரு இந்துவாக... அவர் மனைவியாக.... வழக்கறிஞராக #Nandhini

#தலை_குனிகிறேன்
#அவமானத்தில்_வெட்கி
~~~~~~~~~~~
சொரியான் சிலை மீது செருப்பு வீசிய திரு #ஜெகதீசனை மீட்ட அவர் மனைவி வழக்கறிஞர் திருமதி #நந்தினி அவர்கள் மனக்குமுறல்....
~~~~~~~~~~~~

முகநூலில்  சிலர் எனது கணவருக்கு அவர்கள் தான் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவது போல் பேசி வருவது மிக கண்டிக்க தக்கது.

பாஜக வை சேர்ந்த எவரும் எங்களை சந்திக்கவில்லை.

மேலும் இந்து மதத்தில் அதிக நாட்டம் உள்ள எனது கணவர் பிள்ளையார் சிலை உடைப்பு சம்பவம் தன்னை மிக வேதனை படுத்தி விட்டது என்றும் அதனாலே பெரியார் சிலை மீது செருப்பு வீசியதாக கூறினார்.

சம்பவம் நடந்த அன்று எனது கணவர் அந்த கூட்டத்தில் எவ்வளவு தாக்கப்பட்டார் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

அத்தனை ஊடகமும் அந்த செய்தியை காண்பித்தன. எப்போதும் பொம்மை படங்களைத் தொலைக்காட்சி யில் பார்க்கும் எனது இரண்டு குழந்தைகள் இந்த சம்பவம் குறித்து  தொலைக்காட்சியே காட்டாமல் இருந்தோம்

அப்பா எங்கே எப்போது வருவார் தீபாவளிக்கு அப்பா ஏன் வரல என்ற எனது குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் ஊமையாகி போனேன்.

மேலும் அவர் அன்று கொண்டு சென்ற வழக்கு கட்டுக்களை அங்கிருந்த பிற கட்சியினர் கிழித்து எறிந்தனர்.

அவரது கைப்பையில் ஒரு வழக்கு செலவுகளுக்கு கொண்டு சென்ற இரண்டு லட்சத்து எழுபத்து ஐந்து ஆயிரம் பணத்தை கூட்டத்தை பயன்படுத்தி திருடினர்..

பலர் கூட்டத்தில் எனது கணவரை  அடித்தது கட்சி கொடியினை கட்டிய பைப்புகளால் அவரது இடுப்பில் குத்தியதில் காயம் ஏற்பட்டது.

மூன்று முறை சிறையில் அவரை சந்தித்து பேசும்போதும் அந்த வலியின் ஆழத்தை உணர முடிந்தது......
பணம் போனது....
உடல்நலம் போனது....

ஆனால் கடைசி வரை மன்னிப்பு கேட்க மாட்டேன் வழக்கினை சந்திக்கிறேன் என்று எனது கணவரின் பிடிவாதத்தில் தன்மானம் நிறைந்து இருக்கிறது........

பெருமை கொள்கிறேன்.......

ஒரு இந்துவாக...

அவர் மனைவியாக....

வழக்கறிஞராக

#Nandhini

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...