Friday 16 November 2018

ஆட்டம் காணும் பெரியண்ணன் ஆட்டம்

ஆட்டம் காணும் பெரியண்ணன் ஆட்டம்
 
Newstm Tamil
Author
+ FOLLOW

உலகின் பெரியண்ணன் அமெரிக்கா. தோப்புக்கரணம் போடு என்று அந்த அண்ணன் கூறும் முன்பே எண்ணிக்கோ என்று போடுவது மற்ற நாடுகளின் வாடிக்கை. இந்தியாவோ அதற்கு முன்பாகவே அண்ணே தோப்பகரணம் போடுறேன் என்று நிற்கும். இது கடந்த கால வரலாறு.

தற்போது அமெரிக்கா இன்னும் ஒழுங்கா இருக்கணும் என்று அவ்வப்போது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக மாறிவிட்டது. காரணம் மோடி. ஈரான் அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள பெட்ரோல் தகரறாறு இதை நன்கு உணர்த்தும்.

அமெரிக்க அதிபராக ஒபமா இருந்த போது ஈரானுடன் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதற்கு வழக்கம் போல இங்கிலாந்து, ஜெர்மன் நாடுகளும் ஆதரவு .தெரிவித்ததுடன், ரஷ்யா, சீனா, ஆகியவையும் ஒப்புக் கொண்டன. ஐநா அதை ஏற்றது. இதன் காரணமாக சுபயோக சுப தினமான 1–10–2015 அன்று இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. அமெரிக்காவின் ஆட்சி மாற்றம் இந்த ஒப்பந்தத்திற்கு ஆப்பு வைத்தது. அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்ததும், கடந்த மார்ச் மாதம் ஈரான் அழுகுணி ஆட்டம் ஆடுவதால் அணு ஆயுததவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறப்போவதாக அறவித்தார். அதன்படி கடந்த 8––5–2018 அன்று அமெரிக்கா அந்த ஒப்பந்த்ததில் இருந்து வெளியேறியது.

ஆனால் மற்ற நாடுகள் ஒப்பந்தத்தை தொடரப்போவதாக அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஈரானின் கொட்டத்தை அடக்க நினைப்பதாக அமெரிக்கா ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்ய தடை விதித்தது. மேலும் தன் உத்தரவை மீறி ஈரானிடம் கச்சா எண்ணை இறக்குமதி செய்தால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தது.

இதனால் கச்சா எண்ணை இறக்குமதியில் 3ம் இடம் வகிக்கும் இந்தியாவிற்கு பலத்த அடியாக கருதப்பட்டது. நிச்சயம் மோடி பிரதமராக இல்லாவிட்டால் நாம் பெட்ரோலை பேப்பரில் எழுதிதான் ..... இதில் நவம்பர் 4ம் தேதி கெடு வேறு..

ஆனால் மோடி ஈரானுடன் பெட்ரோல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போட்டது. அதிலும் டாலருக்கு பதிலாக ரூபாய் அடிப்படையில் இறக்குமதி இருக்கும் என்று இந்தியா வலியுறுத்தியது. வேற வழியில்லாத ஈரானும் அதற்கு ஒப்புக் கொண்டது. இதன் காரணமா ரூபாய் மதிப்பு விரைவில் உயரும் வாய்ப்பு உள்ளது.

இந்தியாவின் நடவடிக்கை இப்படி இருந்தாலும், ஈரான் மட்டும் என்ன வேடிக்கையா பார்க்கும். தன் பங்கிற்கு ஹேர்மூன் நீரிணை மூடுவதாக அறிவித்துள்ளது.

ஒருபுறம் அமெரிக்க டாலரின் தேவை குறையும். இன்னொரு புறம் அரேபிய நாடுகளில் இருந்து வரும் கச்சா எண்ணை தட்டுப்பாட்டை போக்கும் அளவிற்கு அமெரிக்காவால் நடவடிக்கை எடுக்க முடியாது. இப்படி இருபக்கமும் இடி வாங்கும் ,நிலையில் அமெரிக்கா சிக்கி கொண்டது.

இதனால் தான் மிரட்டல் விடுத்த அமெரிக்கா முன்காலத்து சென்னை ரவுடியைப் போல ஜாகா வாங்கியது.

தற்போது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல நவ. 4 கெடுவிற்கு பின்னரும் 8 நாடுகள் ஈரானில் இருந்து பெட்ரோல் வாங்கலாம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இது இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி. மோடியின் ஆதரவு திரட்டும் யுக்திக்கு கிடைத்த வெற்றி என்கிறார் பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

இது போன்ற நிலை, பாரதிய ஜனதா அரசு இல்லாவிட்டால் ஏற்பட்டிருக்கவே வாய்ப்பு இல்லை. அதற்கு காரணம் நாம ஏங்க அடுத்தவங்க வம்புக்கு போகப்போறோம். ஏதோ கடன் வாங்கினோமா வெளியே தெரியாமல் நாட்டை வழி நடத்தினோமா என்று ஆட்சியாளர்கள் இருக்கும் நிலையில் இதையெல்லாம் யோசிக்க கூட முடியாது.

இதையெல்லாம் மீறி அமெரிக்காவின் முடிவை ஏற்க மற்ற நாடுகள் தயாராக இல்லை என்பதே அந்த நாட்டிற்கு கிடைத்த முதல் அடி. இந்த நிலை தொடரும் போது பெரியண்ணன் அடங்கி தானே போக வேண்டும். அதானே வரலாறு.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...