Friday, 16 November 2018

Modi as Prime Minster Whatsapp group

Modi as Prime Minster Whatsapp group

இணைந்திருக்கும் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். நன்றி

நாட்டின் குடிமகன் நாட்டின் வளர்ச்சியினை தன்னளவில் அதுவும் மிக எளிமையாக, போதுமான தகவல்கள் இல்லாமல் அளவிடுவது என்பதே பெரும்பான்மையாக நிகழ்கின்றது. இது ஆட்சியாளர்களுக்கு சாதகமாக் அமைந்து தேர்தல் வெற்றிகள் பெரும்பாலும் உணர்ச்சி பூர்வமான காரணிகளால் தீர்மானிக்கப்பட்டு வந்ததே வரலாறாகக் காண்கின்றோம்

நான் கட்சி சார்பு கொண்டவனில்லை. ஆயினும் எந்த ஒரு சராசரி மனிதன் போலவே அரசியலில் தலைவர்களின் செயல்பாடுகளைக் கொண்டு, அவர்கள் மீது அபிமானம் கொள்ளும் சாதாரண மனிதன்.

நாட்டின் வளர்ச்சி எல்லா துறைகளிலும் சீராக அமைவது என்பதை முன்னிலைப்படுத்தி செயல்படும் தலைவராக நான் நரேந்திர மோடி அவர்களைப் பார்க்கின்றேன்.

அவர் முன்னெடுத்திருக்கும் செயல்பாடுகள் தொலை நோக்கில், நீண்ட காலப் பயன்களைக் கருத்தில் கொண்டு அமைந்திருப்பதாகக் கருதுகிறேன்.

எனது  இந்த கருத்துகளுக்கான காரணங்களை முறையான தரவுகளுடன் முன் வைக்க விழையும் விருப்பமே இந்த  Whatsapp group நோக்கம்

இந்த  Whatsapp group ல் இணைந்திருப்பவர்கள் தகவல் பரிமாற இயலாத வகைக்கு குழுவின் செட்டிங் அமைத்திருப்பதற்கு என் வருத்தங்கள். தொடர்பில்லாத தலவல்கள், விவாதங்கள் மன வருத்தங்களைத் தவிர்ப்பதற்காக அவ்வாறு அமைத்திருக்கிறேன்.

கருத்து பரிமாற விழையும் நண்பர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

இந்த குழுவில் நான் பதியும் தகவல்களை நீங்கள் பங்கேற்றுள்ள பிற குழுக்களில் பகிர்ந்து கொள்ள தடையேதும் இல்லை

வாரம் ஒரு முறை / இரண்டு முறை பதிவுகளை எதிர்பார்க்கலாம்

முறையான தரவுகளைத் துறை வாரியாகவும் பதிவிடலாம் என தகவல்கள் சேகரிக்கின்றேன்

என் பதிவுகள் அனைத்தும் தகவல்களாக மட்டுமே அமையும் ஆனால் அவை எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய எழுத்து நடையில் அமையும்

நரேந்திர மோடியின் புகழ் பாடும் அவசியம் ஏதும் எனக்கு இல்லை. ஆனால் நல்லெண்ணம் கொண்டு, முறையான நீண்ட காலத் திட்டம் கொண்டு அவரது செயல்பாடுகளும் ,முயற்சிகளும் அமைந்திருப்பதால் அவை முறையாக மேலும் ஆதரவுடன் தொடர வேண்டும் என்பது என் நோக்கம். அந்த காரணமாக வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அந்த தேர்தல் மூலம் நரேந்திர மோடி மீண்டும் இந்தியக் குடியரசின் பிரதமராக  வேண்டும் எனும் எண்ணத்திலும் பதிவுகளை எழுதவிருக்கின்றேன்

இந்த பதிவுகள் Whatsapp ல் "Modi as Prime Minister"  எனும்  group லும் FaceBook #Modi_as_PM எனும் Hash Tag கொண்டும் எழுதவிருக்கிறேன்

Whatsapp group ல் இணைய இந்த சுட்டி உதவும். இதனை நீங்கள் விரும்புகின்றவர்களுக்கு தெரிவித்து இணையச் சொல்லலாம்

https://chat.whatsapp.com/FRM4SWJHtlBEi2qganeOSX

FaceBook ல் என் பதிவுகளுக்கு எதிர்தரப்பு / மாற்றுத் தரப்பு கமென்ட்கள் வரலாம், வரவேண்டும். அவை முறையான ஆர்வத்துடன், கண்ணியமான கேள்விகளாக இருக்குமெனில் அவசியம் பதில் சொல்லுகின்றேன்.

துவேஷம், தனிமனித தாக்குதல், கண்ணியக் குறைவான சொற்கள் கொண்டவை, பொருத்தமில்லா உதாரணங்கள், தரவுகல் கொண்ட கமென்ட்களைக் கவனத்தில் கொள்ளமாட்டேன். அப்படியான கமென்ட்களுக்கு நண்பர்கள் யாரும் மறுமொழி சொல்லாதிருக்க வேண்டுகின்றேன்

மாற்றுத் தரப்பும், எதிர் தரப்பும் இயல்பானவை. ஆனால் நேர விரயத்துக்கு இடமில்லாது எழுத வேண்டும் என்பது என் இயல்பு

Whatsapp group ல் தன்னிச்சையான சேர்க்கை மட்டுமே விரும்புகின்றேன். முதலிரண்டு பேர்களை மட்டும் அவசியம் கருதி நான் சேர்த்தேன்

இது வரை தன்னிச்சையாக 83 பேர் இணைந்திருக்கின்றார்கள். எண்ணிக்கை நாளையோ அல்லது நாளை மறுநாளோ 256 ஐ எட்டும் எனக் கருதுகின்றேன்

சனிக்கிழமை 17 நவம்பர் 2018 அன்று  தரவுகளுடனான பதிவுகளைக் தொடங்குகின்றேன்

அன்புடன்
சந்திரமௌளீஸ்வரன் வி

#Modi_as_PM

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...