விஜய் ரசிகர்களுக்கு :
சர்க்கார் படம் எப்படி என்ன என்று கதை உள்ளே செல்ல விரும்பவில்லை. ஆனால் இருதினங்கள் முன்பு இரு ரசிகர்கள் அருவாள் வைத்துக் கொண்டு மிரட்டி வீடியோ வெளியிட்டதைக் கண்டேன்... எரிச்சல் கோபம் தாண்டி வருத்தம் அடைகிறேன். அந்தச் சிறுவர்கள் அம்மா அப்பா நிலையில் இருந்து கூறுகிறேன் இது ஆக மோசமான கேவலமான விசயம்.
நீங்கள் விரும்பும் நடிகரின் படத்தினை சென்று பார்த்து திரையில் தோன்றும் போது கொண்டாடுவது எல்லாம் நான் குறை சொல்லவில்லை. ஆனால் அதற்காக முட்டாளகாக இருப்பது நியாயம் இல்லை. இரண்டு விசயம் மட்டும் உணருங்கள்
1.ஜோசப் விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்செய் படித்த பள்ளி அமெரிக்கா இண்டர்நேஸ்னல் ஸ்கூல் - அந்தப் பள்ளி வாசல் கூட மிதிக்க தகுதி உங்களுக்கு கிடையாது. ஆண்டுக்கு 20 - 25 லட்சம் பள்ளி கட்டணம் மட்டும் செலுத்தி படிக்கும் விஜய் மகன் படிக்கும் பள்ளியில் அனைவரும் விலை உயர்ந்த காரில் வந்து செல்ல - ஆண்டுக்கு சில கோடிகளை தன் மகனுக்குச் செலவு செய்கிறார்.
அந்த பணம் யாருடையது தெரியுமா???? உன் தந்தை தாய் உழைப்பில் வந்த பணம். ஒரு சித்தாள் கொத்தனார் ஆரம்பித்து ரோட்டோரமாக இட்லி தோசை விற்கும் நபரின் உழைப்பின் பணம் அது.. அதைத் தான் திரைப்படத்தின் மூலம் கவர்ந்து தன் குழந்தைக்கு உலகத்தின் மிகப் பெரிய வசதியான வாழ்க்கையைத் தந்துள்ளார் விஜய் அவர்கள். இதை முதலில் உணரவேண்டும் நீ.
அதாவது அவர் குழந்தை என்றாவது பச்சை குத்திக்கொண்டதா? என்றாவது கட்டவட் வச்சு அதற்கு முன் நின்று குத்தாட்டம் ஆடியதா???? என்றாவது அருவாளை தூக்கிகிட்டு வந்து அரசை மிரட்டி அடாவடி செய்ததா???? அவர்கள் நடித்து இன்னும் எப்படி அதிகம் சம்பாரிகளாம் அவர்கள் பேரப்பிள்ளைகள் எப்படி வசதியாக வாழலாம் என்று நினைத்துப் படிப்பிலும் தங்கள் பிழைப்பிலும் அக்கரையாக இருக்கும் போது நீ மட்டும் இப்படி இருப்பது நியாயமா?
2."சினிமா என்பது ஒரு தொழில் அதை லாபகரமாகச் செய்வது எப்படி என்று அவர்களுக்குத் தெரியும்... அது தொழில் என்று உனக்குத் தான் பல நேரம் புரிவது இல்லை- உன் தொழிலை பார்த்து உன் குடும்பத்தை முன்னேற்றக் கொஞ்சம் சிந்திக்கத் தொடங்கு 24மணி நேரமும் சினிமாவை சிந்திக்காமல்".
உங்கள் விருப்பமான நடிகரின் படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள். உன் வாழ்க்கையின் வெற்றி???
-மாரிதாஸ்
No comments:
Post a Comment