Friday, 16 November 2018

ஆயுஷ்மான் பாரத் அரசு மேடிக்கிலைம் பாலிசி பற்றி சில தகவல்

கடந்த அகஸ்ட் 15 அன்று பரத பிரதமர் அறிவித்த ஆயுஷ்மான் பாரத் அரசு மேடிக்கிலைம் பாலிசி பற்றி சில தகவல்

முதலில் இது பணம் கட்டி வாங்கும் இன்சூரன்ஸ் இல்லை.. சிலர் வாட்ஸ்ஆப்பில்  சொல்வது போல் நீங்கள் எந்த ஒரு பைசாவும் கட்ட வேண்டியது இல்லை. அதே போல யாரும் நேரடியாக சேர முடியாது. 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ( SECC 2011 ) சமூக-பொருளாதார மக்கள் தொகை கணக்கீட்டின்படி சில பிரிவு மக்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த திட்டத்தில் தானாகவே இணைத்து கொள்ளப்படுவார்கள்....

அவர்கள் யார்?

1. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்...

2. பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள்..

3. ஒரு அறை மட்டும் கொண்ட வீட்டில் வசிக்கும் முதியவர்கள்..

4.. ஆண் உறுப்பினர்கள் இல்லாத குடும்பத்தினர்..

5. உடல் ஊனமுற்றோர்...

6. பழங்குடியினர் மற்றும் ஷெட்யூல்டு வகுப்பினர் குடும்பங்கள்.

7. சொந்த நிலம் இல்லாதவர்கள்...

8. ஆதரவற்றவர்கள், பிச்சை எடுத்து பிழைப்பவர்கள்

9. துப்புரவுப் பணியாளர்கள்

10. நகர் புறங்களில் வசிக்கும் 11 வகையான தொழில்களில் ஈடுபடுபவர்கள்..

இன்னும் சில உள்ளது...

மேலே உள்ள இந்த பிரிவு மக்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இருப்பார்கள்...

இந்த திட்டத்தில் உங்கள் பெயர் இருக்கிறதா என தெரிய வேண்டுமா?

இந்த இணயத்தில் பாருங்கள்...

http://mnregaweb2.nic.in/netnrega/secc_list.aspx

இந்த திட்டம் இரண்டாம் மற்றும் முன்றாம் நிலை சிகிச்சைகளுக்கு மட்டும் பலன் கொடுக்கும்...( காய்ச்சல் மற்றும் ஆபத்து இல்லாத நோய்கள் இதில் வராது )

மருத்தவமனையில் சிகிச்சை பெறும்போது அரசு நிர்ணயம் செய்த தொகை மட்டுமே வழங்கப்படும்...

என்ன வியாதிக்கு, எவ்வளவு தொகை, எத்தனை நாள் சிகிச்சை அனைத்தும் இந்த

இந்த இணயத்தில் பாருங்கள்...

https://abnhpm.gov.in/sites/default/files/2018-07/HBP.pdf

எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்?

இந்த இணயத்தில் பாருங்கள்... ( சீக்கிரம் வரும் )

https://abnhpm.gov.in/coming-soon

இந்த திட்டம் பற்றி மேலும் அறிய...

இந்த இணயத்தில் பாருங்கள்

https://abnhpm.gov.in/

சரியான விசயங்களை மற்றவர்களுக்கு அனுப்புங்கள்...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...