சரித்திர ஆய்வாளர்கள் சொல்ல வேண்டியது சர்தார் பட்டேலின் காஷ்மீர். ஆனால் சொல்வது, சொன்னது ... நேருவின் காஷ்மீர்.. எப்படி.. எதனால்..?
தன் எல்லா எல்லைகளையும் கடந்த நம் சரித்திர ஆய்வாளர்கள் காஷ்மீர் மாநிலத்தை நேருவின் ‘Apple of his Eye’ என்று கூறுவர். அதாவது இது ஒரு பைபிள் வாசகம். நேருவிற்கு எல்லாவற்றையும் விட காஷ்மீரே மிக உயர்ந்தது என்பதை குறிப்பால் உணர்த்தும் வாசகம் இது.
உண்மையில் இன்னமும் காஷ்மீர் என்னும் மாநிலம் இந்திய மாநிலமாக இருப்பதற்கு முழுமுதற் காரணம் சர்தார் வல்லபாய் பட்டேல் என்கிற இரும்பு மனிதர் மட்டுமே. ஆனால்.. இந்த ஆய்வாளர்கள் அவரை ஒதுக்கிவிட்டு அங்கு தந்திரமாக நேருவை முன்னிருத்தி உள்ளனர். அல்லது அப்படி முன்னிருத்தப் பணிக்கப்பட்டுள்ளனர்..!
செப்டம்பர் 13, 1947 வரை சர்தார் பட்டேலும் காஷ்மீரைக் கையகப்படுத்தி இந்தியாவுடன் இணைக்கும் விஷயத்தில் எந்த நிலையான முடிவிற்கும் வரவில்லை. ஜுநாத் என்னும் ஹிந்துப் பெரும்பான்மை உள்ள ஆனால் முஸ்லீம்களால் ஆளப்பட்ட சமஸ்தானத்தை கையகப்படுத்த ஜின்னா தயாராக இருப்பதைத் தெரிந்து கொண்ட பட்டேல் அதே போல் ஏன் முஸ்லீம் பெரும்பான்மை உடைய ஆனால் ஹிந்து அரசரால் ஆளப்படும் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கக் கூடாது என்னும் எண்ணத்திற்கு வந்தார். இந்தப் பொறி தட்டியதும் பட்டேல் தொடர்ந்து பல வியூகங்களை ஏற்படுத்தி, சரித்திரத்தையே மாற்றியமைத்து, இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்தார்.
அக்டோபர் மாத முதலில், காஷ்மீர் மாநிலத்தின் மீது பாகிஸ்தானியப் பழங்குடிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்தியாவின் உளவுத்துறை அறிக்கை தெரிவித்தது. அக்டோபர் 22, 1947 அந்த திட்டம் பாகிஸ்தானிய பழங்குடிகளால் நிஜமாக்கப்பட்டது. அதே நாளில் 5000 த்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய பழங்குடிகள் ஆயுதம் மற்றும் வெடிப் பொருட்களுடன் முஸாஃபர்பாத் என்னும் நகரத்தைத் தாக்கி எரித்தனர்.
பிரிகேடியர் ராஜேந்திர சிங் தன்னுடன் 150 வீரர்களை இணைத்துக் கொண்டு ‘ஊரி’ என்னுமிடத்தில் வீர சுவர்க்கம் எய்தினார். அதன் மூலம் இந்த பழங்குடிகளின் தாக்குதல் தடைபட்டு தலைநகரமான ஶ்ரீநகரைக் காப்பாற்ற மற்றவர்களுக்குத் தேவையான நேரம் கிடைத்தது. காஷ்மீரின் ஒட்டு மொத்த மக்கள் தொகையும் ஸ்தம்பித்து நின்றனர். மஹராஜா ஹரி சிங்கினால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கில் ஏற்பட்ட ஒழுங்கீனத்தை சரி செய்யும் திராணியில்லாமல், ஜம்முவில் போய் ஓடி ஒளிந்து கொண்டார்.
அந்த நேரத்தில் மஹராஜா நம்பிக்கை இழந்த நிலையில் வேறு வழியில்லாமல் இந்திய ராணுவத்தை உதவிக்கு அழைத்தார். இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பட்டேல் இரண்டே இரண்டு நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் முழு வீச்சில் உதவுவதாக வாக்களித்தார்.
அந்த இரண்டு நிபந்தனைகள் -
1)இந்தியாவுடன் இணைகிறேன் என்னும் ஒப்பந்தத்தில் மஹராஜா ஹரி சிங் கையெழுத்திட வேண்டும்.
2)மஹராஜாவிடமிருந்து இந்திய ராணுவ உதவி தேவை என்பதற்கான எழுத்துப் பூர்வ கடிதம்.
வேறு வழியே இல்லாததால், காஷ்மீர் மஹராஜா, சர்தார் பட்டேல் கூறிய இரண்டு கருத்துகளையும் ஏற்றுக் கொண்டார். கையெழுத்தானது. உடனே இந்திய ராணுவம் தன்னுடைய அசுர செயலில் இறங்கி, ஶ்ரீநகர் விமான நிலையத்தைக் கைப்பற்றியது. அங்கிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள பாரமுல்லா என்னும் இடத்தில் எதிரிகளின் தாக்குதலை நிலை நிறுத்தியது.
பிரிகேடியர் S.P.சென் என்னும் இந்தியப் படைத் தளபதி, மிகவும் சாமர்த்தியமாக, தனித்துவமான ஒரு திட்டம் போட்டு, ஐந்து மைல்கள் நம் படையை ஶ்ரீநகரை நோக்கி நகர்த்தி, அவ்விடத்திற்கு பாகிஸ்தான் பழங்குடிகளை நகரத்திற்குள் வரவழைத்து ஒரேயடியாக அவர்களை அழித்தொழித்தார்.
இத்தனை செயல்பாடுகளின் நடுவே, ஜின்னாஆத்திரத்துடனும், ஆனால் ஊமையாக எல்லாவற்றையும் பூத சாட்சியாகப் பார்த்துக் கொண்டேயிருந்தார். இந்திய ராணுவம் வெற்றி பெறும் நிலையை எட்டியது. இன்னும் சிறிது நேரத்தில் ஒட்டு மொத்த மாநிலமும் இந்திய அரசாங்கத்தின் கைகளில் வந்து எதிரிகளின் பிடி விலகும் நிலைக்கு வந்துவிட்டது.
ஆனால்...
ஷேக் அப்துல்லாவை காஷ்மீர் மாநிலத்தின் முதன் மந்திரியாக வேண்டும் என்கிற எண்ணத்தை மனதில் வலியுறுத்திக் கொண்டு, கடைசி நேரத்தில் தந்திரமாக அந்த மாநிலத்தைத் தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்தார் நேரு. பட்டேல் அவர்களின் Ministry of States என்கிற கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீர் அவரிடமிருந்து நேருவால் பறிக்கப்பட்டு, தனிப்பட்ட ‘Ministry of Kashmir’ என்னும் ஒரு அமைச்சகத்தை உருவாக்கி, அதன் தலைமையாக கோபால்சாமி ஐயங்காரை நியமித்து தன் நேரடி கண்காணிப்பின் கீழ் அமைத்துக் கொண்டார்.
அதற்கும் மேலாக நேரு, மௌண்ட்பேட்டனின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து, (?.?) இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஐ.நா சபையின் கதவுகளைத் தட்டி, ஒரு ‘பண்டோரா பாக்ஸ் திறக்கப்பட்டது’ என்று சொல்லக் கூடிய மேலும் மேலும் தீராத பல பல பிரச்னைகளுக்கு வித்திட்டார். வழிகோலினார். இதனால், இவருடைய இந்த தவறான செயலால், இன்றுவரை காஷ்மீர் பிரச்னை இந்திய அரசுக்குத் தீராத தலைவலியாகவே உள்ளது.
இந்தியாவின் கை பெருமளவில் ஒங்கியிருந்த போதிலும், காஷ்மீரில் ஆட்சியமைக்க மொத்த தகுதியும் நமக்கிருந்த போதும், நம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தவறான வழிகாட்டுதலால், ‘ஜம்மு அண்ட் காஷ்மீர்’ பிரச்னையில்லாத மாநிலமாக இல்லாமல் ஒரு கறையுடனே இன்றும் காணப்படுகிறது.
___________________________________
https://satyavijayi.com/historians-should-callit-patels-kashmir-not-nehrus-kashmir/
~~~Prema S Iyer
No comments:
Post a Comment