ரபேல் டீலிங் ஒரு புரிதல்-
அரசு அலுவலங்களில் உள்ள கம்ப்யூட்டர் களை கொஞ்சம் திறந்து பார்த்தால் அதில் உள்ள
CPU இப்பொழுது வீடுகளில் பயன் படுத்தும் கம்யூட்டர்களில் இருப்பதை விட பத்து வருடங் களுக்கு முன்னதாக உள்ள CPU வாகத்தான்
இருக்கும்.
உதாரணமாக இப்பொழுது வீடுகளில் I3 மற்றும் I5
கம்யூட்டர்கள் தான் இருக்கிறது. ஆனால் அரசு
அலுவலங்களில் ,P-4 சிஸ்டத்தையே இன்னும்
தாண்டாமல் இருக்கிறார்கள்.
காரணம்.. விலை அதிகம் என்பதால் தான்
ஹையர் ரேஞ்சு கம்யூட்டர்களை வாங்க வில்லை
என்று கூறுவார்கள்.. ஆனால் உண்மை அதுவல்ல
முதலில் P-4 அப்புறம் டியூயல் கோர்..அப்புறம்
I3 அடுத்து I5 என்று வருவார்கள்..
ஆரம்பத்திலேயே I -5 கம்யூட்டர் ஒரு 10 ஆயிரம்
ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கினால் டெக்னா லஜி விசயத்தில் 10 வருசத்துக்கு கவலைப்பட
வேண்டாம்.ஆனால் அரசு அலுவலங்கள் அதை
செய்யாமல் விலை குறைவு என்று கூறி படிப்படியாக டெக்னாலஜியை மேம்படுத்துவதாக கூறிக்கொ ண்டு கான்ட்ராக்ட்காரர்களுக்கு தொடர்ந்து ஆர்டர் கொடுத்து கமிசன் வாங்கி கொள்கிறார்கள்.
கடைசியில் 10 ஆயிரம் அதிகம் என்று இவர்கள்
தள்ளி வைத்த I-5 கம்யூட்டர்களை 5 வருடங்களுக்கு பிறகு வாங்கும் பொழுது 50 ஆயிரம் ரூபாயை
இழந்து இருப்பார்கள்.
இதே மாதிரி தான் ஆறாம் தலைமுறை விமானங் களை அமெரிக்கா தயாரித்து வரும் நிலையில்
நாம் நான்காம் தலைமுறை விமானங்களை
1 லட்சம் கோடிக்கு மேலாக செலவழித்து வாங்குவது
பைத்தியக்காரத்தனமானது. என்று அப்பொழுது
சில மீடியாக்கள் கூறின. அதுவும் சீனா 5ம் தலை
முறை விமானங்களை வைத்துள்ள நிலையில்
இந்தியா 4ம் தலைமுறை விமானங்களை வாங்குவது அபத்தமானது என்று எழுதின.
அதனால் தான் மோடி அரசு முந்தைய காங்கிரஸ்
அரசுப்போட்ட 4 ம் தலைமுறை விமானங்களை
ஓரம் கட்டி வைத்து விட்டு 5 ம் தலைமுறை விமானங் களை வாங்க முடிவெடுத்தது உண்மையிலேயே
இன்னும் சில வருடங்களில் காலியாகப்போகும்
4 ம் தலைமுறை விமானங்களை ஆரம்பத்திலேயே
ஓரம்கட்டி வைத்து விட்டு 5 ம் தலைமுறை விமான
ங்களை ஆரம்பத்திலேயே வாங்கியதன் மூலம்
மக்கள் பணத்தை வேஸ் ட் செய்யாமல் சேமித்து
ள்ளார்கள் என்றே தெரிகிறது.
No comments:
Post a Comment