நான் ஒன்றும் மயில்சாமி போல பெரிய பொருளாதார நிபுணன் அல்ல -
அதனால் எனது பதிவு அறியாமையாகக் கூட இருக்கலாம் -
மறுப்பவர்கள் விளக்கினால் தெரிந்து கொள்வேன் -
இன்று, அத்துனை ஊடக விவாதங்களிலும் நமது சுதந்திர தினத்தைப் பற்றியோ, தியாகிகளைப் பற்றியோ விவாதிக்கவில்லை -
அல்லது, மோடி அவர்களின் திட்டங்களைப் பற்றி விவாதிக்கவில்லை -
மாறாக டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 70 ரூபாயை நோக்கி வீழ்வதைப் பற்றித்தான் பேசுகிறார்கள் -
வேட்டை நாய்கள் காத்திருந்து பாய்ந்ததைப் போல அப்படி ஒரு ஆக்ரோஷம் -
எனக்குத் தெரிந்து 2004-ல் வாஜ்பாய் அவர்கள் 43 ரூபாயில் விட்டுச் சென்ற ரூபாய் மதிப்பு -
மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகள் ஆட்சியின் முடிவில் 68 ரூபாயாக சரிந்திருந்தது -
அதாவது சராசரியாக வருடத்திற்கு 2.50 காசுகள் சரிந்தது -
ஆனால் மோடி அவர்களின் நான்காண்டு ஆட்சியில் இப்பொழுதுதான் முதல் முறையாக 2 ரூபாய் சரிந்திருக்கிறது -
சென்ற மாதம் கூட 65 ரூபாய் என்ற அளவில் உயர்ந்திருந்தது, அப்பொழுதெல்லாம் இந்தப் பொருளாதாரப் புலிகள் குலைக்கவில்லை -
ஒரு வேளை காங்கிரஸ் ஆட்சியே தொடர்ந்திருந்தால் வருடத்திற்கு 2.50 என்று நான்கு வருடத்தில் 10 ரூபாய் சரிந்து 80 ரூபாய் என்று கூட மாறி இருக்கலாமோ என்னவோ தெரியவில்லை -
அதே போலத்தான் தங்கத்தின் விலையும் 2004-ல் வாஜ்பாய் அவர்களின் ஆட்சியின் முடிவில் 4448 ரூபாய் இருந்த ஒரு சவரன் ஆபரணத் தங்கம் -
பத்தாண்டுகள் மண் மோகன் ஆட்சியின் முடிவில் 22,224 ரூபாய் என்று கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதாவது 500% உயர்ந்திருந்தது -
அதே ஆட்சி தொடர்ந்திருந்தால் இன்று அதே விகிதத்தில் உயர்ந்து 35,000 ஆகி இருக்கலாம் -
ஆனால், இன்று நான்காண்டுகளின் முடிவில் வெறும் ஆயிரம் ரூபாய் கூட உயரவில்லை -
உடனே, இதெல்லாம் உலக மார்க்கெட் இதற்கு மோடி காரணம் அல்ல என்று கம்பு சுத்த நினைப்பீர்கள் -
உண்மைதான், -
அதே உலக அரங்கில் தான் இந்திய ரூபாயின் மதிப்பு டாலரைத் தவிர மற்ற நாடுகளின் கரண்ஸிகளுக்கு எதிராக நன்றாக உயர்ந்து உள்ளது -
அதைப் பற்றி யாரும் பேசக் கூட மாட்டார்கள் -
இந்த மதிப்புக் குறைவு கூட ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்று கூறினாலும் ஏற்றுக் கொள்ளாமல் -
உடனே, இந்தியாவின் பொருளாதாரம் கெட்டுப் போச், மோடி ஏமாத்திட்டாரு என்று கதறுகிறார்கள் -
ஆனால், உலக வங்கி முதல் உலகின் பல பொருளாதார நிபுணர்கள் வரை இந்தியாவின் பொருளாதாரம் நான்கு கால் பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது -
பொருளாதார நாடுகள் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்து France - சை பின்னுக்குத் தள்ளி ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளோம் என்று கூறினால்?-
அமெரிக்காவை ஏன் முந்தவில்லை என்று கேட்கிறார்கள் -
என்னைப் பொருத்தவரை நாடு மோடி அவர்களின் கைகளில் -
ஊழல் இல்லாமல் ஸ்திரமாக வளர்ந்து பாதுகாப்பாக இருக்கிறது -
அது அப்படியே தொடர வேண்டும் என்பதே ஆசை -
தேசப்பணியில் என்றும் -
No comments:
Post a Comment