*கவனம் சிதறினால் உடல் சிதறும்*
அணு உலை கழிவுகளை விடவா
ஒரு நாள் பட்டாசு புகை பெரிது..?
சாயப்பட்டறை கழிவுகளை விடவா
ஒரு நாள் பட்டாசு புகை பெரிது...?
மருத்துவ கழிவுகளை விடவா
ஒரு நாள் பட்டாசு புகை பெரிது..?
சிலிக்கான் கழிவுகளை விடவா
ஒரு நாள் பட்டாசு புகை பெரிது..?
பெரும் ஆலைக் கழிவுகளை விடவா
ஒரு நாள் பட்டாசு புகை பெரிது..?
ஏர்கண்டிசனரும், பிரிட்ஜும் நாடெங்கும்
நாசப்படுத்துவதை விடவா
ஒரு நாள் பட்டாசு புகை பெரிது..?
தோல் பதப்படுத்தி வெளியேறும்
கழிவுகளை விடவா
ஒரு நாள் பட்டாசு புகை பெரிது...?
மனிதனே நீ தினம் தினம்
உன் மனசாட்சிக்கு மரணம் தந்து விட்டு
உன்னால் வீசப்படும் கழிவுகளை விடவா
ஒரு நாள் பட்டாசு புகை பெரிது...?
இந்த ஒரு நாளுக்காக
வெடிமருந்துகளின்
ரசாயனங்களில் மூழ்கி
வயிற்றுப் பசிக்காக அடிமைகளாய் அமிலங்களை சுவாசித்து
தங்கள் உடல்
புற்றுநோயால் அரிக்கப்பட்டு
வருவது கூட தெரியாமல்
கவனம் சிதறினால்
கண நேரத்தில் உடல் சிதறும்
மரணத் தொழிலில்
ஒரு வேளை சோத்துக்காக
உழைக்கும் அடிமட்ட
ஓர் பட்டாசு தொழிலாளியின்
ஒரு வேளை உணவிற்கு
உன் பணம் சென்று சேரும்
அவர்களை வாழவைக்கும்
என்ற ஒரு காரணத்திற்காக
மேற்கண்ட எந்த கழிவுகளை விடவும்
பட்டாசு கழிவு நன்மையே என்று
மனமார வெடித்துக்
கொண்டாடு தீபாவளியை..
நீ வைக்கும்
ஒவ்வொரு மத்தாப்பிலும் ஜொலிப்பது
சிவகாசியில் எங்கோ ஓர்
மூலையில் இருக்கும்
எமது உறவுகளின் முகங்கள்
என்பதை மறந்து விடாதீர்கள்...
No comments:
Post a Comment