Wednesday, 17 October 2018

பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் குறித்த செய்தி

நான்காம் முறையாக இது போன்ற பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் குறித்த செய்தி நம் குழுமத்தில் பதிவிடப்படுகிறது.

"பங்கு பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் நிதி சுமையை எண்ணெய் நிறுவனங்களின் மீது அழுத்துவது நிரந்தர தீர்வு அல்ல. நம் சுமையை நம் குழந்தைகளின் மீது சுமத்துகிறோம். அவர்கள் தான் அந்த கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்பதை இந்த நாடு உணர வேண்டும்" --- *பெட்ரோல் டீசல் உயர்வு குறித்து பத்து வருடங்களுக்கு முன் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்.*

2012ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ .78.57, பெட்ரோல்/ டீசல்  மானியம் ரூ.1,61,029 கோடி.

2013ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ .83.62, பெட்ரோல்/ டீசல் மானியம் 1,43,738 கோடி,

2014 ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.80, பெட்ரோல்/டீசல்  மானியம் 76,285 கோடி,

2015ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.63.90, பெட்ரோல்/ டீசல்  மானியம் 27,571 கோடி,

2016ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.62.75, பெட்ரோல்/ டீசல் மானியம் 27,738 கோடி,

2017ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.78.67, பெட்ரோல்/ டீசல் மானியம் 7069 கோடி,

2018ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.83.75, பெட்ரோல்/டீசல்  மானியம் '0'.

அதாவது 2012-2014 வரை ரூபாய்100 க்கு விற்றிருக்க வேண்டிய ஒரு லிட்டர் பெட்ரோலை 80 ரூபாய்க்கு விற்றது எண்ணெய் நிறுவனங்கள். மீதமுள்ள 20 ரூபாயை மத்திய அரசு மானியமாக  பங்குகளை எண்ணெய் நிறுவனத்திற்கு கொடுத்து சமாளித்து கொண்டிருந்தது. *அந்த கடனை கடந்த 4 வருடங்களில் பாஜக அரசு கச்சா எண்ணெய் விலை குறைப்பை உபயோகித்து எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்தி மக்களின் நிதி சுமையை குறைத்தது, என்பதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டியது படித்ததவர்களாகிய நம் கடமை.*

மன்மோகன் சிங் சொன்னது போல் அல்லாமல் *நம் அடுத்த தலை முறையின் மீது விழ இருந்த நிதி சுமையை கச்சா எண்ணெய் விலை குறைப்பை பயன் படுத்தி சிறப்பான முறையில் கையாண்டது பாஜக அரசு என்பதை மக்களின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.*

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...