Really felt..
திமுகவினர் படிக்க...
.பத்து வருட காலம் , கலைஞரின் தயவில் ஆட்சி பொறுப்பில் இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நேரில் வந்து அஞ்சலி செலுத்த வில்லை. ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜீ நேரில் வந்து நலம் கூட விசாரிக்க வில்லை. சோனியா காந்திக்கு உடல்நலமில்லை ஆகவே அவர் வரவில்லை என்பார்கள். ஆனால் தனது வாழ்நாள் முழுவதும் கலைஞர் எதிர்த்த, ஆர் எஸ் எஸ் இயக்க வளர்ப்புகள் பிரதமர் மோடி ஜி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, கவர்னர் பன்வாரிலால் ப்ரோஹித் எவ்வளவு பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்கள் என்பது குறித்து , நடுநிலையாளர்கள் மட்டுமல்ல , கலைஞரின் தொண்டர்களும் சிந்திக்க வேண்டுகிறேன்..மேலும் பண்டாரம் பரதேசிக்கட்சி என்ற விமர்சனங்களையும் பாஜக மன்னித்து மறந்து லோக்சபா அல்லது ராஜ்ய சபாவில் தற்போதைய உறுப்பினராக இருப்பவர், அல்லது ஏற்கனவே உறுப்பினராக இருந்தவர் இறந்தால் மட்டுமே, சபையை ஒத்தி வைப்பது வழக்கம். இதற்கு மாறாக, இந்த இரண்டு சபையிலும் இடம்பெற்றிராத, கருணாநிதியின் மறைவையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், நேற்று இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. லோக்சபா அல்லது ராஜ்யசபாவில், எம்.பி.,யாக பதவி வகித்திராத ஒருவரது மறைவுக்கு, பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்படுவது, இதுவே முதல் முறை. லோக்சபா நேற்று காலை துவங்கியதும், கருணாநிதி மறைவுக்காக, ஒரு நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது. அதன்பின், லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது. ராஜ்யசபாவில், கருணாநிதி மறைவுக்கான இரங்கல் குறிப்பை, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு வாசித்த பின், சபை ஒத்தி வைக்கப்பட்டது.அரசியல் நாகரீகம் என்றால் இதுதான்.👌🏼
No comments:
Post a Comment