Wednesday 17 October 2018

*வல்லரசுகளை வணங்க வைக்கும் பேரரசு-* MODI

*வல்லரசுகளை வணங்க வைக்கும் பேரரசு-*

நிறைய அப்ரண்டிஸ்கள் அமெரிக்காவுக்கு பயந்து
இந்தியா ரஷ்யாவோடும் ஈரானோடும் வர்த்தக
தொடர் பை துண்டித்து கொள்ளும் என்று நினை
த்து இருந்தார்கள். ஆனால் மோடியோ ரபேல்
டீலிங்கை விட மிகப் பெரிய ஆயுத டீலிங்கை
ரஷ்ய அதிபர் புதினை இந்தியா வுக்கு அளித்து
எங்களை யாரும் கட்டுப்படுத்த என்ன?கேள்வியே
கேட்க முடியாது என்று  ட்ரம்புக்கு  மூடிட்டு்இருய்யா  என்று அட்வைஸ் செய்துள்ளார்.

இதை விட முக்கியமானது என்னவென்றால்
ஈரான் நாட்டோடு உள்ள கச்சா எண்ணெய் டீலிங்கை
நவம்பர் 4 ம் தேதியில் இருந்து இந்தியா நிறுத்த
வேண்டும் இல்லையெனில் பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்ட பதிலுக்கு
மோடியோ ஈரானுக்கு  வழக்கமாக வழங்கும்
கச்சா எண்ணெய் ஆர்டரை விட அதிகமாக வழங்கி
இந்தியா வுக்கு கச்சா எண்ணெய் சப்ளை நாடுகளில் 6 வது இடத்தில் இருந்த ஈரானை 2ம்
இடத்திற்கு கொண்டு வந்து விட்டார்.

கடந்த மாதம் வரை 60 லட்சம் பேரல் கச்சா எண்ணெ ய் மட்டுமே ஈரானில் இருந்து இந்தியா வுக்கு இறக்கு
மதியாகி கொண்டு இருந்தது. ஆனால் அமெரிக்கா
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி னால்
இந்தியா மீது பொருளாதார தடை விதிப்போம் என்று மிரட்ட ்பதிலுக்கு மோடியோ ஈரானுக்கு
நவம்பர் மாதத்திற்கு 90 லட்சம் பேரல் கச்சா எண் ணெய் சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்து விட்டார்.

ஆமாம்..அமெரிக்கா எதற்காக இன்னொரு நாட்டின்
எண்ணெய் இறக்குமதி யில் தலையிட வேண்டும்
என்கிற கேள்வி இயல்பாக நமக்கு தோன்றும்.
இதற்கான காரணத்தை தேடினால் பதிலாக
ரஷ்யா என்றே விடை கிடைக்கும்..அமெரிக்கா
ரஷ்யா இரண்டு நாடுகளுக்கும் இடையில் சிக்கி
சீரழிவது அப்பாவி நாடுகளின் தலைஎழுத்து.

மன்மோகன் சிங் ஆட்சியில் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலைமோடி ஆட்சிக்கு வந்தவுடன் குறைந்த காரணம் என்ன? இப்பொழுது ஏன் பெட்ரோல் டீசல் விலைஉணர்ந்து கொண்டு இருக்கிறது என்று
காரணம் தேடினால் கண்ணை மூடிக் கொண்டு அமெரிக்கா என்றே சொல்லிவிடலாம்.

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...என்கிற
பாட்டு கேட்கும் பொழுது நல்லாத்தான் இருக்கும்
ஆனால் கச்சா எண்ணெய் இருந்தால் தான்
இந்தியா வே இயங்க முடியும் என்கிற உண்மையை
மருத காசி மறந்து விட்டு இந்த பாட்டை எழுதி
இருக்க மாட்டார்.ஏனெனில் மருத காசி கண்ண தாசனை விட  ஒரு படி மேலானவர்.

இருந்தாலும் அவர் ஏன் என்ன வளம் இல்லைஇந்த திரு நாட்டில்? என்று எழுதினார் என்றால் இந்த
பாடல் எழுதப்பட்ட  1967 ல் சைக்கிள்  கூட கிராமங்க ளில்  இருந்து இருக்காது.. ஆனால் இப்பொழுது
அப்படியா? நிலைமை.. கிராமங்களிலேயே டூ வீலர்
இல்லாத வீடே கிடையாது.. என்ன வளம் இல்லை
இந்த திருநாட்டில் என்று  அன்று கேட்ட மருதகாசி
இன்று இருந்து இருந்தால் எண்ணெய் வளம்
இல்லை  இந்த  திரு நாட்டில்.. இதற்கு நாம் கையை
ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்றே பாட்டு
எழுதி இருப்பார்...

அந்தளவுக்கு கச்சா எண்ணெய் தேவையினால் . உண்டாகும் பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் இந்தியா தவிக்கிறதுஉலகிலேயே அதிகளவில் பெட்ரோல் டீசல்பயன்படுத்தும் நாடு களின் லிஸ்ட்டில் அமெரிக்கா சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா தான் இருக்கிறது

இந்தியாவின் கச்சாஎண்ணெய் தேவை ஒரு நாளைக்கு சுமார்48  லட்சம் பேரல்கள் ஆகும்.இந்த வருசத்துக்கு  சுமார் 7 லட்சம் கோடி ரூபாய்
கச்சா எண்ணெய் இறக்குமதி க்கே இந்தியா
செலவழித்துக்கொண்டு இருக்கிறது.ஏனெனில்
இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி தேவை யில் 5 ல் ஒரு மடங்கு கூட இல்லை..

ஒரு பேரலில்  159 லிட்டர் கச்சா எண்ணெய் . இருக் கும்இந்த கச்சா எண்ணெயை சுத்திகரித்து அதில் இருந்து சுமார் 150 வகையான பொருட்களை உற்ப த்தி செய்கிறார்கள்ஒரே ஒரு பேரல் கச்சா எண் ணையில்  73லிட்டர் பெட்ரோலும் 36 லிட்டர் டீசலும் கிடைக்கும்.கூடவே 20 லிட்டர் விமான எரிபொருளும் கிடைக்குமாம்....இந்தியாவின் பெரும் பணத்தை கச்சா எண்ணெய்தான் காலி செய்து கொண்டு இருக்கிறது.

இதனால் தான் நாம் எண்ணெய் வளம் இல்லை
இந்த திருநாட்டில என்று அரபு நாடுகளிடம் கை
ஏந்திக் கொண்டு இருக்கிறோம்.இந்த அரபு
நாடுகள் அமெரிக்காவின் காலில் விழுந்து கிடப்ப தால் அமெரிக்காவின் கட்டளைக்கேற்ப விலையை
குறைப்பதும் பிறகு அதிகரிப்பதும் என்று நம்மை
பாடாய் படுத்திக்கொண்டு இருக்கிறார் கள்.

ரஷ்யாவை பொருளாதார ரீதியாக வீழ்த்தநினைத்த
அமெரிக்கா அதற்கு எடுத்துக்கொண்ட முக்கிய ஆயுதம்தான். கச்சாஎண்ணெய் . உலகிலேயே அமெரிக்கா சவூதி அரேபியாவை அடுத்து கச்சா எண் ணெய் உற்பத்தியில் உலகளவில் மூன்றா வதாக இருக்கும் நாடு ரஷ்யா தான்..நம்ம இந்தியா
உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 24
வது இடத்தில் இருக்கிறது.. பரவாயில்லையே..

என்ன தான் அமெரிக்கா கச்சா எண்ணெய் உற்பத்தி
யில் உலகில் முதல் இடத்தில் இருந்தாலும்  அது
வண்டியை ஓட்டவே தினமும் 2 கோடி பேரல் கச்சா
எண்ணெய் வேண்டும். ஆனால் அமெரிக்காவில
சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பேரல் கள் கச்சா
எண்ணெய் தான் உற்பத்தியாகிறது.மீதிக்கு சவூதி
அரேபியா ஈராக் வில் இருந்து அமெரிக்காவே
எடுத்து கொள்ளும்

கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் சவுதி
அரேபியா வை அடுத்து இரண்டாவதுஇடத்தில்
இருப்பது ரஷ்யா தான். சீனாவுக்கு ரஷ்யா தான்
நம்பர்1 கச்சா எண்ணெய் சப்ளையர்ஆனால் இந்தியாவுக்கு ஈராக்தான் அதிகளவில்்கச்சா
எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது.

அடுத்து சவூதி அரேபியா மூன்றாவதாக ஈரான் நாடும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி யில்முன்னணி யில் இருக்கின்றது.இது போக
நைஜீரியா,ஐக்கிய அரபு நாடுகள், வெனின்சுலா குவைத் கத்தார் என்று பலநாடுகள் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்ஏற்றுமதி செய்து வருகின்றன

அதாவது  இந்தியா சுமார் 65 சதவீதம் கச்சா எண்
ணெயை மத்திய கிழக்கு நாடுகள்என்று சொல்லப் படும் ஈராக் சவூதி அரேபியா் ஈரான் கத்தார் ஐக்கிய அரபு நாடுகளிடம் இருந்தும் 18 சதவீதம் நைஜீரியா போன்றஆப்ரிக்கா நாடுகளில் இருந்தும் இன்னும்
ஒரு 15 சதவீதம் வெனின்சுலா மெக்சிகோ போன்ற தென் அமெரிக்க நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்து கொண்டுஇருக்கிறது

ஆயிரம் தான் நாம் ரஷ்யா வோடு ஒட்டி்உரசினா
லும் அவர்களிடம் இருந்து கச்சாஎண்ணெயை
மட்டும் நாம் இறக்குமதி செய்யாமல் இருக்க முக் கிய காரணம்ரஷ்யா வின் கச்சா எண்ணெய் விலை மற்ற அரபு நாடுகள் விற்கும் கச்சா எண்ணெயை
விட  விலையை விட அதிகமானது.
.
காரணம் என்னவென்றால் மத்திய கிழக்குநாடு்க ளை விட ரஷ்யா வுக்கும் இந்தியாவுக்கும் உள்ள தூரம் அதிகம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்ரஷ்யா இந்தியாவில் இருந்து சுமார் 5000
கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.ஆனால்
சவூதி அரேபியாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொலைவு சுமார் 3500 கிலோ மீட்டர் தான்

ரஷ்யா வில் இருந்து கச்சா எண்ணெயை நாம் இற க்குமதி செய்தால் போக்கு வரத்து செலவு அதிகரி க்கும் .இதனால் தான்  நாம் கச்சா எண்ணெய் தேவைக்கு அரபு நாடு களையே நம்பி இருக்கிறோ ம்.இதையும்விட முக்கிய மானது ரஷ்யாவின் கச்சா
எண்ணெய் அரபு நாடு களிடம் உள்ள கச்சா எண் ணெயை வி ட  அடர்த்தி அதிகமானதுஅதை சுத்தி கரிப்பு செய்யும் அளவுக்கு இப்போது நம்மிடம் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தகுதி இல்லை..

இதனால் தான் ரஷ்யா வின் கச்சா எண்ணெ யை இந்தியா தவிர்த்து வந்தது.. ஆனால்எல்லாவற்றை
யும் தொலை நோக்கம்  கொண்டு சிந்திக்கும் மோடி ஆயில் விசயத்திலும் தொலை நோக்கம் கொண்ட
ஒரு திட்டத்தை உருவாக்கினார்

இதன் படி ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இந்தியா
வுக்குள் நுழைந்தால் தான் பிற்காலத்தில் அமெரிக் கா வின் கட்டுப்பாடுஇல்லாது இந்தியா வில் பெட் ரோல் டீசல்விலை இருக்கும் என்று நினைத்த மோடி
கடந்த வருடம் குஜராத்தி ல் இருக்கும் எஸ்ஸார் சுத் திகரிப்பு ஆலையை ரஷ்யாவின் அரசு நிறுவனமா ன  ராஸ்னெப்ட் என்கிற பெட்ரோலிய நிறுவனத்துக் கு அளிக்க உத்தரவிட்டார்

சும்மா இல்லங்க...சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய்
கொடுத்து ரஷ்யாவின் அரசு பெட்ரோ லிய நிறுவன மான ராஸ்னெப்ட்  இந்தியாவின் ரூயா குரூப் நிர்வ கித்து வந்த எஸ்ஸார்ஆயில் நிறுவனத்தை வாங்கி இந்தியாவில் பெட்ரோல் சப்ளை செய்ய ஆரம்பித்து விட்டது

எஸ்ஸார் நிறுவனத்தின் 20 மில்லியன் டன் சுத்திக ரிப்பு ஆலை, பவர் பிளான்ட்  கேப்டீவ் போர்ட்  கூடவே 3,500 பெட்ரோல் பங்கு என்றுஎல்லாவற்றையும் அள் ளி எடுத்து க்கொண்டுஎஸ்ஸார் நிறுவனத்தை குஜ ராத்தில்்இருந்து துரத்திவிட்டு  ரஷ்யாவின் ராஸ் னெப்ட்  இந்தியாவில் ஜக்கியமாகி விட்டது

இப்பொழுது நீங்கள் இருக்கும் ஊரில் கண்டிப்பாக ஒரு எஸ்ஸார் பெட்ரோல் பங்குகட்டிப்கொண்டு இருப்பார்கள்.. நான் நிறையஇடங்களில் பார்த்து இருக்கிறேன் .எல்லாமே ரஷ்யாவின் பெட்ரோல் தான்.அது மட்டுமல்லாது ரஷ்ய நிறுவனமான
ராஸ்னெப்ட் கொடுத்த 75 ஆயிரம் கோடியை வைத்து ரூயா குரூப் இந்திய வங்கிகளிடம் வாங்கிய
சுமார் 50 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்த
உத்தரவிட்டுள்ளார் மோடி..

பாருங்கள்.. ஊத்தி மூட இருந்த ஒரு இந்திய
பெட்ரோல் நிறுவனத்தை ரஷ்யா நாட்டுக்கு அளித்து
அதன் மூலம் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெ யை அவர்களையே 5000 கிலோ மீட்டர் தொலைவில்
இருந்து கொண்டு வர வைத்து அவர்ககளையே
சுத்தி கரிப்பு செய்ய வைத்து அவர்களையே பெட்ரோல் பங்குகளை உருவாக்க வைத்து 3500
கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரபு நாடு களிடம்
இருந்து வாங்கும் விலைக்கே பெட்ரோல் கிடைக்க
வைத்தது மோடியின் சாதனை தானே..

இது ஆரம்பம் தான்.. இன்னும் சில வருடங்களில்
ரஷ்யாவும் இந்தியா வின் முக்கியமான கச்சா
எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் லிஸ்டில் இருப்பார்
கள் சரிப்பா.இப்பொழுது ஏன் பெட்ரோல் விலை
கூடிக் கொண்டு வருகிறது என்று கேட்.கிறீர்களா..

ரஷ்யா வை பொருளாதார ரீதியாக வீழ்த்தநினைத்த
ஒபாமா அதன் எண்ணெய் ஏற்றுமதிக்கு ஆப்பு வைக்க அமெரிக்காவின் எடுபிடி நாடுகளான ஈராக் சவூதிஅரேபியா போன்ற நாடுகளை கச்சா எண்
ணெய் உற்பத்தியை அதிகரிக்க வைத்தது தான்
மோடி ஆட்சிக்கு வந்த நேரத்தில் பெட்ரோல் டீசல்
விலை குறைந்தது..

தேவைக்கு அதிகமாக ஒரு பொருள் கிடைக்கும் பொழுது அதன் விலை குறையும்அல்லவா..அந்த அடிப்படையிலேயே கச்சாஎண்ணெய் உற்பத்தி அதிகரித்த தால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது.இதனால் ரஷ்யா வோடு கச்சா
எண்ணெய் டீலிங் வைத்து இருந்த நாடுகள்
சவூதி அரேபியா ஈராக் ஈரான் போன்ற ஓபெக் நாடுகள் பக்கம் திரும்பஆரம்பித்தார்கள்.
..
இதில் காமெடி என்னவென்றால் ரஷ்யாவுக்கு ஆப்பு வைக்கிறோம் என்று கச்சா எண்ணெய் உற்பத்தி யை அதிகரித்து விலையை குறைத்து வழங்கிய  சவூதி அரேபியா ஈராக் நாடுகள்  கடைசியில் தங்களுடைய பொருளாதாரமும் காலியாகி வரு வதை நினைத்து அமெரிக்காவிடம் ஒப்பாரி வைத்து உற்பத்தியை குறைத்து மீண்டும்  விலையை  ஏற்றி விட்டார்கள்.

இப்படி கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யாவை முன் வைத்து அமெரிக்கா ஆடும் விளையாட்டை ரசித்து கொண்டே  அமெரிக்காவுக்கு எதிரான ரஷ்யாவுடனும் ஈரானுடனும்  மோடி அழுத்தமாக கை
குலுக்க ஆரம்பித்தார்.இதனால் என்ன ஆனது தெரியுமா?

ரஷ்ய அரசின் பெட்ரோல் நிறுவனமான ராஸ்னெப்ட்
இந்தியா வுக்குள் நுழைந்து்்பெட்ரோல் சப்ளை
செய்ய ஆரம்பித்து விட்டது.இன்னொரு ரஷ்ய
இயற்கை எரி வாயு நிறுவனமான கேஸ்புரோம்
இந்தியாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் பே
இயற்கை எரிவாயுவை கப்பல் கப்பலாக அனுப்ப
ஆரம்பித்து விட்டது..

இதை விட முக்கியமானது  என்னவென்றால் மோடி ஆட்சி க்கு வருவதற்கு முன் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்யும்நாடுகள் லிஸ்ட் டில் ஈரான் 6 வது இடத்தில்இருந்தது. ஆனால் இப்பொ ழுது  2 வதுஇடத்திற்கு வந்து விட்டது. விரைவில்
முதல் இடத்திற்கு வந்தாலும் ஆச்சரியமல்ல..

ஏனெனில் ஈரான் இந்தியாவுக்கு் சாபாகர் துறை முகத்தை பரிசளித்துள்ளது.அரபிக் கடலில் இந்தியா
வின் பாதுகாப்பு க்கும் ஆப்கானிஸ்தானோடு இந்தியா வர்த்தக ம் செய்வதற்கும் ஈரானின்
சாபகார் துறைமுகம் தான் முக்கியமானது.இதை
மோடி இந்தியா வின் கஸ்ட்டிக்கு கொண்டு வந்து
விட்டார்.

அதனால் இனி இந்தியாவே நினைத்தால் கூட  ஈரானை கழற்றி விட முடியாது. . அந்தளவிற்கு இந்தியா ஈரான் உறவு படு  ஸ்ட்ராங்காக இருக் கிறது.இன்னொரு விசயம் என்னவெனில் அமெ ரிக்காவின் எதிர்ப்பை மீறி ஈரானிடம் இந்தியா
கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தி
யாவுக்கு சலுகைகளை அள்ளி வீசுவதாக ஈரான்
அறிவித்துள்ளது..

பாருங்கள்.. அமெரிக்கா ரஷ்யாவோடும் ஈரானோ டும்  பிசினஸ் வைத்துக் கொண்டால் அந்த நாட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் என்று
கூறியதை முன் வைத்தே ரஷ்யா ஈரானோடு
பல சலுகைகளை வாங்கிக்கொண்டு அவர்களோடு
பிசினஸ் செய்யும் மோடி மாதிரி ஒரு பிசினஸ் மேன்
யார் இருக்க முடியும்?

இன்னொரு விசயமும் கூறுகிறேன்..இந்த மாதிரி
அமெரிக்கா வின்பேச்சைக் கேட்டு ஈராக் சவூதி அரே பியாபோன்ற நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தி
யை குறைத்து விலையை ஏற்றும் என்று மோடி எதிர் பார்த்து இரண்டு வருசத்துக்கு முன்பே அமெரிக்கா
வின் எதிரிகளான ரஷ்யாவோடும் ஈரானோடும்
பிசினஸ் டீலிங்கை முடித்து விட்டார்..

இனி வருங்கால ங்களில் ஈரானும் ரஷ்யாவும் தான் இந்தியா வின் பெட்ரோலிய தேவைகளை்நிறை
வேற்றும் நிலை வரும் பொழுது  அமெரிக்காவும் அதன் எடுபிடி நாடுகளும் இந்தியா 🇮🇳 விதிக்கிற
நிபந்தனைகளுக்கு கட்டு பட்டு இந்தியா வுடன்
பிசினஸ் செய்ய காத்து இருப்பார்கள்..

*என்றும் அன்புடன்,*

*எம்.சரவணக்குமார்@எஸ்.கே*
*<எஸ்.கே>தமிழ் இணையம் ™ வாட்ஸ் ஆப் குழு*
*மதுரை*👈🇮🇳🚀🌍
*வாட்ஸ் ஆப் எண்*
*9842171532*🌺🌻🌹🌼
*முகநூல்: SMS KING SK*

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...