Wednesday, 17 October 2018

500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது கொடுத்த பலன்கள்

மோடி கொண்டுவந்த GST மற்றும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது கொடுத்த பலன் என்ன தெரியுமா தமிழ் மக்களே சொல்லுகிறேன் படியுங்கள்.

1. நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு என் மனைவி போய் இருந்த போது, அங்கு பூண்டு 5 கிலோ 100 ரூபாய் 4 கிலோ 100 ரூபாய் என்று விற்றுக் கொண்டு இருந்தார்களாம். 200 ரூபாய்க் விற்ற ஒரு பொருள் 20 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. அதாவது பூண்டு விவசாயம் செய்யும் விவசாயி தனக்கு வருமானம் குறைவாக இருக்கிறது என்று வெளியில் வரவில்லை. 200 ரூபாய் விற்கும்போது அவர் பெற்றபோது அடைந்த திருப்தியைவிட இப்பொழுது குறைவாக இருக்கலாம். இருந்தாலும் அவர் திருப்தியாக இருக்கிறார். 200 ரூபாயில் 20 ரூபாயை கழித்தால் 180. இந்த 180 ரூபாய் முன்பு எங்கே போனது. இப்பொழுது அந்த 180 மக்களுக்கு கிடைக்கிறது. இதுதான் மோடி கொண்டுவந்த திட்டங்களின் பலன். மக்கள் நேரடியாக பலன் அடைகிறார்கள்.

2. முன்பு எல்லா அரசியல் வாதிகளும் பெட்ரோல் டீசல் விலை ஏறினால் மற்றய பொருட்களின் விலைகள் ஏறும் என்று சொல்லிக் கொண்டு இருப்பாரகள். குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் வேறு தொழில் இல்லாததாலும் தன் தொழிலில் தோல்வி அடைந்து விட்டதாலும் அரசியலுக்கு வந்தவர்கள். இவர்களுக்கு நீண்ட தூர பார்வை கிடையாது. இப்பொழுது பெட்ரோல் டீசல் விலைகள் உயர்ந்து இருக்கிறது. எந்த பொருட்களின் விலைகளும் உயர வில்லை. விலைகள் குறைந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள். இதுதான் மோடி திட்டங்களின் பல பலன்கள்.

இப்படி எழுதிக் கொண்டே போகலாம் மோடி திட்டத்தின் பலன்களை.

பெரியதாக எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள். வேறு நாட்களில் பார்க்கலாம்.

நான் பாரதிய ஜனதா உறுப்பினர் கூட இல்லை. இது இங்கு முக்கியமானது

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...