Wednesday, 17 October 2018

இந்த தேசத்தை நேசிக்கும் ஒரு கிறித்துவநண்பரின் இந்த பதிவு

சமீபத்தில் நான் படித்த அபாரமான பதிவு  (இந்த தேசத்தை நேசிக்கும் ஒரு கிறித்துவநண்பரின் இந்த பதிவு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது....Hatsoff to him)

நன்றிகள்: Stanley Rajan

தமிழகத்தில் பிறந்த எத்தனையோ விஞ்ஞானிகள் உண்டு, அவர்கள் எல்லாம் வெள்ளையனால் கொண்டாடபட்டார்கள். சீனிவாச ராமானுஜம் போலவே , சொல்லபோனால் அவரை விட அதிகமாகவே கொண்டாடபட்ட தமிழர் சி.வி ராமன்

திருச்சி திருவானைக்காவலில் பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் பிறந்தார். காவேரிகரை கொடுத்த அபூர்வ மனிதரில் அவரும் ஒருவர்

சந்திர சேகர வெங்கட் ராமன்

இயற்பியலில் அவர் மேதை. சென்னை விசாகபட்டினம் என படித்தவர்தான் ஆனால் விஞ்ஞானம் அவருக்கு இயல்பாய் வந்தது

பெரும் ஆராய்ச்சி முடிவுகளை அவர் வெளியிட்டபொழுது உலகம் மிக ஆரவாரமாய் அவரை கொண்டாடியது, இதோ நோபல் பரிசு என கொடுத்து கவுரவித்தது

ஆம், வானமும் கடலும் ஏன் நீல நிறத்தில் தோன்றுகின்றது என சொன்ன முதல் விஞ்ஞானி அவர்தான்

அதாவது ஓளி ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர் சொன்ன முடிவு, சூரிய ஓளியின் 7 நிறங்களில் நீல நிறம் அதிகமாக சிதறடிக்கபடுகின்றது அதனாலே வானமும் கடலும் நீலமாக தெரிகின்றன‌

இந்த முடிவு பவுதீக உலகை புரட்டிபோட்டது. அவர் சொன்ன ஆய்வு முடிவு உண்மை எனவும் நிரூபிக்கபட்டது, 1930ல் அவருக்கு நோபல் பரிசும் கொடுக்கபட்டது.

அக்காலம் ஐன்ஸ்டீன் எல்லாம் ஒளிபற்றி ஆராய்ச்சி செய்த காலம். அந்த நேரத்தில் சிவி ராமனின் முடிவு ஐன்ஸ்டீனையே வியக்க வைத்தது

சாதாரண சாதனை அல்ல அது.

இந்திய விஞ்ஞானி இயற்பியலில் வாங்கிய முதல் நோபல் அது.

அதன் பின் உலகின் எல்லா விருதும் தேடி வந்தது, இங்கிலாந்து வழங்கிய சர் பட்டம் (இம்சை அரசனில் வடிவேலு கேட்பார் அல்லவா?) இத்தாலி , அமெரிக்கா என எல்லா நாடுகளும் கொண்டாடின‌

தன் முதுமை காலத்தை ராமன் மைசூரில் கழித்தார், காரணம் மைசூர் சமஸ்தானம் அவரை சிறப்பு விருந்தினராக அமர்த்தி கவுரவபடுத்தியது.

பின்னாளில் மாநில பிரிவினை வரும்பொழுது அவர் மைசூர் வாசியானார். அதனால் அவர் பிறப்பால் கன்னடன் என சொல்லிவிட முடியாது, பிறந்ததும் கற்றதும் தமிழகத்தில்தான்
உலகெல்லாம் கொண்டாடபட்ட ராமன் ஒரு தமிழர். தமிழர் அறிவின் உச்சம்

ஆனால் இத்ததமிழகத்தில் பேச்சு கலைஞர் அண்ணா, சினிமாகாரன் ராமசந்திரன் இன்னும் சில இம்சைகள் போல அடையாளபடுத்தபட்டாரா? என்றால் இல்லை

ஏன்? ஏனென்றால் அவர் பிராமணர்

தமிழ்நாட்டில் பிறந்த அறிவு சூரியனான அவர் பிராமணர் என்பதால் மறைக்கபட்டார்

என்னதான் திராவிடம், பகுத்தறிவு இம்சைகள் பேசினாலும், அதில் சில சாதித்தோம் என சொல்லிகொண்டாலும் ஒரு விஷயம் உண்மை, உறுத்தும் உண்மை

அறிவாளிகளையும், பெரும் சிந்தனையாளர்களையும், கற்றவர்களையும் கொண்டாட மறுக்கபட்டோம் அல்லது மறக்கடிக்கபட்டோம்

அவர்கள் பிராமணராயிருந்தால் இன்னும் கூடுதல்

வெறும் குப்பைகளையும், பிதற்றல்காரர்களையும் பெரும் பிம்பமாக உருவாக்க தொடங்கினோம், விளைவு பெரும் விபரீதம் எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன‌

அதனை விடுங்கள், இனி திருத்த முடியாது. இங்கு எல்லாமே அப்படித்தான்

ராமன் எப்படி இந்த நீலநிற விஷயத்தை கண்டுபிடித்து நோபல் வாங்கினார்?

விஷயம் ஒன்றுமல்ல , சூரியன் ஏழு குதிரைகள் இழுக்கும் தேரில் வருவதாகவும், கண்ணனும் ராமனும் நீல நிறம் கொண்டவர்களாகவும் சொல்வது இந்துமதம்

விஞ்ஞானம் வந்து சூரிய ஓளியில் 7 வண்ணங்கள் உண்டு என சொல்வதற்கு பல்லாயிரகணக்கான ஆண்டுக்கு முன்பே இந்துக்கள் எப்படி 7 குதிரைகள் என சொன்னார்கள் என்ற வியப்பு அவருக்கு வந்தது.

7 குதிரைகள் என்பது சூரிய ஒளியில் இருக்கும் 7 நிறங்கள் என்பதை விஞ்ஞானம் படித்த ராமன் உணர்ந்தார், அது என்ன கண்ணன் நீலநிறம் என்பது அவரை சிந்திக்க வைத்தது.

அதிலே ஆராய்ச்சியினை செலுத்திய அவர் விஞ்ஞான உண்மையினை கண்டறிந்தார்

ஆம் நிறங்களில் விஸ்வரூபம் எடுப்பது நீல நிறம் என்ற தெளிவு அவருக்கு கிடைத்தது

வானமும், கடலும் நீலமாக இருப்பதன் விஞ்ஞான தத்துவம் அவருக்கு புரிந்தது

இந்த நீல நிற விஸ்வரூபத்தைத்தான் இந்துக்கள் கண்ணனில் கண்டார்களா? என்பது விளங்கிற்று

இந்த நாட்டின் ஆதார மத நம்பிக்கையிலிருந்து விஞஞான விளக்கத்தை கொடுத்தார் ராமன், உலகம் அவரை கொண்டாடியது

இப்படி இன்னும் எத்தனை விஞ்ஞான தத்துவம் இந்துமதத்தில் ஒளிந்திருக்கின்றதோ தெரியாது, அதற்கு இன்னொரு ராமன் வந்தால்தான் தெரியும்

பகுத்தறிவு அது இது என சொல்லி தமிழகத்தில் அந்த தமிழனின் புகழ் மறைக்கபட்டாலும் உலகில் அவருக்கான இடம் அப்படியே இருக்கின்றது

இன்றும் அது ராமன் விளைவு என்றே கொண்டாடபடுகின்றது

வெள்ளையன் அப்படிபட்ட தமிழர்களை சாதி பாராது ஊக்குவித்தான் ராமன் உலகினை புரட்டிபோடும் முடிவினை சொன்னார்

தமிழக திராவிட கட்சிகள் சினிமாவினை வளர்த்தன, பின் அவனின் நிற ஆராய்ச்சி எப்படி இருக்கும்?

"ஊதா கலரு ரிப்பன்" என்ற அளவில்தான் இருக்கும்

இந்த மாபெரும் விஞ்ஞானி ராமனுக்கு, தமிழகத்தில் பிறந்த அந்த மேதைக்கு நினைவிடம் இருக்குமா? அவர் பெயரில் பல்கலைகழகம் உண்டா? கல்லூரி உண்டா? இல்லை விருதுதான் உண்டா? என்றால் இல்லை

யார் யாருக்கோ அடையாளம் உள்ள தமிழகத்தில் இம்மண்ணின் அறிவு சூரியன், நோபல் வென்றவனுக்கு ஒரு நினைவு அடையாளமும் இல்லை

பின் எப்படி உருப்படும் தமிழகம்? நல்ல விஞ்ஞானிகள், சிந்தனையாளர் எப்படி வருவார்கள்?

பகுத்தறிவு, பிராமண வெறுப்பு, இந்து மத புறக்கணிப்பு என சொல்லி பல நல்ல விஷயங்களையும் தமிழகம் இழந்துவிட்டது. அதனை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்.

7 குதிரைகள் பூட்டிய சூரிய தேரும், கண்ணனின் நீல நிறமும் வெறும் கட்டுகதை அல்ல, அவை எல்லாம் பெரும் விஞ்ஞான தத்துவம் என உலகிற்கு நிரூபித்தவர் பிறந்த நாள் இது

இந்துமதத்தில் இன்னும் ஏராளமான விஞ்ஞான தத்துவம் உறங்கிகொண்டிருக்கின்றது, மூட நம்பிக்கை எனும் பெயரில் அவைகளை புறக்கணிக்க கூடாது என உலகிற்கு செவிட்டில் அறைந்து சொன்ன இந்தியன் பிறந்த நாள் இது.

இந்துக்களின் ஒவ்வொரு அடையாளத்திலும் ஒரு அறிவியல் இருக்கும் , ஆழ நோக்கினால் பிரபஞ்ச உண்மை வெளிபடும் என முதன் முதலில் நிரூபித்தவர் பிறந்த நாள் இது.

இன்று அந்த சர் சி.வி ராமனின் பிறந்த நாள். எங்கள் தமிழகத்திலும் ஒரு நோபல் விஞ்ஞானி இருந்திருக்கின்றான், அவன் உலக விஞ்ஞானிகளுக்கு, யூத , ஜெர்மன் விஞ்ஞானிகளுக்கு சரிக்கு சமமாக அமர்ந்து விருது வாங்கியிருக்கின்றான் என்பதை நினைத்து பெருமை அடைவோம்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...