Wednesday 17 October 2018

25 ஆண்டுகளாக தன்னுடைய வாழ்வை இந்து சமுதாயத்திற்காக உழைத்து பல மு

25 ஆண்டுகளாக தன்னுடைய வாழ்வை இந்து சமுதாயத்திற்காக உழைத்து பல முறை தீவரவாதிகளின் கொலை முயற்சி தாக்குதல்களை எதிர்கொண்டும்,
இந்து சமூகத்திற்காக பற் பல போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை சென்று மீண்ட,
காவிப் போராளி"IRSS " அமைப்பாளர் அண்ணாதுரை அவர்களின் குரல் பதிவில் ஆய்வாளர் இராஜேந்திரன் என்பவர் குறித்த அவரின் உருக்கமான ஆடியோவை நாம் கேட்டிருப்போம்.

தான் வீர மரணம் அடைய தயாராக இருப்பதாக கூறுகிறார்.
ஆனால், தன் குடும்பத்தை மிகவும் துனபுறுத்துகிறார்கள் என்று தான் ஆடியோவில் கேட்கிறார்.

அப்படிபட்ட காவிப் போராளியை ஒருபோதும் நாம் விட்டு கொடுத்து விட கூடாது.

காவி சொந்தங்களே,
இந்து சமுதாயப் பணி மிகக் கடினமானது.
அதிலும் களப்பணி மிக கடினமானது.
அந்த களப்பணி என்பது,
எதிரியை நேருக்கு நேர் சந்திப்பதும்,
காவல்துறையை ஓயாமல் அணுகுவதும்,
நியாயமான முறையில் தேவைபட்டால் அரசு இயந்திரங்களோடு போராடுவதும்,
இந்து இயக்கப் பணிகள், ஆன்மீகப் பணிகள், எதிர்ப்புகள், பிரச்சனைகள், சட்டம், காவல் துறை, தலைமறைவு வாழ்க்கை, தாக்குதல், சிறை, ஜாமீன், நீதிமன்றம், வழக்கு, வாய்தா........
இதோடு குடும்பச் சுமை என்று சொல்லொண்ணா துயரங்கள் அடங்கிய கடினமான பணி என்பதை அறிவீர்கள்.

இதில் எல்லாவற்றிலும் அனுபவப்பட்டவரே IRSS அண்ணாதுரை .

ஒரு சாதாரண மனிதனை இராணுவ வீரனாக மாற்ற கிட்டதட்ட 25 கோடி ரூபாயும், மூன்று ஆண்டு காலமும் ஆகிவிடும்.

அது போல் உயிரை துச்சமென கருதும் IRSS அண்ணாதுரை போன்றவர்களின்  25 ஆண்டு கால களப்பணி அனுபவம் என்பது 25,000 நபர்களுடைய அனுபவத்திற்க்கு நிகரானது.

அப்படி பட்ட காவிப் போராளிக்கு உதவிடுங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் செய்ய வேண்டியது.

இந்த போஸ்ட்டை COPY செய்து  Paste செய்து அதில் அனுப்புனர் என்பதற்க்கு முன்பாக உள்ளதை எடிட் செய்து நீக்கிவிட்டு,

அனுப்புனர் என்ற இடத்தில் உங்கள் பெயர், முகவரி டைப் செய்து கடைசியாக " இப்படிக்கு "என்ற இடத்தில் உங்கள் பெயரை பதிவு செய்து கீழ்கண்ட ஒவ்வாரு மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகளின்
E-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டியது மட்டுமே.

இது உடணடியாக நொடியில் சேர்ந்து விடும்.

உங்களுக்கு செலவும், கால நேரமும் மிச்சமாகும்.
அதே நேரம் பல்லாயிரக்கணக்கான கோரிக்கை மனுக்கள் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சென்றடையும் பொழுது துரித நடவடிக்கையும் இருக்கும்.

காவிப் போராளியும் காப்பாற்றப்படுவார்.

நாம் நம்முடன் இருக்கும் எந்த ஒரு இந்து சமூக போராளியையும் விட்டு தரக்கூடாது.

அவர் சமூக விரோதியல்ல,
ஒரு ஆய்வாளர் வேட்டையாட....

காவிகளே, நம் பதிவுகளின் மூலம் நம் ஒற்றுமையின் பலத்தை காட்டுவோம்.

ஜெய்ஹிந், வந்தே மாதரம் என்று முழங்கும் ஒவ்வொரு காவி வீரனையும் காப்போம்.

இந்த பதிவை எல்லா காவிகளுக்கும், காவிக் குழுக்களுக்கும் பல முறை அனுப்பி கொண்டே இருங்கள்.

#SAVE IRSS அண்ணாதுரை

அனுப்புனர் :

பெறுநர்:
காவல்துறை தலைவர் DGP,
தமிழ்நாடு காவல்துறை,
இராதாகிருஷ்ணன் சாலை,
சென்னை

பொருள் :
வலைதளங்களில் தன்னுடைய உயிருக்கு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் என்பவரால் ஆபத்து உள்ளதாகவும் வரும் குரல் பதிவில் உள்ள கோரிக்கை மீது நடவடிக்கை கோரி...

ஐயா, சில நாட்களாக திரு. அண்ணாதுரை IRSS என்ற அமைப்பின் நிறுவனரும்,
தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் பா.ஜ.க மாவட்ட இளைஞர் அணி செயலாளராகவும்,
சேதுபாவாசத்திர ஒன்றிய முன்னாள் பொதுச் செயலாளராகவும்,
விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் மாவட்ட அமைப்புச் செயலாளராகவும், முழு நேர ஊழியராகவும்,
தஞ்சை மாவட்ட முன்னாள் மாவட்ட அமைப்பாளராகவும்,
IRSS என்ற அமைப்பை நடத்தி வருபவர் சமீபத்தில் ஒரு குரல் பதிவை வெளியிட்டு இருந்தார்.
அந்த குரல் பதிவில் அவர் கூறிய விஷயங்கள் என்னையும் இந்து சமுதாய நலன் விரும்பும் இலட்சக்கணக்கான மக்களையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்தள்ளது.
திரு: அண்ணாதுரை அவர்களின் குரல் பதிவை எழுத்து வடிவாக தர முயற்சித்துள்ளேன்.
அவருடைய குரல் பதிவின் சுருக்கம் இது தான் .
ஜெய் ஸ்ரீ ராம்!
                   ௐ
_________________________
" எனது அருமை ஹிந்து சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம்"
-------------------------------
அண்ணாதுரையாகிய என் பதிவு...

சமீபத்தில் ஒரு ஆடியோ பதிவிட்டிருந்தேன்.
அதற்கு எனது ஹிந்து சகோதரர்களாகிய உங்களுடைய ஒத்துழைப்பு இருந்த காரணத்தினால் அந்த விஷயம்  நிறைய நபர்களை சென்றடைந்தது.
அதற்கு முதலில் நான் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்......!

நான் என்னுடைய பதினாறு வயதிலிருந்து என்னுடைய உடல் பொருள் என அனைத்தையும் ஹிந்து மதத்திற்காக அர்ப்பணம் செய்தவன்.
இந்து சமுதாயத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறேன்.....!

யாருக்கு பிரச்சனை என்று சொன்னாலும் முதல் ஆளாக அங்கு சென்று அவர்களுக்கு உதவி செய்திருக்கிறேன்,செய்து வருகிறேன்.
அதனால் பல வழக்குகளை இன்றைக்கும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்......!

சமீப காலமாக இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் மூலமாக 15-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் என் மீது போடப்பட்டிருக்கிறது....!!

நான் ஜாமீன் வாங்கினால் மீண்டும் என் மீது வழக்கு என தொடர்ச்சியாக வழக்கு போட்டு கொண்டு உள்ளனர்......!
அதனால் இன்றைக்கு என்னுடைய தொழிலை இழந்து பொருளாதாரத்தை இழந்து தனியாக நின்று கொண்டிருக்கிறேன்.....!.
என் வீட்டை  கூட அடமானம் வைத்து வழக்குகள் நடத்திக் கொண்டிருக்கிறேன்.
இப்பொழுது போட்ட வழக்கில் இருந்து இன்றைக்குத்தான் எனக்கு ஜாமீன் கிடைத்தது.
ஆய்வாளர் இராஜேந்திரன் மீண்டும், மீண்டும் பொய் வழக்குகள் போட்டு என்னைசமூக விரோதியாக வெளிப்படுத்த முயற்சிக்கிறார்.
அதோடு, கூலிப்படைகளை ஏற்பாடு செய்து என்னை கொல்லவும் முயற்சி செய்கிறார்.
அது முடியாவிட்டால் பொய் வழக்குகளின் அடிப்படையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க முயற்சிக்கிறார்.
என்னுடைய மனைவியை பல வகைகளில் அதை வெளியே சொல்ல முடியாத அளவு கீழ்தரமான முறையில் .......
என்று மிகவும் வருத்தப்பட்டு தொடர்கிறது அவருடைய குரல் பதிவு.
நான் மிகவும் மன உறுதி மிக்கவன்.
ஆனால், எனக்கே தற்கொலை செய்யும் அளவிற்க்கு மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.
இதே வேறு யாராவதாக இருந்தால் இந்நேரம் தற்கொலை செய்து கொண்டு இருப்பார் என்றெல்லாம் மிகவும் வருத்தமுடன் பதிவிட்டுள்ளார்.

எந்த நேரத்திலும் தன்னுடைய உயிருக்கு ஆய்வாளர் இராஜேந்திரன் என்பவரால் ஆபத்து நேரலாம் என்று மீண்டும், மீண்டும் ஆணித்தரமாக கூறுகிறார்.

இந்த குரல் பதிவு வலை தளங்களில் மிகவும் பதட்டமாக மீண்டும், மீண்டும் பதிவிடப்டுகிறது.
இதனால் எங்களை போன்ற தேச பக்தர்கள் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளோம்.
அந்த குரல் பதிவில் உள்ள கருத்துக்கள் எந்தளவு நம்பகத்தன்மையுடையது என்று தெரியவில்லை.
ஆனால், இந்த குரல் பதிவை கேட்ட பொது மக்களிடையே பதட்டமும், கவலையும் பெரியளவில் ஏற்பட்டுள்ளது.

ஐயா அவர்கள் இந்த குரல் பதிவில் உள்ள அண்ணாதுரை அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ஐயா, நான் சமூகத்தில் பொறுப்புள்ள குடிமகனாக இருப்பதால் பொது நலன் கருதி இந்த மனுவை அளிக்கிறேன்.
                    இப்படிக்கு
                
நகல்:
1) மாண்புமிகு தமிழக ஆளுநர், கவர்னர் மாளிகை, கிண்டி, சென்னை.
2)மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தனி பிரிவு.
தலைமை செயலகம், சென்னை.
3) தலைமை செயலாளர், தலைமை செயலகம், சென்னை, தமிழ்நாடு,
__________________________________
மாண்புமிகு : குடியரசுத் தலைவர்,
மாண்புமிகு : பாரத பிரதமர் அவர்கள்
மாண்புமிகு : உள்துறை செயலாளர், புதுடெல்லி .
உயர்திரு : உச்ச நீதிமன்ற நீதிபதி .
உயர்திரு : உயர்நீதிமன்ற நீதிபதி மதுரை/சென்னை.
ஆணையாளர்,
தமிழ்நாடு மனித உரிமை ஆணையம்.

ஆணையாளர்,
தேசிய மனித உரிமை ஆணையம்.

Governor - govtam@nic.in
Chief secretary - cs@tn.gov.in
            tnstateeoc@gmail.com
President - presidentofindia@rb.nic.in
PMO email id - connect@mygov.nic.in
Prime Minister Complaint Cell Email Address : indiaportal@gov.in
Ministry of Home affairs - jscpg-mha@nic.in
Supreme Court - supremecourt@nic.in
High Court - regrvigil.tn@nic.in
State human rights commission - shrc@tn.nic.in
National human rights commission - nalsa-dla@nic.in.
DGP tamilnadu - dgp@tn.gov.in

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...