செருப்பு உள்ளேயும், சிலைகள் வெளியேயும் செல்லும் ஸ்ரீரங்கம் கோவில்
-----------------------------------------------------------------------------
இன்று மதியம் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமியின் மதிய பூஜையான “பெரிய அவசரம்” நடக்கின்றதா என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க கோவிலுக்குச் சென்றேன். சென்ற வருடம் யுனெஸ்கோ அமைப்பினர் ஸ்ரீரஙக்த்திற்கு வந்து சென்றது முதல் என்னை கோவிலுக்குள் விடாமல் இந்த அரக்கர்கள் தடுத்து வந்தது பலருக்குத் தெரியாது. ஆனால், 11.10.2018 அன்று சென்னை நீதிமன்றத்தில் இதை நான் கூறியபோது, மாண்புமிகு நீதிபதிகள் இந்த தகாத செயலைக் கண்டித்தனர். அதன் ஆடிப்படையில் இன்று மதியம் சென்றேன்.
பெரிய அவச்ரம் நடந்த விதத்தை இதற்கு முந்தின பதிவில் பதிவிட்டிருக்கிறேன்.
கோவிலிலிருந்து வெளியே வரும்பொழுது, ஆயிரம் கால் மண்டபம் வாசலில் ஒரு சின்ன டிரக் இருந்தது. அந்த வண்டிக்கு நம்பர் பிளேட் முன்பக்கத்தில் இல்லை. உள்ளே எட்டிப் பார்த்தேன், இரண்டு ஜோடி செருப்புகள் இருந்தன.
25.05.2018 அன்று கோவிலுக்குள் ஒரு கிராதகன் நுழைந்து பெருமாளின் மீது செருப்பை வீசியது நினைவிருக்கும். அதற்குப் பின், இந்த கோவிலின் தகுதியில்லாத செயல் அலுவலர், பல தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் அவனை ஒரு பைத்தியக்காரன் என்றும், இனி இப்படி நடக்காமல் இருக்க தக்க நடவடிக்கை எடுத்ததாகவும் சொன்னான். ஆனால், இன்றும் கோவிலுக்குள் செருப்புகளும் இன்னும் ஏதேதோ வந்த வண்ணம் இருக்கின்றன.
அங்கு இருந்த காவலாளியிடம் பதிலில்லை. எங்கிருந்தோ ஒரு பெண் போலீஸ் வந்தார். அவருக்கும் வண்டி யார் கொண்டுவந்தார் என்பது தெரியவில்லை. அவரிடம் வண்டி வந்து போகும் ரிஜிஸ்டர் உள்ளதா என்று கேட்டேன்!! அது தெரியாது என்றார்!! என்ன இப்படி சொல்கிறீர்கள் என்று நா அவரை கெட்க, அவர் வேக வேகமா அவர் மற்றொருவருக்கு போன் போட்டு அந்த இடத்திற்கு வருமாறு சொன்னார்.
கோபுரத்தின் அடியில் இரண்டு அறைகள் இருக்கின்றன. அதில் எட்டிப் பார்த்தால் அதில் ஏராளமான செருப்புக்கள். கோவிலுக்குள் வாகனம் அனுமதி இல்லை என்கின்ற ஒரு பலகையும் அங்கு இருந்தது. அதைக் காட்டி எப்படி அனுமதித்தீர்கள் என்று கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதே, மற்றொரு வண்டி கோவிலுக்குள் வர முயன்றது. அதில் இருக்கும் ஓட்டுனர் கால்களிலும் செருப்பு. உள்ளே எதற்கு வண்டி செல்கிறது என்று ஓட்டுனரைக் கேட்டேன். திருப்பணி வேலை என்றார். அதற்கு வண்டி எதற்கு என்று கேட்டேன். பதில் இல்லை. வண்டியை உள்ளே போகக்கூடது என்று சொன்னேன். போகவேண்டும் என்றால் என்னை ஏற்றிவிட்டுச் செல்லவேண்டும் என்று சொன்னதும் வண்டியிலிருந்த நபர்கள் இறங்கி நடந்து உள்ளே சென்றனர்.
இது நடந்து கொண்டிருக்கும் பொழுதே ஒரு ஆட்டோ கோவிலுக்குள் நுழைய முற்பட்டது. ஆட்டோ ஓட்டுனரின் கால்களிலும் செருப்பு. ஆட்டோவில் என்ன உள்ளது என்று பார்த்தால், அதிர்ச்சி. கூடை கூடையாக அதிரசம். வெளியே ஏதோ ஒரு இடத்தில் தயாரித்து கோவிலுக்குள் “தேவஸ்தான பிரசாதமாக” விற்கப்படுகின்றது. எங்கிருந்து வருகின்றது என்று கேட்க, சிட்டாய்ப் பறந்தார் நம் ஆட்டோ ஒட்டுனர்.
அதற்குள் கோவிலின் உள்ளே இருந்த வண்டி வெளியே வந்தது. ஓட்டுனரிடம் எதற்கு உள்ளே சென்றீர்கள் என்று கேட்டேன். ஏன் வண்டியில் நம்பர் பிளேட் இல்லை என்று கேட்டேன். ஏதேதோ சாக்கு சொன்னார்.
போலீசிடம் கேட்டேன். இப்படித்தான் பல சிலைகள் கடத்தப்படுகின்றன என்று தெரிந்தும் எப்படி இந்த வண்டிகளை எப்படி விடுகின்றீர்கள். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு புகார் குடுப்பேன் என்று சொன்னேன். சிலை கடத்தலுக்கு உடந்தையாக ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டேன்.
வண்டிகள் உள்ளே வந்து போவதை ஒரு ரிஜிஸ்டர் போட்டு, வரும் வன்டியின் எண், உள்ளே சென்ற நேரம், எந்த காரணத்திற்கு வந்தது, யார் ஓட்டுனர், அவர் செல் நம்பர், முகவரி, எத்தனை மணிக்கு வெளியே செல்கிறது என்ற அடிப்படை விவரஙக்ள் இருக்கவேண்டாமா?!!!
நம் கோவில்கள் கொள்ளை போய்க் கொண்டு இருக்கின்றன. ரன்வீர் ஷ்வின் வீட்டிலும் கிரண் ராவின் வீட்டிலும் ஒரு முழு கோவிலே கிடைத்தது நாம் அறிந்ததே. ஸ்ரீரங்கதிலிருந்து பல பொக்கிஷங்கள் இப்படித்தான் போலீஸ் உதவியுடன் வெளியே சென்றுள்ளது.
உள்ளே செல்லும் வாகனத்தை சோதனை இடுவார்களாம், வெளியே போகும்பொழுது எதையும் பார்க்க மாட்டார்களாம். என்ன ஆணவ பதில்.
இந்த விவகாரங்களை வரும் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் என் ஆவணப்பத்திரமாக நான் தாக்கல் செய்வேன். இந்த அரக்கர்களுக்கு அவர்கள் எங்கு இருக்கவேண்டுமோ அங்கு இருக்க வேண்டியது செய்யப்படும்.
ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஸ்ரீ ராம்!
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!
No comments:
Post a Comment