Wednesday, 17 October 2018

காஷ்மீர்: பாஜக ஆதரவு திடீர் வாபஸ்-

காஷ்மீர்: பாஜக ஆதரவு திடீர் வாபஸ்-
முதல்வர் மெகபூபா ராஜினாமா-

ஆளுநர் ஆட்சி அமல்!

முக்கிய காரணம் -

பிடிபி கட்சி வேண்டுகோளுக்கு இணங்க ரம்சான் பண்டிகையை முன்னிட்டு இந்தியா ராணுவ தாக்குதலை நிறுத்தி இருந்தது, இதை பயன்படுத்திய காஷ்மீர் தீவிரவாதிகள் ஊடுருவலை அதிகரித்தது , பாகிஸ்தான் ராணுவம் அதை மதிக்காமல் நோன்பு மாதத்தில் கூட தாக்குதலை தொடர்ந்தனர்,
அதில் ஏழு ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர் ,,
ஆனால் இப்போது இந்திய இராணுவம் நோன்பு முடிந்த பின் தீவிரவாத குழுக்களின் மீது இராணுவம் தாக்குதல் நடத்த கூடாது என காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கூறினார் ,, இதை மோடி அரசாங்கம் ஏற்று கொள்ள வில்லை அதனால் கூட்டணி முறிந்தது. இதுதான் உண்மை

ஆதரவை வாபஸ் வாங்க 5 முக்கியமான காரணங்கள்

1 ) காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகமானது. கடந்த மாதம் முழுக்க ரம்ஜான் என்பதால், காஷ்மீரில் தாக்குதல் நடத்த கூடாது என்று மத்திய அரசு முடிவெடுத்து இருந்தது. சரியாக ரம்ஜான் வரை இது முறையாக கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த நாட்களில் தீவிரவாதிகள் அதிக வளர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இதனால் மத்திய அரசு மீண்டும் தாக்குதல் நடத்த முடிவெடுத்தது. ஆனால் காஷ்மீர் பிடிபி அரசு அமைதி தொடர வேண்டும் என்று கூறியது.

2 ) காஷ்மீரில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 7 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். அதில் அவுரங்கசீப் என்ற ராணுவ வீரர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். பின் கொடுமைப்படுத்த பட்டு கொலை செய்யப்பட்டார். இதை மெகபூபா முப்தி அரசாங்கம் கண்டு கொள்ளவே இல்லை இந்த சம்பவம் காஷ்மீரில் மேலும் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தியது.

3) சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சுஜாத் புகாரியின் கொலை. இந்த கொலைக்கு பிடிபி கட்சி பெரிய எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இதுவும் இரண்டு கட்சிக்கும் இடையில் பிரிவினையை உண்டாக்கி உள்ளது. சுஜாத்தை கல்புர்கி, கவுரி லங்கேஷ் போல இந்துத்துவா அமைப்புகள் கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதால், பிடிபியின் கண்டனம் பாஜகவை கோபம் கொள்ள செய்துள்ளது.

4 ) காஷ்மீரில் கோவிலில் வைத்து சிறுமி, வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் முறையான விசாரணை செய்ய வற்புறுத்தியது பிஜேபி ,, ஆனால் அதை அரசாங்கம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. போதே இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டது. அப்போது பாஜக இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கியதால், பிடிபி மென்மையாக கண்டித்து இருந்தது. இதனால் பாஜகவை சேர்ந்த காஷ்மீர் துணை முதல்வரும் மாற வேண்டிய சூழ்நிலை உருவானது.

5 ) காஷ்மீரில் ராணுவவீரர் அவுரங்கசீப் கடத்தி கொல்லப்பட்டது, பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுப்பது உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவுக்கும், பிடிபி கட்சிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்தான் கூட்டணி முறிவுக்கு காரணம்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் ஆலோசனை நடத்திய சில மணி நேரங்களில் பாஜக தலைவர் அமித்ஷா இக்கூட்டணியை முறிக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிவினைவாதிகள் கொட்டத்தை அடக்க கவர்னரிடம் ஆட்சி ஒப்படைப்பு

இனி காஷ்மீரை பற்றிய பயம் நமக்கு வேண்டாம்.. மோடிஜி மேல் நம்பிக்கை இருக்கிறது.. 60 வருடங்களாக காங்கிரஸ் செய்யமுடியாததை அதிரடியாக மோடிஜி செய்வார்,, காஷ்மீரில் கல் எறிபவர்களுக்கு இனி கல்லறை தான்

ஆளுநர் ஆட்சி கொண்டு வந்து தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு வந்து அடக்குங்கள்

மீண்டும் என்கௌன்டர் தொடங்கட்டும்

42வது ராஷ்டீரிய ரைபிள்ஸ், அதே இடத்தில நிலை நிறுத்தட்டும்

180வது பட்டாலியன் சிஆர்பிஎப், காஷ்மீர் எஸ்ஓஜி, ஆகிய படைகள் களமிறங்கட்டும்

பாகிஸ்தான் அதிரட்டும்

நாளைய செய்தி -

"பாகிஸ்தான் எல்லையில்.அத்து மீறல்........
பாகிஸ்தான் எல்லை கடந்து சென்று இந்திய ராணுவம் குண்டு மழை பொழிந்தது, அதில் நூற்றுக்கணக்கான பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் மடிந்தனர்".

இனிமேல் இப்படித்தான் இஸ்ரேல் பாணியில் இருக்கவேண்டும்.

- இந்திய இராணுவம்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...