Wednesday, 17 October 2018

ஆலயத்துக்குப் போனால்.... அங்கே செலவிடும் நேரம் ஒரு தவம்...

ஆலயத்துக்குப் போனால்.... அங்கே செலவிடும் நேரம் ஒரு தவம்...

காந்தம் ஒன்றோடு இரும்பு துண்டு ஒன்றை சில மணி நேரம் சேர்த்து வைத்து இருந்தால் அந்த இரும்பு துண்டும் கொஞ்சம் காந்த சக்தி பெறுகிறது...

காந்தத்தில் ஒரு ஆணியை இணைத்து விட்டால் அந்த ஆணியின் மறு முனை கூட காந்த சக்தி பெறுகிறது...

cycle dynamo... ஒரு பேரிங் போல் சைக்கிள் சக்கரத்தில் உரசி நடுவில் ஒரு உலோக துண்டு சுழல... அதை சுற்றி அதோடு சேராமல் ஆனால் அந்த உலோக சுழற்சியால் மின்சாரம் உற்பத்தி செய்யும் செம்பு கம்பி சுருள் (காப்பர் காயில்) dynamo மின்சாரம் உற்பத்தி செய்கிறதே... இதையெல்லாம் பதிவுக்கு உள்ளே செல்லும் முன்பு மனதில் இருத்திக் கொள்வோம். ..

ஆலயத்தின் தர்ம தரிசன  que வில் கால் கடுக்க நிற்கிறோம்... ஆனால் பக்கத்து வரிசையில் 100 200 என்று கட்டணம் கொடுத்து express தரிசனம் பெறுபவர்களை கண்டு நமக்குள் கொஞ்சம் சலனம் ஏற்படும்...

கருவறையில் இருக்கும் மூலவர் காந்தம் போன்றவர்... ஈர்ப்பு சக்தி வாய்ந்த ஒரு கல்லில் அனல் மற்றும் புனல் மின்சார சக்திகளை கும்பாபிஷேக சடங்குகள் மூலம் கமகம் நிறைந்த மந்திர ஓலி களால் மெருகூட்டி உள்ளே வைத்து உள்ளனர்.

அங்கே நாம் அதிக நேரம் நின்று இருப்பது. ... காந்தத்தை (இறைவனை) நெருங்கி இருக்கும் இரும்புத் துண்டு போல நாம்...

மேலும், கருவறையில் இருக்கும் காந்த சக்தியை வலம் வரும் copper coil  எலும்பு நரம்பு களால்  ஆன நாம் சுற்றி வருவதால்... நம் /பிரபஞ்ச இயக்கத்துக்கான உந்து இயக்க சக்தி உருவாகிறது...

எல்லாவற்றுக்கும் மேலாக... the more time we spend in que (darshan process) our mind is focussed on one particular issue/point... அதாவது வரிசையில் நாம் செலவிடும் அதிக நேரம் முழுவதும் நமது மனம் உள்ளே இருக்கும் இறைவனை தரிசிக்க போகிறோம் என்று ஒரே சிந்தனையில் லயிக்கும்... இதுவே ஒரு தியான நிலை...

மேலும், ஆலய வரிசையில் நாம் செலவிடும் நேரத்தில் நாம் அனாவசிய சிந்தனை பேச்சுக்களை தவிர்த்து எதிரில் ஒரு விரோதியே வந்தாலும் ஆலயத்துக்கு உள்ளே இருக்கிறோம் என்று நமக்குள் எழும் கோப தாப எண்ண்ங்களை தவிர்க்க கட்டுப்படுத்த முயல்வோம்... அதுவும் நமக்கு சிறந்த பயிற்சி...

ஆலயங்களுக்கு செல்வோம்... கட்டண தரிசனம் தவிர்ப்போம்... மன பயிற்சியை மேற்கொண்டு அதிக இறை  சக்தியை பெறுவோம்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...