மோடி வெளிநாட்டு பயணங்கள் அதிகம் கிண்டல் செய்யப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன மாரிதாஸ்?{கேள்வி:பிரசன்னா}
பிரதமரின் பயண விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாகவே பிதரமர் அலுவலகம் ஒவ்வொரு முறையும் வெளியிடுகிறது. எனவே கொஞ்சம் மிமீஸ் விட்டு விட்டு அதில் என்ன சொல்லபடுகிறது என்று எத்தனை பேர் படிகிறார்கள்!!! அவர் போவது வருவது இருக்கட்டும் , எதனால் போகிறார் வருகிறார் என்று நமக்கு தெரிந்தால் தானே கொஞ்சமாது அரசு நிர்வாகம் சார்ந்து அறிவு வளரும்.
பிரதமர் பயணம் இருநாட்டு உறவுகள் சார்ந்து இருக்கும் , இல்லை சில நாடுகளின் கூட்டமைப்பில் கலந்து கொள்ள செல்வார். இந்த இரண்டும் தான் இருக்கும். அதை state visit , summit என்று பிரதமர் பயணங்கள் காரணம் வெளியிடபடுகிறது. அதை முறையாக பார்க்கவும்.
மிக சிக்கலான விவகாரம் நிறையா உண்டு. என்னால் முடிந்த வரை எளிமையாக கூற முயற்சிக்கிறேன்.
------------------------------------------------
வெளிநாட்டு பயணங்கள் தேவை என்ன?
மோடி வெளிநாட்டு பயணங்கள் இருக்கட்டும் , நீங்கள் தான் பிரதமர் என்று நினைத்து கொள்ளுங்கள் - நான் மாரிதாஸ் உங்கள் ஆலோசகர். இலாக்க மந்திரிகள் அனைவர்க்கும் பொறுப்புகள் இருக்கு குறுந்தொழில், ராணுவம் , நிதி துறை , உள்துறை என்று நாட்டின் அனைத்து விவகாரங்களையும் தனி தனியே மந்திரிகள் அமர்த்தி ஆட்சி நடக்கிறது. இப்போ உங்கள் முக்கிய பணி என்ன என்றால் நாட்டின் உறவுகளை மேம்படுத்துவது - அது எப்படி நடக்கிறது?
-Nuclear Suppliers Group (NSG) என்று கூறப்படும் அமைப்பில் இந்தியா இடம்பெறவில்லை. ஆனால் நம்மிடம் அதற்கான Nuclear technology இருக்கு. அதாவது எப்படி புல்லட் ரயில் தொழில்நுட்பம் ஜப்பானிடம் உள்ளதோ அதே போல நம்மிடமும் பல தொழில்நுட்பங்கள் உண்டு. அதனை மற்ற நாடுகளுக்கு சேவையாக வழங்கினால் சில லட்சம் கோடி வருமானமும் , அந்த நாடுகளுடன் வலுவான நட்புறவும் ஏற்படும்.
NSG உறுப்பினர் இல்லாததால் நம்மால் Nuclear சார்த்த தொழில் நுட்பத்தை உலகநாடுகள் வாங்க, விற்க முடிவது இல்லை. எனவே அதில் உறுப்பினர் ஆக இருக்கும் தடைகள் என்ன அதை எப்படி தீர்ப்பது? இது போல் தடைகள் உடைக்க வேண்டும்.
-உலகத்தில் சொந்தமாக GPS (global positioning system) வைத்துள்ள 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. விசேஷம் என்னவென்றால் இந்தியாவின் இஸ்ரோ மூலம் நாம் அனுப்பும் செலவு மிக மிக குறைவு. எனவே உலக நாடுகள் GPS (இராணுவ தேவை , வானிலை ஆய்வு என்று பல காரணங்களால்) சேவைக்கு கொடுக்க முடியும்.
Automatic Weather Station (AWS), Agro-meteorological (AGROMET) என்று சில நுறு தொழில் நுட்பங்கள் நம்மிடம் உண்டு. இந்த தொழில் நுட்பங்கள் கொண்டு கடல் ஆய்வுகள் செய்யலாம். மண்ணுக்குள் கிடக்கும் நிலகரி , இரும்பு போன்ற தனிமங்கள் சார்ந்து ஆய்வுகள் நடத்த என்று பல தொழில் நுட்பங்கள் இந்தியாவிடம் இன்று உண்டு.
இந்த அளவு குறைந்த செலவில் நாம் செயற்கைகோள்கள் அனுப்ப முடியும் , குறைந்த செலவில் நம்மிடம் தொழில் நுட்பங்கள் உண்டு ஆனால் பாருங்க ஸ்ரீலங்கா Colombo Port City project சீனாவிடம் சென்று விட்டது. இந்திய நிறுவனங்கள் ஏன் அதை எடுத்து செய்யவில்லை? அதன் மதிப்பு 25,000கோடி. இது போல பெரிய projects எல்லா நாடுகளிலும் தேவை படும். அதை கைபற்றுவது மிக மிக அவசியம். அதனால் பெரிய அளவில் நமக்கு நிரந்தர வருமானம் உண்டு. ஆனால் மோடி அரசு அதை எடுக்கவில்லை எடுத்தால் "இலங்கை மீனவர்களை கொல்லுது - இவனுக அவனுக்கு 25,000கோடியில் துறைமுகம் கட்டி தராணுக" என்று கிளப்பை விடுவானுக.
ஆனால் வியட்நாமில் எண்ணெய் எடுத்து கொடுக்கும் பணியை இந்தியாவின் ONGC கைபற்றியது.
-BPCL,NTPC,GAIL,ECIL என்று அரசு நிறுவனங்கள் அனைத்திலும் பல தொழில் நுட்பங்கள் உண்டு. அதனை மற்ற நாடுகளுக்கு கொடுத்து சேவை தருவதன் மூலம் நமக்கு லாபம் அவர்களுக்கு நல்ல பயன் கிடைக்கும். அத்துடன் இருநாடுகளும் நல்ல நட்புறவை உருவாக்க முடியும்.
இது தான் மிக மிக முக்கியம் மற்ற நாடுகளுடன் உறவை மேம்படுத்த. நமக்கு பொருளாதார பலம் கிடைக்கும்.
50லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை நாம் ஏற்றுமதி செய்து கிடைக்கும் வருமானமும் - irso வின் GSAT மூலம் 3,500-4,000 kg எடையுள்ள ஒரு செயற்கைகோளை மற்ற நாட்டுக்கு வானில் அனுப்பி கிடைக்கும் லாபமும் ஒன்று. அதுவும் வருடம் வருடம் சந்தாவேறு கிடைக்கும்.
எனவே அறிவு ஏற்றுமதி ஆவது மிக மிக முக்கியம் எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும். இது புரிகிறதா????
இந்தியாவில் இருந்து அறிவாளிகளை மற்ற நாடுகள் கொண்டு செல்கிறார்கள் , நமக்கு இது போல பல projects கிடைத்தால் தானே நம் நாட்டிலேயே புத்திசாலிகளுக்கு வாய்ப்பு உருவாக்க முடியும் அதனை கொண்டு நாடும் நன்மை அடையும்.
எனவே நீங்கள் பிரதமராக வந்தவுடன் நான் உங்கள் ஆலோசகர் கூறுவேன் "இந்த இந்த நாடுகளுடன் இந்த இவ்வளவு, வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகவேண்டும், இந்த நாடுகளுடன் இப்படியான சேவையை நாம் பெறவேண்டும் கொடுக்கவேண்டும் என்று ஆயிரம் விவகாரம் ஒவ்வொரு நாட்டுக்கும் தனி தனியே இருக்கும். பங்களாதேஷ் , பிரேசில் , தென்அமெரிக்க என்று எல்லா நாடுகளுடனும் என்ன என்ன செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்து அனுப்ப பல துறைகள் தொடர்புடன் நாம் நாட்டின் தூதரகம் எல்லா நாடுகளிலும் இயங்குகிறது. அதை எல்லாம் உங்களிடம் கூறி இவைகளை முடிக்க வேண்டும் என்று கேட்க தான் முடியும். அதை சாமர்த்தியமாக முடிக்கும் புத்திசாலி தனம் முழுக்க உங்களுடைய தனிபட்ட குழு உடையது.
இது பொருளாதார விவகாரம். .
இது தவிர ஆப்கன் , வியட்னாம் , பிலிப்பைன்ஸ் , ஜப்பான் நாடுகளுடன் சேர்ந்து இராணுவ ஒப்ந்தங்கள் மேற்கொள்வது. இதனல் மூலம் பொது பிரச்சனையை எப்படி இருநாடுகளும் தீர்ப்பது. எடுத்துக்காட்டுக்கு நமக்கு காஷ்மீர் விவகாரத்தில் மற்ற நாடுகள் உதவி தேவை எப்படியோ - அது போல தென் சீன கடல் பகுதியில் சீனாவின் அடாவடித்தனத்தை எதிர்கொள்ள ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இந்தியாவின் உதவி தேவை.
ஆகா ராணுவம் , பொருளாதரம் சார்ந்து இருநாடுகளுடன் உறவு எப்படி வைத்துகொள்வது, அதில் இருக்கும் சிக்கல்களை எப்படி பேசி தெளிவு பெறுவது என்று வருடம் இருமுறியாது சென்று வருவது கட்டாயம் தேவை.
-------------------------------------------------
அடுத்து;
BRICS, East Asia Summit, G20 Summit, SAARC Summit, G4, ஐநா சபை என்று நாடுகளில் கூட்டமை உருவாக்கியுள்ள அமைப்புகள் கூட்டும் சந்திப்புகளுக்கு சென்று பங்கேற்க வேண்டும்.
G20என்பது உலகத்தில் நான்கில் மூன்று பங்கு resource பொருளாதர பலம் கொண்ட நாடுகள் கூட்டமைப்பு. இந்த நாடுகள் சேர்ந்து தங்களுக்குள் எப்படியான வர்த்த பிரச்சனைகளை சரி செய்வது , தெளிவான யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் வர்த்தம் நடக்க என்ன வழிமுறைகளை நாடுகள் பின்தொடரலாம் , மக்கள் இடபெயர்ச்சிக்கு வாழ்க்கைக்கு தேவையான ஏற்பாடுகளை நாடுகள் எப்படி அணுகவேண்டும் , மற்ற நாடுகளில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு , தீவிரவாத பிரச்சனை , உலக வெப்பமயமாதல் போன்ற பூமி சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்று தங்களுக்குள் ஒரு பொதுவான தீர்மானம் வந்தாக வேண்டும்.
இல்லை எவன் எக்கேடு கெட்ட எனகென்ன என்று நாடுகள் செயல்பட்டால் நாடுகளிடையே துரோகங்கள் உருவாகும் , அது பிரச்சனை பெரிதாகி இன்னொரு உலக போருக்கு தான் வழி செய்யும். எனவே நாடுகளிடையே கட்டாயம் ஒரு வெளிபடைதன்மை , பொது செயல்பாடு , ஒற்றுமை தேவை காரணமாக summit வருடம் வருடம் நடக்கும்.
பலன் நிறைய உண்டு :
ஒரு எடுத்துக்காட்டுக்கு ஒரு புதுவிதமான பாக்டீரியா நோய் பரவலால் பிரேசில் குழந்தைகள் பாதிக்கப்பட அதற்கான தொழில் நுட்பம் பிரிட்டனிடம் இருந்தால் அதை இது தான் சந்தர்ப்பம் என்று அதிக விலைக்கு விற்க கூடாது. மனித குலம் காப்பாற்ற தான் அறிவியல் ஆய்வுகள் நடக்கின்றன , அதில் ஆதாயம் தேடாமல் கொடுத்து உதவ முன்வரவேண்டும் , மற்ற நாடுகள் அதனை பெற்று கொடுக்க தேவையான நிதி உதவிகள் கொடுத்து உதவ வேண்டும். இப்படி தான் மக்களை காப்பாற்ற முடியும். அது தான் ஆரோக்கியமான உலகத்தை தரும்.
இது தவிர இந்திய மக்கள் மற்ற நாடுகளில் உள்ளனர் அவர்களுக்கு என்ன பிரச்சனைகள் உள்ளன அதை எப்படி அந்த அந்த நாடுகள் தீர்வு கொடுக்கிறார்கள். நமது நாட்டு மக்களுக்கு அங்கே நீதி கிடைகிறதா , அவர்கள் ஆபத்து என்றால் இந்தியா எந்தவிதம் உதவ வேண்டும். என்று ஆயிரம் ஆயிரம் தேவைகள் உண்டு உலக நாடுகளுடன் ஒரு நாடு உறவை மேம்படுத்த.
---------------------------------------------------
சும்மா மிமீஸ் வச்சு பேசுவதெல்லாம் முட்டாள்தனம். இந்த மிமீஸ் என்பது என்ன??? வெறும் populism. வேறு என்ன இதில் இருக்கு?
இந்த சீமான் போன்றவர்கள் பாருங்க எல்லாரையும் கேலி கிண்டல் செய்வர் அது ஏன்??? populist movement. அதாவது மக்களுக்கு மோலோட்டமாக உணர்வை தூண்டி ஆழ்ந்த எந்த சிந்தனையும் இல்லாத பேச்சுகள். முழுக்க உணர்வை தூண்டுவது மட்டுமே எளிமையான வேலை. அது தான் மக்களுக்கும் புரியும். நம்ம மக்களுக்கு GSLV தொழில் நுட்பம் அதன் பயனா புரியும். இந்த நடிகர் சிவகுமார் எல்லாம் இஸ்ரோவை விமர்சிக்க இந்த populist intensity தானே காரணம்.
"அங்கே ராக்கெட் போகுது , என் விவசாயி வயிறு எரியுது" என்று பேசுவது. ஹிந்தி காரன் நல்லா இருக்கான் தமிழ் காரணம் நாசம் ஆனான் என்று பேசுவது எல்லாம் populism. அதில் எந்த அர்த்தமும் கிடையாது.
தமிழ் நாட்டுடைய பொருளாதரம் , கல்வி வளர்ச்சி , வேலை வாய்ப்பு சார்ந்து என்று எந்த புள்ளிவிவரம் எடுக்கவும் அதை கொண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுங்கள் நல்ல நிலையில் தான் உள்ளோம் என்று தெரியும். ஆனாலும் நாசமா போச்சு என்று பரப்பி விடுவது தான எளிமையான வழி.
கம்யூனிஸ்ட் இவ்வளவு வாய்கிழிய பேசுகிறானே இந்தியாவில் வேலைவாய்ப்பில் பின்தங்கிய மாநிலங்களில் முதல் இரண்டு இடத்தில் இருப்பது கேரளா , திரிபுரா தானே. இது உண்மை இல்லையா. கேரளாவில் 1000க்கு 125பேர் , கம்யூனிஸ்ட் திரிபுரா மாநிலத்தில் 1000க்கு 197பேருக்கு வேலை கிடையாது. ஆனால் குஜராத் மாநிலத்தில் 1000க்கு 9 பெருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு இல்லை. இதுலாம் எவன் பேசுகிறான்?
எங்கே மிமீஸ் போடா சொல்லுங்க. மாட்டானுக. தனியார் நிறுவனங்கள் தான் இந்தியாவில் 99% வேலைவாய்ப்பை கொடுப்பது ஆனால் கார்ப்பரேட் எதிப்பு என்று ஒரு கிறுக்குத்தனம் பேசுவது இந்த கம்யூனிஸ்ட். அதனால் கேரளா , திரிபுர எவனும் போவது இல்லை. இப்போ தமிழ் நாட்டில் நக்சல் நடமாட்டம் அதிகம் ஆகிவிட்டது கார்ப்பரேட் எதிப்பு என்று jio சிம் போட்டு பேசுறான். இவன எல்லாம் என்ன திருத்த முடியும்.
மோடி அல்ல நீங்கள் பிரதமராக வந்தாலும் வெளிநாட்டு பயணங்கள் கட்டாயம் செல்லவே வேண்டும்.
---------------------------------------------------------------------
இறுதியாக :
"4 நாள் பயணமாக மோடி சென்ற ஜீன் 24 இந்தியாவில் இருந்து கிளம்பினார் - போர்சுகல் சென்று சேர்ந்தார் அங்கே இருநாட்டு உறவுகள் பேசி முடித்த அன்று இரவு அமெரிக்க சென்றார் அங்கிருந்து 3ஆம் நாள் இரவு கிழம்பி அம்ஸ்ரடாம் சென்றார் - அடுத்து நெதர்லாந்து மீண்டும் இந்தியா வந்து சேர்ந்த அந்த மொத்த பயணத்தை எடுத்து எங்கே மோடி தங்கினார் என்று கூற முடியுமா இந்த கேடுகெட்ட கூட்டத்தால்.
மொத்த பயணத்தில் அவர் விமானத்தில் இருந்தது மட்டும் 33மணிநேரம். 2நாள் தூக்கமும் விமானத்தில் தான். இது போல இந்திய வரலாற்றில் வேகமான நேரத்தை வீணடிக்காத ஒரு பிரதமரை எவனது காட்டுங்க நான் மோடிக்கு ஆதரவாக பேசுவதை நிறுத்திவிடுகிறேன்.
கேலி பேச வெக்கமே கிடையாதா? அந்த அளவுக்கு வெறுப்பு???? மோடி என்றால் ஏதாவது கெட்டது பரப்பி விடனும். அது தானே வேலை இந்த மதம் மாற்றும் கூட்டம் , பெரியார் பக்தர்கள் , சீனாவின் அடிமை கம்யூனிஸ்ட் கூட்டத்துக்கு , பிரிவினை பேசித்திரியும் நக்சல் மாவோஸ்ட் ஆதரவாளர்களுக்கு. நாடு நாசம் ஆனாலும் பரவாயில்லை மோடியை வீழ்த்த வேண்டும்.
அந்த மனிதர் 13வருடம் முதல்வராக இருந்து ஊர் சுற்றி பார்க்கவில்லை இப்போ ஊர் சுற்றுகிறார்??? இதுலாம் ஒரு விவாதம் என்று நம்புகிறவனை என்ன செய்ய?
அதனால் தான் திமுக எவ்வளவு கொள்ளை அடிச்சாலும் ஆட்சிக்கு வரமுடிகிறது, ஈவே ராமசாமி வைக்கம் வீரன் பொய் வரலாறு கூறி தமிழகத்தில் ஏமாற்ற முடிகிறது, எதோ NGOவில் பேசிவிட்டு ஐநா புகழ் திருமுருகன் என்று போராளியாக விகடன் , தி ஹிந்து பத்திரிகைகள் மூலம் மக்களை ஏமாற்ற முடிகிறது.
மிமீஸ் போடுறவன் எல்லாம் உங்களுக்கு அறிவியல் மேதை!!. ஆனால் பெரும் அறிவியல் மேதைகளால் உருவாக்கபடும் பிரதமர் அலுவலகத்தில் இருப்பவர்கள் எல்லாம் இந்த மிமீஸ் உருவாக்குரவனுக்கு தெரியுற அறிவு கூட இல்லை??? இதை நான் என்ன சொல்ல.
இங்கே ஏமாற்றுபவனை விட இந்த ஏமாறுபவன் இருக்கானே அவன...................
-மாரிதாஸ்
No comments:
Post a Comment