Wednesday, 17 October 2018

ஒரு கார் ஓட்டுனரின் பார்வையில் பெட்ரோல் விலை ஒரு சிறிய ஒப்பீடு...

இந்த பார்வை சரிதானே? ஏதும் மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லவும்.

ஒரு கார் ஓட்டுனராக  எனது பார்வையில் பெட்ரோல் விலை ஒரு சிறிய ஒப்பீடு...

வாஜ்பாய் அரசு வெளியேறும் போது (அல்லது) மன்மோகன்சிங் பதவி ஏற்கும் போது
2004 ல் பெட்ரோல் Price = 36.79

மன்மோகன்சிங் வெளியேறும் போது (அல்லது) மோடி பதவி ஏற்கும் போது
2014 ல் பெட்ரோல் Price = 74.6

இன்று பெட்ரோல் Price = 79.43

2004 - 14 மன்மோகனின் 10 வருட காங்கிரஸ் ஆட்சியில் உயர்வு = 74.6 - 36.79 = 37.81
சதவீதத்தில் உயர்வு = 37.81X100/36.79 = 103%
ஒரு வருட சராசரி சதவீத உயர்வு = 10%

2014 - 18 மோடியின் 4 வருட பி ஜே பி ஆட்சியில் உயர்வு = 79.43 - 74.6 = 4.83
சதவீதத்தில் உயர்வு = 4.83X100/74.6 = 6.47%
ஒரு வருட சராசரி சதவீத உயர்வு = 1.5%

இந்தக் கணக்கீடு சொல்வதென்ன? பெட்ரோல் விலை மோடி ஆட்சியில் சராசரியாக ஒரு வருடத்திற்கு 1.5% தான் உயர்ந்திருக்கிறது.

ஆனால் மன்மோனின் 10 வருட ஆட்சியில் இந்த உயர்வு வருடத்திற்கு 10% ஆக இருந்தது.

மோடி ஆட்சியில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துவிட்டது என்பதெல்லாம் வெற்றுக் கூச்சல்தான்.

எந்த ஒரு பொருளின் விலையும் புதிய உச்சத்தைத் தொடுவது என்பது இயல்பான ஒன்றுதான். இயல்பான ஒன்றைக் கூறி கூப்பாடு போடுவது முழுக்க முழுக்க அரசியலே.

ஆனல் பாஜகவின் ஊடகப் பிரிவினர் கூட இதை 'டிபேட்டில்' குறிப்பிடுவதே இல்லை.
இதுதான் மிகப் பெரிய துரதிஷ்டம்.

ஒவ்வொறு இந்தியப் பிரஜையின் ஊதியம் ஒவ்வொறு ஆண்டும் புதிய உச்சத்தை தொட்டு கொண்டேதான் இருக்கிறது. ஒரு தமிழக அரசு ஊழியருடைய ஊதியம் கடந்த 4 ஆண்டுகளி 70% உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை டி.ஏ அதிகரிப்பதன் மூலம் ஒவ்வொரு 6 மாதத்திலும் ஒவ்வொரு அரசு ஊழியரின் ஊதியமும் புதிய உச்சத்தைத் தொட்டு
கொண்டேதான் இருக்கிறது அதை எல்லாம் ஏன் நாம் பேச மறுக்கிறோம்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு நம் ஊதிய உயர்வுடன் ஒப்பிடும் போது தாங்க முடியாத அளவிற்கு உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அப்படியிருப்பின் நாம் கூப்பாடு போடலாம். ஆனால் இன்றைய நிலைமை அப்படி இல்லை.
மேலும் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை போன்ற உணவுப் பொருட்களின் விலை மிகவும் கட்டுக்குள் உள்ளது.

மோடியை மாற்றினால் அனைத்தும் மாறிவிடும் என நம்புபவர்கள்,
மன்மோகனின் 10 வருட ஆட்சியை நினைத்துப் பார்த்தால், தன் நம்பிக்கை எவ்வளவு பொய்யானது என உணர்வார்கள்.

Sharma GS அவர்களின் பதிவு

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...