Tuesday, 13 November 2018

சில கூமுட்டைகளுக்காக ஒரு விஷயம் பார்ப்போம் வாங்க.. இலவசம் என்றால் மிக்ஸியும் கிரைண்டரும் தானா...?

சில கூமுட்டைகளுக்காக
ஒரு விஷயம் பார்ப்போம்
வாங்க..
இலவசம் என்றால் மிக்ஸியும் கிரைண்டரும் தானா...?
......
ஒரு பெண் திருமணம் நடக்க ஆரம்பிப்பது முதல் பார்க்கலாம்..
கல்யாண சீர்1) 4 கிராம் தங்கம் இலவசம்.
2)25000/ 50000₹ பணம் இலவசம்.
பிறகு3) மாசமாகி விட்டால் தொடர் செக் அப் இலவசம்.
4)பிரசவம் GH IL இலவசம்.
5)குழந்தை பிறந்தது முதல் அதற்கு
தடுப்பு ஊசி கள் இலவசம்
6)போலியோ மருந்து இலவசம்
7)அம்மை தடுப்பு ஊசி இலவசம்.
பின்
அந்த குழந்தை நல்லா வளர8) சத்து மாவு இலவசம்.
பிறகு பள்ளிக்கு போக ஆரம்பித்தாள்
9)சீருடை இலவசம்.
10)பாட புத்தகம் இலவசம்.
11)ஜாமென்றி பாக்ஸ் இலவசம்.
முக்கியமாக மதிய உணவு இலவசம்.
கொஞ்சம் வளர்ந்தால் பஸ் பாஸ் இலவசம். இன்னும் வளர்ந்தால் சைக்கிள் இலவசம்.
அப்புறம் லேப்டாப் இலவசம்.
பள்ளிக்கு போகிற இடத்தில் உன் பெண் பிள்ளைகள் கஷ்டம் பட கூடாதுனு
நாப்கின் இலவசம்
இப்படியாக உன்னை படிக்க வைக்க உன் பெற்றோரை விட அரசு செலவிடும் தொகை அதிகம்.
சரி படிச்சாசா..
இட ஒதுக்கீடு.
வேலை வாய்ப்பு முன்னுரிமை.
...
அடுத்து நீ குடியிருக்க வீடு இலவசம்.
அந்த வீட்டிற்கு கரெண்ட் இலவசம்.
விவசாயம் செய்றியா.. அதற்கும் இலவச கரெண்ட்..
அரசு கொடுத்த வீட்டில் நீ சுகமாக காற்று வாங்க ஃபேன் இலவசம்.
ருசியா திங்க மிக்சி இலவசம்
கிரைண்டர் இலவசம்.
பொழுது போக்க டிவி இலவசம்.
பசிக்காம சோறு திங்க அரிசி இலவசம்.
இரண்டாவது குழந்தை பெத்துக்கிரியா.
அதுவும் பெண் குழந்தையா..
அதற்கு ₹10000 இலவசம்
..

கொஞ்சம் வயசாகி போனால் BP sugar மருந்து மாத்திரை இலவசம்.
அதுவும் தாண்டி நோய் வந்தால் சிகிச்சை இலவசம்.
திடீர்னு முடியாம போணா ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓட ஆம்புலன்ஸ் இலவசம்..
கேன்சர் முதல் எத்தனை பெரிய நோய் வந்தாலும் உன்னை பாதுகாக்க
இலவச மருத்துவ திட்டம்..
இதில்லாம தீபாவளி பொங்கல் வந்தால்
வேட்டி சேலை இலவசம்.
வாயசாகி உன் பிள்ளைங்க கூட உனக்கு சோறு போட வில்லை என்றாலும் அரசு உன்னை கை விடாது. அதற்கும் இருக்கு..
விதவை பென்ஷன்..
OAP எனும் ஒல்டு ஏஜ் பென்ஷன்.
இப்படி நீ பிறந்தது முதல் சாகுற வரை
உனக்கு தேவையானதை பாத்து பாத்து செய்கிற ஒரே மாநிலம் தமிழ் நாடு மட்டும்தான்.
...இத்தனை மக்கள் நல திட்டங்கள் வேற எந்த மாநிலத்திலும் இருக்கா...?
....
உடனே இதெல்லாம் வரி பணத்துலத்தன் செய்றாங்க என இத்துபோன கேள்வியை கேட்காதே.
எல்லா மாநிலத்திலும் தான் வரி வசூல் பண்றாங்க.
இவ்வளவு seyraangalaa...?
...
இதெல்லாம் விட்டு விட்டு ஒரு கூமுட்டை சொல்லுதுன்னு வீட்ல இருக்கிற பொருளை தூக்கி போட்டு உடைக்கிரியே..
அறிவில்லை உனக்கு...?

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...