Kalkiraj Duraisamy:
#ரகுராம்ராஜன் பதவி விலகியதும் #உர்ஜித்படேல் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்ட போது குஜராத்தி பிரதமர் குஜராத்தியை ரிசர்வ் பேங்கின் கவர்னராக்கியுள்ளார். இனி ரிசர்வ் வங்கி மோடி அரசின் கைப்பாவையாய்த்தான் செயல்படும் என்று (Doomsday Forecast) நிமித்தம் உரைத்தவர்களைக் கேட்கிறேன்.
நீங்கள் சொன்ன நிமித்தம் (Forecast ) பலிக்கவில்லையே. ஏன்???
உர்ஜித் படேலுக்கும் மோடி அரசுக்கும் முட்டிக்கொண்டதாமே?
அவர் மோடியின் கைப்பாவை என்றால் இப்போது அவர் His Master's Voice கேட்கிறவராய்த்தானே இருந்திருக்க வேண்டும். இல்லையே?
பொய் சொன்னால் போஜனம் கிடைக்காது.
CBI, மோடி அரசின் கைப்பாவையாய்ச் செயல்படுகிறது. பிடிக்காதவர்கள் மீது மோடி சிபிஐயை ஏவி விடுகிறார் என்றீர்களே? ஒரே நாளில் CBI யின் Topbrass இரண்டு பேரையும் பேக் பண்ணி அனுப்பி வைத்து விட்டாரே?
அவரின் ஏவலுக்கு ஆடும் CBI அதிகாரிகளை ஒரே நாளில் தூக்க மோடிக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?
அப்ப, உங்களோட இந்தக் குற்றச்சாட்டும் பொய்தானே?
தன் கட்சிக்காரர் என்று கூடப் பார்க்காமல் கர்நாடகத்தில் முன்னாள் அமைச்சர் #ஜனார்தன்ரெட்டி வீட்டில் சென்ட்ரல் க்ரைம் பிரான்ச் (CCB) ரெய்ட் நடத்தியிருக்கிறது. இப்படித்தான் மோடி ஊழலை ஆதரிக்கிறாரா?
ஆந்திர முதல்வர் #சந்திரபாபுநாயுடு மோடியைப் பதவியில் இருந்து நீக்க பாஜக வை ஆட்சியில் இருந்து விரட்ட அணி சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
யார் யாருடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார் தெரியுமா?
சோனியா காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி,
திமுகவின் தலைவர் ஸ்டாலின்,
கர்நாடக முதல்வர் குமாரசாமி
முன்னாள் உ பி முதலவர்கள் மாயாவதி அகிலேஷ் யாதவ்,
மம்தா பேனர்ஜி
லாலு பிரசாத் யாதவ்
இன்னும் நிறைய கறைபடாக் கரங்களுக்குச் சொந்தக்காரர்களுடன்.
ஒருவேளை இவர் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்று விட்டால் இவர்களில் யார் பிரதமர் வேட்பாளர்?
சந்திரபாபுநாயுடுவா?
முலாயம்சிங்யாதவா?
லாலுபிரசாத்யாதவா?
மாயாவதியா?
மம்தாபேனர்ஜியா?
இல்லை ராகுல்காந்தியா?
இந்தத் தொழில் முறைக் கொள்ளையர்களின் (Professional thiefs) ஒரே நோக்கம் என்ன?
தங்களை, தங்கள் இஷ்டம் போலக் கொள்ளையடிக்கவிடாமல் CBI Enforcement Directorate, CVC வருமானவரித்துறை போன்ற அமைப்புகளைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் மோடியைப் பார்த்து இவர்கள் பயந்து போயிருக்கிறார்கள்.
இவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமின்மை இருப்பதால் ( feeling insecure of their future) இவர்கள் அணிசேர்கிறார்கள், அணிசேர்க்கிறார்கள், மோடியைத் தாக்க / தூக்க.
நான் நமது பாரத பிரதமர் மோடியை ஆதரிக்கிறேன். காரணம்?
இன்றைய சூழலில், நாடு இருக்கும் நிலையில், மோடியைப் போன்ற ஒரு Visionary பிரதமராய் இருக்க வேண்டும் தொடரவேண்டுமென்று விரும்புகிறேன்.
பொது ஜனங்களே விழியுங்கள்.
கொள்ளைக்காரர்கள் கூட்டணி சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களது ஒரே நோக்கம் நாட்டைக் கொள்ளையடிப்பது மட்டுமே.
அதற்குத் தடையாக மோடி இருப்பதால் அவரைத் தூக்க அணி சேர்க்கிறார்கள்.
திரு மோடியை அவர்களை அடுத்த முறையும் பிரதமராக தேர்ந்தெடுத்து நம் தாய்நாட்டைக் காப்பாற்றுவோம்.
No comments:
Post a Comment