Tuesday, 13 November 2018

ரகுராம்ராஜனுக்கு ஒரு கடிதம்

ரகுராம்ராஜனுக்கு ஒரு கடிதம்

ஐயா உங்களின் பெர்க்லி - கலிபோர்னியா உரை இந்திய Media களுக்கு வெறும் வாயில் அவல் .

முழுவதும் படித்தால் புத்திமதி சொல்வது எளிது. செயலாக்க மே கடினம் என்பது புரியும்.

Step by Step ஆக பார்ப்போம்.

1. GST,DeMoN, பொருளாதார வளர்ச்சியை பின் தங்க வைத்து விட்டது. என்று பேசி இருக்கிறீர்கள்

இதில் 50% உண்மை என்ன அது?
DeMon, ஒரு கருப்புப் பண ஒழிப்பு சீர்திருத்தம் - சீர்திருத்தங்கள் எந்த நாட்டில் எந்த காலத்தில் உடனடியாக பலன் தந்தது ? சொல் வீர்களா?

மோடிஜியோ, BJPயோ, உடனடி பலன் தரும் என்று சொல்லவில்லை.
ஆனால் உடனடியாக தந்த பலன் 1. நாட்டில் புழங்கிய பணம் அத்தனையும் வங்கிக்கணக்கில் வந்தது

2 அன்று வரை இருந்த கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டது. அதாவது கடந்த 2 ஆண்டுகளில் புதிதாக "நாம்" உருவாக்கிய கருப்புப் பணம் தவிர.

வரி வசூல் உயர்ந்தது. நக்சலிசம் ஒடுக்கப்பட்டது.கள்ள நோட்டு ஒழிந்தது. பயங்கரவாதி ஆட்டம் அடங்கியது இதெல்லாம் கொசுறு சாதனைகள்.

இன்னும் De Mon னிலால் நீண்ட கால பலன்கள் என்ன என்பதை காலம் சொல்லும்.

சரி போகட்டும்.
GsTக்கு வருவோம். ராஜன் ஜி

இந்த வரி சீர்திருத்தம் செய்ய சட்டம் கொண்டு வர வே எத்தனை ஆண்டுகள் ஆனது?

.இதை கொண்டு வந்த இத்தாலிய குடும்ப  காங்கிரசே எவ்வளவு எதிர்த்தது?

எத்தனை வரிகள் ஒழிக்கப்பட்டு இன்று ஒரே வரி ஆனது?

எத்தனை முறைG ST கவுன்சில் கூடி வரிகளை குறைத்தது?

எவ்வளவு சிரமங்கள் - எதிர்ப்புக்கள்? - ஆனால் இன்று எவ்வளவு நற்பலன்கள்!

ஐயா, நீங்கள்  இந்த Short term difficulty யை தான் சொல்லியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால் நீங்களும் உங்கள்  பங்குக்கு 3 சீர்திருத்தங்களை சொல்லியிருக்கிறீர்கள்.

1. உள்கட்டமைப்பு - Cleaning up
2 மின் உற்பத்தி உயர - Cleaning UP
3 வங்கிகள் படுத்தும் பாடை சுத்தம் செய்வது.
வரவேற்கிறேன்.

ஆனால் வங்கி சுத்தம் ஏற்கனவே  தொடங்கி விட்டது.
N PA வசூல் தெளிவாக கூடி வருகிறது நீங்கள் உட்பட அனைவரும் அறிந்ததே.

இன்னும் வங்கி சுத்தம் தொடர் வதாலேயே MS MEக்கான 59 நிமிடத்தில் புதிய கடன் வசதி அறிவிப்பு.

மின் உற்பத்தியில் மோடி அரசின் சாதனை இதுவரை இந்தியா பார்த்திராத ஒன்று. இன்னும் தொடர்கிறது .

புதிய உள் கட்டமைப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கி முதல் கட்டமாக நாடு முழுதும் சாலை, நீர் வழி, ஆகாய வழி போக்குவரத்து கட்டமைப்பு பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது.

இவை நீங்கள்  சொல்வதற்கு முன்பே தொடங்கியது.

அது சரி நீங்கள் சொன்ன அதிகார குவியல் ஒரே இடத்தில் மத்திய அரசில் இருக்கிறது என்றீரே அது சரியா? ....

இதுநாள் வரை 67 ஆண்டுகள் காங் ஆண்ட போது யாரிடம் இருந்தது அதிகாரம்?

2004 - 14 UPA ஆண்ட போது PM இடம் இருக்க வேண்டிய அதிகாரம் இத்தாலியன் கம்பெனி முதலாளி சோனியா ராஜீவ் பெரோஸ் கானிடம் மட்டுமே இருந்ததே யார் அவர்?

அப்போது நீங்கள் கவர்னராக இருந்தீர்கள் என்பது என் நினைவு ரகுராம்ஜி

இப்போது அதிகாரம் PMoவிடம் இருப்பது - மத்திய அரசின் ஆட்சியில் அப்படித்தானே இருக்க முடியும்?

வேறு யாரிடம் இருக்க வேண்டும் எதிர்பார்க்கிறீர்கள்,

எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது. ராஜன்.

வம்பிழுத்து விவகாரம் செய்ய துடிக்கும் பத்திரிக்கை சிலவற்றுக்கு வேண்டுமானால் உங்கள் பேச்சில் சில வரிகள் உதவலாம் . அவ்வளவுதான்.எஸ்.ஆர்.சேகர் மாநிலப் பொருளாளர் -

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...