Tuesday, 13 November 2018

தேர்தல் வந்தாலோ அல்லது டீசல் பெட்ரோல் விலை இறங்கினாலோ

தேர்தல் வந்தாலோ அல்லது டீசல் பெட்ரோல் விலை இறங்கினாலோ உடனே மோடி அரசை திட்டுறதுக்குன்னே நாலஞ்சு கூலிப்படையை கூட்டிட்டு வந்து திட்டவைப்பாங்க. இந்த நாலு வருசத்திலே திருப்பி வாங்கின அடியாலே பல கூலிப்படைகள் ஓடிட்டன. அமார்த்த்யா சென் போன்ற காண்டிராக்டுகளுக்கு ரொம்பவும் வயசாயி உளற ஆரம்பிச்சுட்டதாலே அதையெல்லாம் கூப்பிட முடியல.

மிச்சம் இருக்கும் ஒரே ஆள் ரகுராம் ராஜன் தான். கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாமல் வெக்கமே இல்லாம் கூவுற ஆள்.

அதுவும் வெளிநாட்டிலே ஒரு பேச்சு உள்நாட்டிலே ஒரு பேச்சு என பேசிடும் ஆள். ஆறு மாசம் முன்னாடி இதே கூலிப்படை டாவோஸ் உலகப்பொருளாதார மாநாட்டிலே ஜிஎஸ்டியை பாராட்டியது என நம்மூர் மறதிகளுக்கு தெரியவா போகிறது. அப்படியே டிவிட்டரிலே கேள்வி கேட்டால் உடனே டிவிட்டர் இந்தியா தலைமை அலுவலகத்திடம் சொல்லி கணக்கையே தூக்கிடலாம் என இருக்கும்போது கவலை என்ன?

இப்போ பெட்ரோல் விலை குறைந்து வருகிறது. டாலருக்கு எதிரான ருபாயின் மதிப்பு நிலையாக இருக்கிறது. குறைஞ்சபோதும் ஒன்னும் பெரிசா இல்லை மூனு நாலு ரூபா தான். அது வர்த்தகத்திலே மிகவும் சாதாரணமான ஒன்று தான். அதுக்கு என்னாமா குதிச்சதுக. இப்போ சத்தத்தையே காணோம் ஏன்?

உள்நாட்டு உற்பத்தி அதிகரிச்சால் என்ன? வேலைவாய்ப்பு கூடினால் என்ன? முத்ரா கடனிலே ஒரு சதம் பேர் கடனை திருப்பி கட்டலை என்றூ தான் பெரிசா பேசுவேண்டும் இல்லையா? கவனிங்க 100 கடன் வாங்கினா 99 பேர் திருப்பி கட்டிடுறாங்க. ஒருத்தர் மட்டும் கட்டலை. உடனே முத்ராவிலே வாரக்கடனை உடனே கவனிக்கவேண்டும் என கூவல். உலக அளவிலேயே பத்து சதம் வரைக்கும் தள்ளுபடி உண்டு. இது மொத்த பண அளவிலே பார்த்தாலும் மிகவும் சிறியது தான். ஆயிரம் கோடியை கூட தாண்டாது.

சும்மா இந்தான்னு இருபதாயிரம் கோடி முப்பதாயிரம் கோடியை தூக்கி வீசும் வங்கிகள் இந்த மொத்தமா ஆயிரம் கோடியை தாட்ட முடியலைன்னு கண்ணீரு விடுறது அதை இந்த ரிசர்வ் பேங்க் கேக்குறதும் அவிங்க ஊதறதும் இவிங்க ஆடுறதும் அடேங்கப்பா.

கருப்பு பண ஊழல் வழக்கிலே குடும்பமே நீதிமன்றமாக அலைந்து கொண்டிருக்கும் பக்கோடா நிதியமைச்சராக இருந்த போது ரப்பர் ஸ்டாம்பை விட மோசமாக சொன்னதுக்கெல்லாம் கையெழுத்து போட்டுக்கொண்டிருந்த ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் சுயாட்சி பற்றி பேசுவது எல்லாம் காமெடி தான்.

2014 தேர்தலிலே தோற்ற பின்பு பெரிய பக்கோட அனுப்பிய தங்கம் இறக்குமதி உத்தரவுக்கு ஆலம்பனா நான் உங்கள் அடிமை என கையெழுத்து போட்ட கூலிப்படை தானே இந்த ரகுராம் ராஜன். அதிலே மட்டுமே ஒரு லட்சம் கோடி வரைக்கும் வரி வருவாய் இழப்பு என பின்பு நடந்த தணிக்கை அறிக்கை சொல்கிறது. அதை கண்டுபிடிக்கவே மோடி அரசுக்கு மூன்று மாதம் ஆகியது.

இதை விட கடனை திருப்பி கட்டாதவர்களின் பெயரை அறிவிக்கமுடியாது என உச்சநீதிமன்றத்துக்கு சொன்னவர் தானிந்த கூலிப்படை. உர்ஜித் படலே கூட்டி வந்த பின்பு அதுவும் திவால் சட்டம் எடுத்தவந்த பின்பே அதை அறீவிக்க ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டது.

இப்படி ஊழலுக்கு கருப்பு பண பதுக்கலுக்கும் ஒத்து ஊதிய துணை போன கூலிப்படைகள் எல்லாம் இப்போது அறிவுரை சொல்ல வந்திருக்கின்றன.

அதுவும் எப்போது எல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போது உடனே களமிறக்கப்படும்கள். என்னாமோ இந்த வித்தை எல்லாம் நமக்கு தெரியாதது போல.

இந்தியாவின் வளர்ச்சி குறைவுன்னு கூவுதே மூனு வருசம் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த போது என்ன வளர்ச்சி? அதுக்கு முன்னாடி மூனு வருசம் தலைமை பொருளாதார நிபுணர் ஆலோசகராக இருந்த போது என்னா ஆலோசனை சொல்லி வளர்ச்சியை தூக்கி நிறுத்தியது?

அப்போ மட்டும் அந்த பிரச்சினை உலக பிரச்சினை எல்லாம். அதை விட இப்போ உலக பிரச்சினை அதிகமாத்தான் இருக்கு. அதிலேயே இவ்வளவு வளர்ச்சின்னா எப்படி என்ன ஏதுன்னு யோசிக்கறத விட்டுவிட்டு நொட்டை சொல்ல மட்டும் வந்துட வேண்டியது.

மோடி இதுக்கெல்லாம் கவலையே படமாட்டார். சத்தீஸ்கரிலே நகர்ப்புற மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு கொடுக்கும் கான்கி களவாணிகளை தூக்கி எறியுங்கள் என சொல்லியிருக்கார். இன்று வாரணாசியிலே முதல் நீர்வழி சரக்கு போக்குவரத்தை துவக்கி வைச்சிருக்கார்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...