Tuesday, 13 November 2018

கங்கையில் வரும் கன்டைய்னர்கள்-

கங்கையில் வரும் கன்டைய்னர்கள்-

இந்தியாவின் முதல் தேசிய நீர்வழிச்சாலை
வழியாக கொல்கத்தாவில் இருந்து 16 கன்டைய் னர்களை சுமந்து கொண்டு நேற்று புறப்பட்ட
சரக்கு கப்பல் இன்று வாரணாசி க்கு வருகிறது
வாரணாசி எம்பி என்கிற முறையில் இதை வர
வேற்க காத்திருக்கிறார் மோடி.

ஒரு நல்லாட்சி இருந்தால்   கடல் வழியாக அல்ல
ஆற்றின் வழியாகவும் கன்டைய்னர்களை கொண்டு
வர முடியும் என்று கங்கையை கடலாக்கி காண்பி த்து இருக்கிறது மோடி அரசு.கிடப்பில் இருந்த 30 ஆண்டு தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தை மூன்றே ஆண்டுகளில் நிறைவேற்றி இருக்கிறார் மோடி.
என்றே கூற வேண்டும்.

உலகில் வளர்ந்த நாடுகள் எல்லாம் உள்நாட்டு போக்குவரத்து க்கு ஆறுகளின் வழியே ஏற்படு த்தப்பட்ட நீர்வழிச்சாலைகளையே பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியா நிலத்திலேயே சாலை
அமைக்க முடியவில்லை. நீரில் எங்கே சாலை
அமைக்க முடியும்?

அமெரிக்கா வில் நடைபெறும் சரக்கு போக்குவரத்
தில் 21 சதவீதம் உள்நாட்டு நீர் வழிச்சாலைகளின்
வழியாக நடைபெறுகிறது. ஆனால் இந்தியாவிலோ
0.1சதவீதம் அளவில் உள்நாட்டு நீர் வழிச்சாலை
களின் வழியே நடைபெறுகிறது..

கேரளா கோவா அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில்
குறைந்த அளவில் உள்ள ஆற்று வழிச்சாலைச்
களில்  போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்தியா வில் உள்நாட்டு நீர்வழிச்சாலையை
மேம்படுத்தி அதன் வழியாக போக்குவரத்தை அதிகப்படுத்த Inland water authority of India என்கிற
ஒரு துறையை 1986 ல் உருவாக்கியது.

இந்த டிபார்ட்மெண்ட்  அதிகாரிகள் நொய்டாவில்
அமர்ந்து கொண்டு தேசிய நீர்வழிச்சாலை-1 கங்கை நதிவழியாக அலகபாத் டூ ஹால்டியா உத்தரபிரதேச
ம் பீகார் ஜார்கண்ட் மேற்கு வங்காள ம் என்று
நான்கு மாநிலங்களையும்  இணைக்கும் வகையில்
1620 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீர்வழிச்சாலை
அமைக்கும் திட்டத்தை டிராயிங் வரைந்து எஸ்டிமேட்
போட்டு அரசுக்குஅனுப்பி விட்டு டீ காபி டிபன் சாப்பி ட்டுக்கொண்டேஎப்படி ஆரம்பிக்கலாம் எங்கிருந்து ஆரம்பிக்கலாம்என்று விவாதித்து கொண்டே இருந் தார்கள்

இந்த டிராயிங்கை பார்த்து விட்டு டெல்லியில்
இருக்கும் நீர்வளத்துறை அமைச்சக அதிகாரிகள்
தந்தூரி சிக்கனை சாப்பிட்டுக்கொண்டே  எஸ்டி மேட்
அதிகமாக இருக்கிறதே அடுத்த வருடம் பார்ப்போம் என்று ஓரங்கட்டி வைத்துக் கொண்டே இருந்தார்கள்.

சும்மா இல்லீங்க..சுமார் 25 வருசமா இந்த பிராஜெ க்ட்டை ஆரம்பிக்க முடியாமல் இந்திய அரசுகள்
ஓரம் கூட்டியே வைத்து இருந்தார்கள். நிலத்திலேயே
சுதந்திர ம் வாங்கி 50 வருடம் கழித்து தான் இந்த யாவில் வாஜ்பாய்பிரதமராக வந்த பிறகு தான் நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டு தரைவழிப்
போக்குவரத்து மேம்படுத்தப் பட்டது

நிலவழிச்சாலை அமைக்கவே 50 வருடம் என்றால்
நீர்வழிச் சாலை  என்றால் கேட்கவா வேண்டும்.
ஓரங்கட்டி யே வைத்து இருந்தார்கள். 2014 ல் மோடி
வந்த பிறகு தூசி தட்டி எடுக்கப்பட்ட து தேசிய நீர்வழி ச்சாலை-1 திட்டம்.முடங்கி ப்போன திட்டத்தை  5,369 கோடி ரூபாய் மதிப்பில் உயிர் கொடுத்த மோடி  உத்தரபிரதேச ம் பீகார் ஜார்கண்ட்மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநில முதல்வர்களையும் டெல்லி க்கு வரவைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்பு
வேண்டும் என்றார்..

இதன் படி வாரணாசி காசிபூர் பலியா  ஆகிய
உத்தரபிரதேச த்தில் உள்ள நகரங்கள் புக்சர்
சாப்ரா வைஷாலி பாட்னா பெகுசரை காகரியா
முங்கர்,பாகல்பூர் ஆகிய பீகார் மாநில நகரங்கள்
சகிப்கஞ் என்கிற ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள
நகரம் முர்சிதாபாத் பாகுர் ஹூக்ளி மற்றும் கொல்க த்தா ஆகிய மேற்கு வங்காள நகரங்களில் கங்கை
நதி கரையோர மாக மல்டி மாடல் துறைமுகங்களை
உருவாக்கி சரக்கு போக்குவரத்து ரோல் இன் ரோல்
ஆப் அதாவது ரோரோ போக்குவரத்து என்றுகங்கை
நதியிலே இந்தியாவின் முதல் நீர் வழிச்சாலை
வழியாக  போக்குவரத்தை துவங்கி வைக்கிறார்
மோடி

அதிலும் இந்த ரோரோ போக்குவரத்து இருக்கிறது
அல்லவா.. அது மிக அருமையானது.கொல்கத்தா
வில் இருந்து ஒருவர் காசிக்கு வந்து அங்கு திதி கொடுக்க வேண்டும் என்றால் சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவிற்கு NH-19 வழியாக குறைந்தது 12
மணி நேரம் காரை ஓட்டிக் கொண்டு வரவேண்டும்.

ஆனால் இந்த ரோரோ சர்வீஸ் என்ன செய்கிறது
என்றால் அவர் காரோடு கொல்கத்தா துறை முக
த்தில் நிற்கும் கப்பலில் ஏறி உட்கார்ந்து கொண்டால்
போதும் கங்கை வழியாக வாரணாசிக்கு கொண்டு
வந்து விட்டு விடுவார்கள். அவர் வாரணாசி
துறைமுகத்தில் காரோடு இறங்கி காரியம் முடிந்த
பிறகு வாரணாசி யை ஒரு ரவுண்ட் அடித்து விட்டு
அடுத்த கப்பலில் காரோடு ஏறி கொல்கத்தா போய்
சேர்ந்து விடலாம்.

இப்படி உத்தரபிரதேச ம் பீகார் ஜார்கண்ட் மேற்கு
வங்காள ம் ஆகிய நான்கு மாநில மக்கள் ரோரோ
சர்வீஸ் மூலமாக கங்கை ஆற்றின் வழியாக தேசிய நீர்வழிச்சாலை-1 வழியாகபயணம் செய்ய ஆரம்பித்
தால் பெட்ரோல் டீசல் பயன்பாடு குறைவதோடு
தரைவழிப்போக்கு வரத்தின் மூலமாக உண்டாகும்
காற்று மாசுபடுதலும் குறைய ஆரம்பிக்கும்.

அது மட்டுமல்லாது ஆறுகளை தொடர்ந்து பயன்
பாட்டில் வைத்து இருப்பதால் எப்பொழுதும் நீரோட்டம் இருந்து கொண்டே இருக்கும். இதனால்
நீர்வழிச்சாலையில் உள்ள நகரங்களில் நீர்மட்டம்
குறையாமல் நிலைத்து இருந்துக்கொண்டே இருக் கும்..இது தாங்க அடுத்த தலைமுறை மட்டுமல்ல
பல தலைமுறை களை பஞ்சம் பட்டினி இன்றி
வாழ வைக்கும் தொலை நோக்கு திட்டம்.

இந்த தேசியநீர் வழிச்சாலை-1 முழு அளவில் முடிந்த
பிறகு 46,000 பேருக்கு அரசு நேரடியான வேலை
வாய்ப்பும் 84,000 பேருக்கு  மறைமுக வேலை
வாய்ப்பு ம் கிடைக்கும். இந்த தேசிய நீர்வழிச்சாலை யில் உள்ள அனைத்து நகரங்களிலும் துறைமுகங்
கள் கட்டப்பட்டு முழு அளவில் பயன் பாட்டுக்கு வர
இன்னும் நான்கு ஆண்டுகள் ஆகும்.

பாருங்கள் எவ்வளவு சூப்பர் திட்டம்.. இதை எல்லாம்
பணம் இல்லை என்று கூறி ஒதுக்கி வைத்து ஊழல் செய்து கொள்ளை அடித்து க்கொண்டு இருந்த
காங்கிரஸ் திருட்டு கூட்டத்திடம் மீண்டும் நாட்டைக்
கொடுக்க நினைக்கும் போராளிகளை என்னவெ ன்று சொல்வது?

இது ஏதோ கங்கையில் மட்டும் கப்பலை விட்டு
விட்டு காணாமல். போகும் திட்டம். அல்ல. மோடி
அரசு வாரணாசி டூ கொல்கத்தாவிற்கு தேசிய
நீர்வழிச்சாலை-1 ல் கப்பல் விட்ட மாதிரி இந்தியா
முழுவதும் 111 நீர்வழிச்சாலைகளை அமைக்க
திட்டம் உருவாக்கியுள்ளார்கள்.

இதில் சுமார் 15 நீர்வழிச்சாலை  அமைக்கும்
வேலை கள் நடைபெற்று வருகிறது. இதில்
முக்கியமானது அஸ்ஸாமில்  பிரம்ம புத்திரா ஆற்றில் 891 கிலோ மீட்டர் தொலைவிற்குசடியா டூ துப்ரி இடையே  உருவாகி வரும்நீர்வழிச்சாலை-2
அடுத்து கேரளாவில் கொல்லம் டூ கோழிக்கோடு
வரை உள்ள 365 கிலோ மீட்டர் தொலைவில்
வெஸ்ட் கோஸ்ட் கால்வாய் சம்பக்காரா உத்யோக்
மண்டல் கால்வாய்களை இணைத்து உருவாகும்
தேசியநீர்வழிச்சாலை-3

அடுத்து ஆந்திரா தெலுங்கானா தமிழ்நாடு ஆகிய
மூன்று மாநிலங்களை யும் இணைக்கும் வகையில்
1095 கிலோ மீட்டர் தொலைவிற்கு கோதாவரி கிருஸ்ணா ஆற்றின் இணைப்பு வழியாகஉருவாகும்
தேசிய நீர்வழிச்சாலை-4  என்று பல நீர்வழிச்சாலை
களைசுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு உருவாக்கி அதன் மூலம் நதி நீர் இணைப்பை
சாத்தியமாக்க நினைக்கிறார் மோடி.

தமிழ் நாட்டில் மட்டும் தேசிய நீர்வழிச்சாலை-4
13 ,20, 55, 69, 75, 77, 80 ,99, 107  என்று பத்து நீர்
வழிச்சாலை கள் உருவாக்க திட்டம் போட்டுள்ளார்
கள்.இவை எல்லாம் முழுமையாக நிறைவேற உத் தேசமாக 15-20 வருடங்கள்ஆகலாம் என்று நினை த்தால் கூட 2040 ஜ தொட்டு விட வாய்ப்புகள் உள்ளது.இது நிறைவேறினால் இன்னும் 20
ஆண்டுகளில் தமிழ்நாடு பாலைவன மாகி விடும்
என்று பயம் காட்டிக் கொண்டு இருப்பவர்களுக்கு
வேலை இல்லாது போய் விடும்

ஆனால் இது நிறைவேற வேண்டும் என்றால்
மோடி ஆட்சியில் இருக்க வேண்டும் .இல்லை
என்றாலும் பிஜேபி ஆட்சியில் இருக்க வேண்டும்
மோடியும்  இருப்பார் பிஜேபி யும் ஆட்சியில்
இருக்கும்.. ஏனென்றால் இது கடவுளின் கட்டளை.

.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...