தமிழா!தமிழா!
//////நடப்பாண்டில் 32 லட்சம் பெட்டிகள்- ஒரு பெட்டிக்கு 32 பாட்டில்கள் - இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது பானங்களும் (IMFL), 65 லட்சம் பீர் பெட்டிகள், ஒரு பெட்டிக்கு 12 பாட்டில்கள்- விற்பனையாகியுள்ளன.தீபாவளி மது விற்பனை குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாக நாளிதழ் ஒன்றில் இன்று வெளியான செய்தி./////
வெளிவராத செய்தி :
டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட, ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும் அதிகமாக பெறப்படும் லஞ்சம் ரூபாய் 10 /-. 32 லட்சம் பெட்டிகள் * 32 பாட்டில்கள் - மொத்தம் -10 கோடியே 24 லட்சம் பாட்டில்கள். அதாவது ரூபாய்.102 கோடியே 40 லட்சம். மேலும், 65 லட்சம் பீர் பெட்டிகள் * 12 பாட்டில்கள் அதாவது 7 கோடியே 80 லட்சம் பீர் பாட்டில்கள். ஒவ்வொரு பீர்பாட்டிலுக்கும் பெறப்பட்ட லஞ்சம் சராசரியாக ரூபாய் 10/- என்றால் 78 கோடி. ஆக மொத்தம் லஞ்சமாக மட்டும் 102 கோடியே 40 லட்சம் மற்றும் 78 கோடி பெறப்பட்டுள்ளது .
ஆக மொத்தம் டாஸ்மாக் மூலம் மக்களால் அளிக்கப்பட்ட லஞ்சத்தொகை 180 கோடியே 40 லட்சம்.
உடல் மண்ணிற்கு. உயிர் தமிழுக்கு என்ற நிலை மாறி,
உடல் டாஸ்மாக்கிற்கு. உயிர் அரசியல்வாதிகளுக்கு என்றானதே!
தமிழா!தமிழா!
நாராயணன் திருப்பதி.
No comments:
Post a Comment