Tuesday, 13 November 2018

தேவாங்கர்கள் தமிழ் நாட்டிற்கு வந்த விபரம்

தேவாங்கர்கள் தமிழ் நாட்டிற்கு வந்த விபரம்

தேவாங்கர் என்பவர்கள் ஆதியில் சகரநாடு எனப்படும் காசி பகுதியில் சமஸ்கிருதத்தை தாய் மொழியாகக் கொண்டு வசித்து வந்தனர்.

பின்பு ஹம்பி பகுதியை அடுத்த மன்னர் ஆணைக் கொந்தி மகாராஜா வீரப்பிராதாப ராய் [கி.பி.1336] ல் விஜய நகர சாம்ராஜ்யம் ஏற்படுவதற்கு முன் காசி பகுதியில் இருந்து தேவாங்கர்களை அழைத்து வந்து வேண்டிக் கொண்டதின் பேரில், அவரது வேண்டுகோளுக்கு இணங்க இராச குருவாக இருந்து நல்வழி காட்டி நடத்திச் சென்றனர். பின்னர் வம்சம் பெருகியது இந்நிலையில் ஹம்பியைத் தலை நகராகக் கொண்ட விஜயநகர சாம்ராஜ்யம் பரந்து விரிந்து செயல் பட்டது.

அந்த விஜய நகர சாம்ராஜ்யத்தின் மேற்கு பகுதியில் தற்போதைய கர்நாடகத்தின் ஒரு பகுதி கன்னட மொழியும் கிழக்கு பகுதியில் தற்போதைய ஆந்திரத்தின் ஒருபகுதி தெனாலிவரை தெலுங்கு மொழியும் பேசி வந்தனர். இவர்கள் பிறசமயங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்திற்குள் நுழையாமல் இந்து மதத்தையும், இந்து தர்மத்தையும் கட்டிக்காத்தனர்.

பின்னர் கி.பி.1565 ல் விஜயநகரப் பேரரசின் கடைசி மன்னன் ராமராயர் காலத்தில் பாமினி சுல்தான்கள் ஐவரும் சேர்ந்து படையெடுத்ததில் விஜயநகரத்துப் படைகள் தோற்றுப் போயின. ஹம்பி நகருக்கு பேரழிவு நேர்ந்தது.

இந்து சமயத்தைக் கட்டிக் காத்துவந்த தேவாங்க பிராமணர்கள் உயிருக்கு பயந்து, ஒரு பகுதியினர் பெங்களுர் வழியாக வந்தனர். ஒரு பகுதியினர் தாராபுரம் வரை வந்து தங்கி, பின்னர் மேலும் பிழைப்புக்கு வழி தேடி மதுரை முதலான தென் தமிழ் நாடு வரை வந்து  விட்டனர். மற்றொரு பகுதி மைசூர் வழியாக திம்பம் மலைமீதும் பன்னாரி கோபி செட்டி பாளையம், சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும் வந்து தங்கி அப்படியே நிலைத்து விட்டனர். மிகச் சிறிய பகுதியினர் தற்போதைய கேரளாவில் கோயம்புத்தூரிலிர�

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...