Tuesday, 13 November 2018

பட்டேல் சிலை 3000கோடி,

*இந்தப் பக்கம்

பட்டேல் சிலை 3000கோடி,

அந்தப் பக்கம் சில ஏழ்மை ததும்பி வழியும்   குடிசை (வழக்கம் போல போலியான) படங்களைப் போட்டு மீண்டும் ஒரு மதமாற்ற மிஷநரி மீமிஸ்..சிலை தேவையா என்று....*

தேசத்தின் பெருமிதம் நாட்டு மக்களின் பெருமிதம். அதற்கெல்லாம் செலவு என்ற அளவு கோல் பார்ப்பது சரியாக இருக்காது. கிறிஸ்டின் ஏகாதிபத்தியம் வந்த பிறகு தான் இந்தியா என்ற அமைப்பே உருவானது என்று எவனாவது கரடி விட்டால் அதை நம்பாதீங்க.
சுதந்திரம் என்ற பெயரில் நாட்டைக் கிழித்துப் போட்டது போக, போகிற போக்கில் அந்த "நாய சூ ன்னு பத்திட்டு போ" ன்ற மாதிரி, 560 சமஸ்தான ங்களை "அவர்கள் இஷ்டம்(!) போல யாருடனும் இணைந்து கொள்ளலாம் அல்லது சுதந்திரமாக இருக்கலாம்'' என்று பற்ற வைத்து விட்டுத் தான் போனான்.இது போதாதா, ஆளாளுக்கு நான் ராஜா, நீ இந்தியா, நான் பாகீஸ்தான் ஏகப்பட்ட கூவல்கள். வேறு எந்த நபரும், உதாரணமாக இன்னும் தீராத காஷ்மீர் இணைப்பை கையாண்ட நம்ம மாமா நேரு இந்த மாபெரும் சமஸ்தான இணைப்புப் பொறுப்பை  கையில் எடுத்து இருந்தால் என்ன ஆகி இருக்கும்...?!
சும்மா கற்பனை மட்டும் செய்து பாருங்கள்....நல்ல வேளை கடவுள் நம்ம பக்கம் இருக்கிறார்.

அதன் பிறகு நடந்தது தான் பட்டேல் ன் இராஜ சாதுர்யமான "560 சமஸ்தான இணைப்பு
கள் to இன்றைய இந்தியா" நடவடிக்கை.நிச்சயமாக இது ஒரு ஆகச்சிறந்த ஆளுமை நிறைந்த நிர்வாகத் திறமை. அப்பழுக்கற்ற தேசப்பற்று தான் படேலுக்கு அத்தகைய உத்வேகம் தந்தது.தேச ஒற்றுமை பேசும் எதுவுமே இந்த மதமாற்ற பிரிவினைவாத அமைப்பு களுக்கு ஒவ்வாமை தரும் விஷயம் தான். இந்தியா என்ற இந்த தேசத்தின்  இறுக்கமான கட்டமைப்பையும், அதனுள் இணைந்துள்ள பல்வேறு மாநில மக்களின் ஒருமித்த தேசிய உணர்வின் குரலையும் இனி இந்த இரும்புச் சிலை மௌனமாகப் பேசிக்கொண்டே இருக்கும்.அரபுக் கடலைப் பார்த்து உயர்ந்து நிற்கும் அந்த ''ஒற்றுமைச் சிலை" யின் உக்கிரமான மௌனம்  பிரிவினைவாத அமைப்புகளுக்கு வெளியே சொல்லவும் முடியாத, முழுங்கவும் முடியாத  அவஸ்தை. "இந்தியா ஒரு இணைந்த தேசம் அல்ல" என்று பிரிவினைப் பொங்கல் வைக்கும் மதமாற்றச் சில்லறை களுக்கு, இந்த 183மீட்டர் இரும்புச் சிலை, இனி உளவியல் ரீதியாக, சித்தாந்த ரீதியாக மாபெரும் இம்சை தரும் குறியீடாக அமைந்தே விட்டது.அதனால் தான் எதை எதையோ சொல்லி இந்தியாவை ஒருங்கிணைத்த படேலின் இந்தச் சிலைக்கு ஒரு நெகட்டிவ் இமேஜை உருவாக்கும் முயற்சியில் இந்த மதமாற்றப் பிரிவினை வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அன்று படேலின் அந்த வரலாற்று சிறப்பு மிக்க சமஸ்தான இணைப்புப் போராட்டம் தான் இன்று கடைந்து எடுத்த போலி மதசார்பின்மை அரசியல் எல்லாம் வெற்றிகரமாக தாண்டி 'இந்து' தேசிய வாதி கள் எல்லாம் ஆட்சிக்கு வந்து மதமாற்ற மிஷநரி ஜிஹாதி களுக்கு பெருத்த இம்சையை(!!) கொடுத்து வர முக்கிய காரணம்.
எனவேதான் மோடி போன்ற தேசத்தின் நலனை மட்டுமே கருத்தில் வைத்திருக்கும் "நீச மனிதனுக்கு" (நன்றி: காங்கிரஸ்) படேல் எனும் மாபெரும் மனிதருக்கு சிலை வைக்க, அதற்கு 'ஒற்றுமையின் சிலை~' என்ற பெயரை காரணம் கருதி வைக்க வேறொரு காரணம் தேவையே இல்லாமல் போனது.
ஶ்ரீ

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...